MORAL STORIES IN TAMIL FOR KIDS :
CUNNING ROOSTER AND THE INNOCENT
DUCKS
சதிகார சேவலும் ஏமாளி
வாத்துகளும்
சதிகார சேவலும் ஏமாளி வாழ்த்துக்களும் - Cunning Rooster And The Innocent Ducks! என்கிற இந்த சிறுவர்களுக்கான ( Stories In Tamil With Moral Value ) தமிழ் கதை மிகவும் ஆர்வமூட்டுவதாகவும் இதைப்படிக்கும் சிறுவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் நல்ல நன்னெறி சிந்தனைகளை வழங்கும். அதோடு இந்த கதையில் விலங்கு மற்றும் பறவைகள் பயன்படுத்தப் படுவதால் அதனை புரிந்துகொள்வதற்கும் ஆர்வமுடன் கதையினை படிக்கவும் அதில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழவும் வழிவகை செய்யும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.( This Story Is Original Creation Of brightboard.net- Moonboss Team )
சதிகார சேவலும் ஏமாளி
வாத்துகளும் - நன்னெறி கதை
ஒரு அழகான மலையடிவாரத்தை ஒட்டிய ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பாட்டி தனியாக வாழ்ந்து வந்தார்கள். ஊரில் இருந்த சிலர் அவ்வப்போது பாட்டிக்கும் உதவி செய்தனர், பாட்டிக்கும் உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத காரணத்தால் அவர்களுடைய வீட்டில் இரண்டு வாத்துக் குஞ்சிகளையும்,ஒரு சேவலையும் தன்னுடைய பிள்ளைகளை போல வளர்த்து வந்தார.அவர் வீட்டில் இருக்கும் பொழுது அவைகளை நன்றாக பார்த்துக் கொண்டார்,அவ்வப்போது எங்கேயாவது வெளியே வேலைக்கு செல்லும் பொழுது சேவல் வாத்துகளை விட சற்று பெரிதாக இருந்ததால் சேவலிடம் இரண்டு வாத்துக் குஞ்சுகளையும் பத்திரமாக பார்த்துக்கொள் நீயும் பத்திரமாக இரு என்றும் சொல்லிவிட்டுச் செல்வார்கள். அந்த சேவலும் வாத்துக் குஞ்சுகளை பத்திரமாக பார்த்துக் கொண்டு அவர்கள் வீட்டின் அருகிலேயே மேய்ந்து கொண்டு இருப்பார்கள்.
நாட்கள் செல்லச் செல்ல சேவலும் நன்றாக வளர்ந்து விட்டது அதேபோல் வாத்து குஞ்சுகளும் நன்றாக வளர்ந்துவிட்டன. சில வேலைகளில் சேவலானது அது சொல்லும் பேச்சை வாத்துகள் கேட்க வேண்டும் என்று அதனை இங்கே வா அங்கு போ இதைச் செய்,அதைச்செய் என்றெல்லாம் ஏதாவது ஒருவிதத்தில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த வாத்துகளும் சேவலின் சொல்படி நடந்து கொண்டே இருந்தன எப்பொழுதாவது சேவல் சொல்வதை உடனடியாக செய்யாமல் விட்டிருந்தால் அதை உடனடியாக பாட்டியிடம் சென்று சொல்லிவிடும் அதனால் பாட்டியும் இந்த வாத்துகளை திட்டிவிட்டு அவர்களுக்கு தீனியை மிகவும் குறைவாக போடுவார்கள் அதைப் பார்த்து சேவலும் சந்தோசப்படும். அந்த சமயங்களில் இப்போதாவது என்னைப்பற்றி தெரிகிறதா அதனால் நான் சொல்வது போல் செய்தால் உங்களுக்கு நல்லது என்றெல்லாம் அந்த வாத்துகளை அவ்வப்போது மிரட்டிக் கொண்டே இருக்கும்.
ஒரு சில நேரங்களில் அந்த வாத்துகள் செய்யாத தவறை செய்ததாக பாட்டியிடம் சொல்லி அவைகளுக்கு திட்டு விழவும் தீனி கிடைக்காமல் போகவும் செய்துவிடும்.இதனால் அந்த வாத்துகளும் அந்த சேவல் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டும் வேறு வழியில்லாமல் வாழ்ந்து வந்தது. வாத்துகள் அந்த சேவல் சொல்வது பொய் என்று சொல்ல முற்படும் போது சேவலும் அந்த பாட்டியிடம் சென்று நான் அவர்களுடைய நல்லதுக்கு சொன்னால் இவர்கள் எப்படி என்மேல் பொய் சொல்கிறார்கள் பாருங்கள் என்று பாசாங்கு செய்து அந்த வாத்துகளையே மீண்டும் மாட்டி விட்டு வந்து விடும். அதனால் அந்த வாத்துகளுல் ஒன்று நாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இவ்வாறு இருப்பது என்று புலம்பும் அதற்கு மற்றொரு வாத்து நீ கவலைப்படாதே! இந்த சேவலை பற்றிய உண்மை பாட்டிக்கு விரைவாக தெரியும்போது நமக்கு நல்ல காலம் பிறந்து விடும் அதுவரை பொறுமையாக இருப்போம் என்று ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக் கொண்டு இருப்பார்கள்.
