![]() |
1- A / An - ஒரு
Moon has an umbrella.
நிலவிடம் ஒரு குடை உள்ளது.
2- Able - திறன் உள்ள
He is able to
solve it easily.
அவரால் அதை சுலபமாக தீர்க்க முடிகிறது.
3- About - பற்றி
We will talk
about it later.
நாம் அதைப் பற்றி பிறகு பேசலாம்.
4- Above - மேலே
The bird flew
above my head .
பறவை எனது தலைக்கு மேலே பறந்தது.
5- Accept - ஏற்றுக்கொள்
They accepted the
money.
அவர்கள் அந்தப்
பணத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
6- Accident - விபத்து
He met with an
accident yesterday.
அவர் நேற்று ஒரு விபத்தில் சிக்கினார்.
7- Account - கணக்கு
I have some
money in my bank account.
எனது வங்கி கணக்கில் கொஞ்சம் பணம் உள்ளது.
8- Act - நடி
/ சட்டம்
He acted well in
that movie.
அவர் அந்தப் படத்தில்
நன்றாக நடித்தார்.
9- Action - செயல்
Quick action is
needed at this moment.
இந்தத் தருனதில் விரைவான செயல்
தேவைப்ப்டுகிறது.
10- Add - சேர்
Always add good
things in your life
நல்ல விசயங்களை எப்போதும் உன் வாழ்வில் சேர்த்துக்கொண்டே
இரு.
11- Address - முகவரி
I don’t know about
his address
அவரது முகவரி பற்றி எனக்குத் தெரியாது
12- Adult - பெரியவர்
Only adults can
vote in our nation
பெரியவர்கள் மட்டுமே நமது நாட்டில் வாக்களிக்க முடியும்.
13- Advice - ஆலோசனை
His advice was
very useful for me.
அவரது ஆலோசனை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
14- Afraid - பயம்
Don’t afraid of
failures.
தோல்வியைக் கண்டு பயப்படாதே .
15- After - பிறகு
We will play
after finishing this work .
இந்த வேலையை முடித்த பிறகு நாங்கள் விளையாடுவோம்
16- Again - மீண்டும்
Do it again and
again.
அதை மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.
17- Age - வயது
What is your
age now?
இப்பொழுது உங்களது வயது என்ன?
18- Ago - முன்பு
He left an hour
ago from here.
அவர் இங்கிருந்து ஒரு மணி நேத்திற்கு முன்பாக
சென்றார்.
19- Agree - ஒப்புக்கொள்
I agree with
your opinion.
நான் உங்கள் கருத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.
20- Air - காற்று
We can’t survive
without air.
காற்று இல்லாமல் நம்மால் உழிர் வாழ நுடியாது.
21- Aim - இலக்கு
Our aim must be
always big.
நமது இலக்கு எப்போதும் பெரிதாக இருக்கவேண்டும்.
22- All - அனைத்தும்
All are equal
in this world.
இவ்வுலகில் அனைவரும் சமமானவர்கள்.
23- Allow - அனுமதி
They allowed me
to sing.
அவர்கள் என்னை பாட அனுமதித்தனர்.
24- Almost - கிட்டத்தட்ட
I almost finished
it.
நான் கிட்டத்தட்ட அதை முடித்துவிட்டேன்.
25- Alone - தனியாக
He lived alone
on an island.
அவன் ஒரு தீவில் தனியாக வாழ்ந்தான்.
26- Along -
சேர்த்து
We Walked along
the road.
நாங்கள் சாலையில் நடந்து சென்றோம்.
27- Alive
- உயிருடன்
The peacock is
alive now.
மயில் இப்பொழுது உயிருடன் இருக்கிறது.
28- Already - ஏற்கனவே
We already met
him.
நாங்கள் ஏற்கனவே அவரைப் சந்தித்துவிட்டோம்.
29- Also - மேலும் / கூட
I also like biryani.
நான் கூட பிரியாணி விரும்புகிறேன்.
30- Always -எப்போதும்
She is always
late to office.
அவள் எப்போதும் அலுவலகத்திற்கு தாமதமாக வருகிறாள்.
31- Among - மத்தியில் / இடையில்
Please share
among friends.
தயவுசெய்து நண்பர்கள்
மத்தியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
32- Amount - அளவு / தொகை
He has a big
amount.
அவர் ஒரு பெரும் தொகையை வைத்துள்ளார்.
33- Angry - கோபமான/சினமான
She is angry at
them.
அவள் அவர்கள் மீது கோபமாக இருக்கிறாள்.
34- Animal - விலங்கு
We should not
hurt animals.
நாம் விலங்குகளை துன்புறுத்தக் கூடாது.
35- Anger - கோபம்
Control your
anger.
உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்
36- Answer - பதில்
Don’t forget to
answer.
பதில் அளிக்க மறந்து விடாதே.
37- Any - எந்த / ஏதேனும்
Do you have any
plan now?
உங்களிடம் இபோது ஏதேனும் திட்டம் உள்ளதா?
38- Appear - தோன்று
Stars appear at
the sky.
வானில் நட்சத்திரங்கள்
தோன்றும்.
39- Apple - ஆப்பிள்
Try to eat an
apple daily.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட முயற்சி செய்.
40- Area - பகுதி / பரப்பு
This area is very
safe to live.
இந்த பகுதி வாழ மிகவும் பாதுகாப்பானது.
41- Arm - கை
His arm is
clean and strong.
அவரது கை சுத்தமாகவும் பலமாகவும் உள்ளது.
42- Arrive - வந்து சேரும்
They will
arrive soon to home.
அவர்கள் விரைவில் வீட்டிற்கு வ்ந்துசேர்வார்கள் .
43- Art - கலை
She loves painting
art very much.
அவள் ஓவியக் கலையை மிகவும் விரும்புகிறாள்.
44- Ask - கேள்
Don’t ask
useless questions.
தேவை இல்லாத கேள்விகளைக் கேட்காதே.
45- Aunt - அத்தை/மாமி / சித்தி
My aunt is a
doctor.
என் சித்தி ஒரு மருத்துவராக இருக்கிறார்.
46- Author -எழுத்தாளர்
I want to
become an author.
நான் ஒரு எழுத்தாளராக வர
விரும்புகிறேன்.
47- Avoid - தவிர்
Avoid bad
people in your life.
உன் வாழ்க்கையில் தீய மனிதர்களை தவிர்க்கவும்.
48- Away - தொலைவில் / அப்பால்
He is away from
us.
அவர் எங்களிடம் இருந்து தொலைவில் உள்ளார்.
49- Awful - பயங்கரமான / மோசமான
I heard that
awful news last night.
நேற்றிரவு அந்த மோசமான செய்தியைக் கேட்டேன்.
50- Axe - கோடரி
He is
sharpening his axe.
அவர் அவரது கோடரியை கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்.
51- Ant - எறும்பு
We must be active
like an ant.
நாம் எறும்பைப் போல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்
Also learn daily use english sentences with tamil meanings click Here
0 Comments