தமிழக அரசின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையில் 13 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட அனைத்துக் கட்சி குழுவானது உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினையும் அதன் பரவலையும் கட்டுப்படுத்த தமிழக அரசானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் வேகத்தைக் குறைக்கவும் அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு பல்வேறு கட்டுப்படுகளுடன் கூடிய ஊரடங்கு ஆனது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் கொரோனாவை விரைந்து கட்டுப்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவினை அரசிற்கு ஆலோசனை வழங்குவதற்காக தமிழக முதல்வரின் தலைமையில் ஒரு குழுவை உருவாக்கியுள்ளது.
இக்குழுவானது கொரோனாவினைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
தமிழக அரசுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளும்.
இந்த கொரோனோ கட்டுப்பாட்டு குழுவின் உறுப்பினர் செயலராக பொதுத்துறை செயலாளர் செயல்படுவார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 13 சட்டமன்ற உறுப்பினர்களின் விவரம் அவர்கள் சார்ந்த கட்சிபெயர்களுடன்.
தலைமை : மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
திரு.நா . எழிலன் ( திமுக)
திரு. விஜயபாஸ்கர் ( அதிமுக)
திரு. முனிரத்தினம் ( காங்கிரஸ் )
திரு.ஜி.கே.மணி ( பாமக)
திரு. நயினார் நாகேந்திரன் ( பாஜக )
திரு. சதன் திருமலைக்குமார் ( மதிமுக )
திரு.எஸ்.எஸ்.பாலாஜி ( விசிக )
Also Read : தமிழக அமைச்சர்கள் பட்டியல் 2021
திரு. நாகை மாலி ( மார்க்சிஸ்ட் )
திரு. ராமச்சந்திரன் ( இந்திய கம்யூனிஸ்டு )
திரு.ஜவாஹிருல்லா ( மமக )
திரு.ஈஸ்வரன் ( கொ.ம.தே.க )
திரு.வேல்முருகன் ( த.வா.க. )
திரு.பூவை ஜெகன் மூர்த்தி ( புரட்சி பாரதம் )
இந்த அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனை குழுவானது தமிழக அரசிற்கு குருநாதா தடுப்பு நடவடிக்கைகள் தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது கூடி ஆலோசித்து வழங்கும்.
0 Comments