ஒரு முறை பாட்டி இந்த வாத்துக்களுக்கும் சேவலுக்கும் அவர்களுக்கு பிடித்தமான தானியத்தை உன்ன போட்டுவிட்டு வெளியில் சென்று விட்டார் அப்பொழுது தன்னுடைய பங்கினை வேகமாகத் தின்று முடித்துவிட்ட சேவலும் அந்த வாத்துகளை பார்த்து எனக்கு இது மிகவும் பிடித்தமான உணவு அதனால் நீங்கள் இருவரும் உங்களுடைய பங்கினை என்னிடம் கொடுத்துவிடுங்கள் நான் உங்களுக்கு வேண்டிய வேறு உணவைத் தருகிறேன் என்று அதிகாரத் தோனியில் மிரட்டியது .
சேவலின் அந்த அடாவடி செயலுக்கு என்னசெய்வதென்று புரியாமல் அந்த சேவலிடம் " சேவல் அண்ணே நீங்கள்தான் உங்களுடைய பங்கினை தின்று விட்டீர்களே இது பாட்டி எங்களுக்கு கொடுத்தது அதனால் இந்த உணவை நாங்கள்தான் தின்போம் " என்றி கூறிவிட்டன. இதனால் அதிகம் கோபமான சேவலும் உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரிந்தும் இப்படி செய்கிறீர்கள் . உங்களை என்ன செய்வேன் என்று தெரியாது ஒழுங்காக கொடுத்துவிட்டால் உங்களுக்கு நல்லது என்று மீண்டும் மிரட்டியது. அதனால் பயந்து போன ஒரு வாத்தும் "சேவல் அண்ணே என்னுடைய உணவை உங்களுக்கு தருகிறேன் ஆனால் இவன் சின்ன பையன் இவனுடைய உணவை மட்டும் அவன் சாப்பிடட்டும் என்று சொன்னது இதைக் கேட்ட அருகில் இருந்த மற்றொரு வாத்தோ " நீ சும்மா இரு இது உனக்கு பாட்டி கொடுத்த உணவு இதனை யாருக்கும் கொடுக்க கூடாது நீ தான் சாப்பிட வேண்டும், அந்த சேவலுக்கு கொடுக்காதே நீ சாப்பிடு" என்று தைரியமூட்டியது இருந்தாலும் சேவலை எதிர்த்தாள் என்ன ஆகும் என்று தெரிந்திருந்ததால் பயந்து பயந்து அதனுடைய உணவினை சாப்பிட தொடங்கியது. அப்பொழுது கோபத்தின் உச்சிக்கே சென்ற சேவலானது என்னை மதிக்காமல் இரண்டு பேரும் மிகவும் திமிராக நடந்து கொள்கிறீர்கள் உங்களுக்கு பாட்டி வரட்டும் இருக்கிறது என்று சொல்லி மிரட்டியது. அத்ற்க்கு அந்த வாத்துகளில் ஒன்று நீ சொல்வது போல் பாட்டி வரட்டும் நாங்களும் உன்னைப்பற்றி சொல்கிறோம் என்று சொன்னது இதைக் கேட்டவுடன் அந்த சேவலும் இவர்களை என்ன செய்வது என்று யோசனையில் அமைதியாக உட்கார்ந்து இருந்தது.
