9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களுக்கு புத்தாக்க ( REFERESHER COURSE MODULE ) பயிற்சி கையேடு வெளியிடப்பட்டுள்ளது | brightboard.net
Refresher Course Module |
உலகம் முழுவதும் நிலவிவரும் பெருந்தொற்றான கொரோனா பாதிப்பின் காரணமாக ஓராண்டிற்கும் மேலாக தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு முழுமையாக வகுப்புகளை நடத்த முடியவில்லை.
2021-2022 ஆம் கல்வியாண்டு தொடங்கி ஏறக்குறைய 3 மாதங்கள் கடந்து விட்டன. மாணவர்களுக்கு அதற்கான பாடங்களை நடத்த முடியாததால் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் கற்பிக்கும் பொருட்டு பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் எவ்வாறு புத்தாக்க வகுப்புகளை நடத்த வேண்டும் என்று திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுபற்றிய விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். அனைத்து தலைமை கல்வி அதிகாரிகளும் இதை கண்காணித்து செயல்படுத்த வேண்டும். முன்னுரிமை பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். போட்டி தேர்வுகளுக்கு இதை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களே தன்னிச்சையாக தயாராகி கொள்ள வேண்டும்.
புத்தாக்க பயிற்சி , மாணவர்கள் தற்போது பயில்கின்ற வகுப்புக்கு முந்தைய 2 வகுப்புகளின் பாடங்களின் அடிப்படையில் 45 முதல் 60 நாட்களுக்கு கற்றுத்தரப்படும். பயிற்சி நிறைவு பெற்றவுடன் மாணவர்கள் கற்ற பயிற்சி கையேட்டினை அடிப்படையாக வைத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள பயிற்சி கட்டகங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.
தற்போது ஆங்கிலம் பாடத்திற்கு மட்டுமான பயிற்சி கையேடுகள் வெளியிடப் பட்டுள்ளன மற்ற பாடங்களுக்கான பயிற்சி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும்.
REFRESHER COURSE MODULE FOR ENGLISH
9th std Refresher Course Module - Download Here
10th std Refresher Course Module - Download Here
11th std Refresher Course Module- Download Here ( Soon)
12th std Refresher Course Module - Download Here
0 Comments