தமிழ்நாடு பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் / ஏப்ரல் 2023 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியும் இணையதள முகவரியும் வெளியீடு.
மார்ச் / ஏப்ரல் - 2023-ல் நடைபெற்ற 2022-2023 ஆம் கல்வியாண்டிற்காண பத்தாம் வகுப்பு ( SSLC / 10TH ) மற்றும் மேல்நிலை முதலாம் ( 11th / HSC -I YEAR / +1 ) பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) அன்று வெளியிடப் படவுள்ளது.
வகுப்பு |
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் |
இணையதள முகவரி |
பத்தாம் வகுப்பு ( 10th / SSLC ) |
19.05.2023 ( வெள்ளிக்
கிழமை ) காலை 10.00 மணிக்கு
|
|
மேல்நிலை முதலாம்
ஆண்டு
( +1 / 11th / HSC – 1 YEAR ) |
19.05.2023 ( வெள்ளிக்
கிழமை ) பிற்பகல் – 2.00
மணிக்கு
|
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண்
( REGISTER NUMBER ) மற்றும் பிறந்த தேதி ( DATE OF BIRTH )ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் ( NATIONAL INFORMATICS CENTRES ) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டிறுக்கிறது.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு( REGULAR SCHOOL STUDENTS ) அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கப்பேசி எண்ணிற்கும் ( MOBILE NUMBER ) தணித்தேர்வர்களுக்கு ( PRIVATE CANDIDATES ) ஆன் - லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி ( MESSAGE )வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
CHECK YOUR 10TH RESULT AT MORNING 10.00 AM
CHECK YOUR 11TH RESULT AT 2.00 PM
DEAR STUDENTS PLEASE NOTE : தேர்வில் வெற்றிபெற்று மாணவர்கள் அனைவரும் அடுத்த உயர் வகுப்பில் நல்லமுறையில் இணைந்து கல்வி கற்றிட வாழ்த்துக்கள். அத்துடன் ஒருவேளை ஒரு சில மதிப்பெண்களிலோ அல்லது ஒரு சில பாடங்களிலோ தவரும் பட்சதில் அதர்காக அனைத்தும் முடிந்துவிட்டதாக கருதாமல். இது வெறும் ஒரு தேர்வு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அத்துடன் இதுபோல் அடுத்துவரும் தேர்வுகளில் பங்கேற்று நல்லமுறையில் எழுதி மேற்ப்படிப்பை நல்லமுறையில் தொடரலாம் என்பதனையும் நினைவில் வைக்கவேண்டும் அன்பு மாணவர்களே. அத்துடன் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதனையும் புரிந்துக் கொள்ளுங்கள். பிறருடன் உங்களை ஒப்பிடுவதோ அல்லது, பிறர் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு வீனாக நேரத்தை வீண் செய்வதோ இல்லாமல். உங்கள் மீது முழு நம்பிக்கையுடன் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம் உங்கள் வசம் இருக்கும். அவ்வெற்றி இன்றும் கிடைக்கலாம் அல்லது நாளையும் கிடைக்கலாம் , என்று கிடைத்தாளும் வெற்றி வெற்றியே .
உங்களை மனதார வாழ்த்தும் ; BOSS & BRIGHTBOARD.NET -TEAM
0 Comments