அதன் பிறகு மாலை வேளையில் அந்த பாட்டியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் அப்பொழுது வாத்துகள் இரண்டும் அவர்களுடைய கூண்டில் வந்து சேர்ந்திருந்தது ஆனால் சேவல் மட்டும் அதன் கூண்டிற்கு வந்து உட்காராமல் வெளியில் ஒரு ஓரமாக சோகமாக இருந்தது இதனைப் பார்த்த பாட்டியும் " நீ ஏன் சோகமாய் இருக்கிறாய் " என்று கேட்டார்கள் அப்பொழுது கூண்டினுல் இருந்த இரண்டு வாத்துகளுக்கும் அய்யய்யோ ! இந்த சேவல் இப்படி நடக்கிறதே ! இன்று நம்மை என்ன சொல்லி மாட்டி விடப்போகிறது தெரியவில்லையே என்று பயத்தில் இருந்தன. உடனே சேவலும் பாட்டியை பார்த்து ஒன்றுமில்லை பாட்டி என்று சோகமாக சொன்னது அதற்க்கு பாட்டியும் இல்லை சேவலே! நீ எப்பொழுதும் இதுபோல் வருத்தமாக இருந்தது இல்லையே ஏதேனும் பிரச்சனையா ?என்று கேட்டதற்கு அந்த சேவலும் பிரச்சினை எல்லாம் எதுவும் இல்லை ஆனால்... ஆனால் என்ன சேவலே என்று கேட்கவும் அந்த சேவலும் ஏதோ நமக்கு நல்ல சமயம் என்று பாட்டியிடம். பாட்டி இன்று காலையில் நீங்கள் கொடுத்து விட்டுச் சென்ற பிடித்தமான உணவு சாப்பிடலாம் என்று இருந்தேன் அப்போது இந்த வாத்துகள் இரண்டும் அவர்களுடைய உணவினை சாப்பிட்டு விட்டு என்னுடைய உணவையும் மிரட்டி பிடுங்கி சாப்பிட்டு விட்டனர் என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதது . இதைப் பார்த்ததும் அந்த வாத்துகளுக்கு என்ன செய்வது என்று புரியாமல் பயந்தது. அந்த பாட்டியும் அந்த சேவல் பேச்சை நம்பி வாத்துகளை பார்த்து கோவமாக " உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு நான் உணவே போடப் போவது கிடையாது " என்று சொல்லிவிட்டு அந்த வாத்துகளை பார்த்து உங்களால் எனக்கு எப்பவுமே தொந்தரவாக இருக்கிறது என்று கத்தினார்கள். அந்த வாத்துகளும் நாங்கள் உண்மையில் அவ்வாறெல்லாம் செய்யவில்லை அந்த சேவல் அண்ணன் பொய் சொல்கிறார் என்று கூறின. அதற்கு அந்த பாட்டியும் எனக்கு சேவலை பற்றி நன்றாக தெரியும் நீ அதனை பற்றி தப்பாக சொல்லாதே அமைதியாக இரு ! என்று சொல்லிவிட்டு பாட்டி உள்ளே சென்று விட்டார்கள்.
அவர்கள் உள்ளே செல்வதை பார்த்த பிறகு அந்த வாத்துகளிடம் வந்த சேவலும் இப்போது பார்த்தீர்களா நான் யாரென்று இனிமேல் நான் சொல்வது போல் செய்யாவிட்டால் இதேபோல் தான் உங்களுக்கு நடக்கும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லி அவர்களைப் பார்த்து சிரித்து விட்டு அதன் கூண்டில் சென்று படுத்துக்கொண்டது. அடுத்த நாள் காலையிலும் அந்த பாட்டி அவர்கள் சொன்னது போல் அந்த சேவலுக்கு மட்டும் உணவு வைத்து விட்டு ,அந்த வாத்துகளுக்கு உணவு எதுவும் தராமல் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். அந்த சேவலும் அதனுடைய தீனியை தின்று விட்டு அந்த வாத்துகளை வேலை வாங்கிக் கொண்டு இருந்தது அந்த வாத்துகளும் சரியாக தீனி கிடைக்காததால் சோர்ந்து போய் இருந்தன.
அப்போது அந்த வாத்துகளும் தங்களுக்குள் நாம் இருவரும் எப்படியாவது பாட்டிக்கு இந்த சேவலின் உண்மை முகத்தை காட்டி விட வேண்டும் அப்போதுதான் பாட்டி இந்த சேவலுக்கு சரியான தண்டனை கொடுப்பார் நம்மிடமும் பாசமாக இருப்பார் என்றும் பேசிக் கொண்டிருந்தது, இது அனைத்தையும் தூங்கி கொண்டு இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்த சேவலும் கேட்டு விட்டது. அதன் பிறகு சேவலானது ஓஹோ! இனிமேல் இவர்களை ஒன்றாக இருக்க விட்டால் நிச்சயம் நம்மை காட்டிக் கொடுத்து விடுவார்கள் பிறகு பாட்டியும் நம்மை ஒரு காலமும் நம்ப மாட்டார் அதனால் இவர்கள் இருவரையும் எப்படியாவது பிரிக்க வேண்டுமே என்று திட்டம் போட்டது.
அடுத்த நாள் பாட்டி சேவலுக்கு உணவை வைத்துவிட்டு அந்த வாத்துகளை பார்த்து சரி பாவமாக இருக்கிறது என்று கூறி சிறிதளவு தானியத்தை அவைகளுக்கும் வைத்துவிட்டு சேவலிடம் சென்று பத்திரமாக பார்த்துக்கொள் என்றவாரு வேலைக்கு சென்றார்.அதன் பிறகு அந்த வாத்துகளும் சேவலும் அவர்களுக்கு வைத்த உணவினை சாப்பிட்டுவிட்டு மரத்தின் அடியில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன அப்பொழுது சேவலும் எப்படியாவது இந்த வாத்துகளில் ஒன்றை பிரித்து விட வேண்டும் அதற்கு சரியான திட்டம் தேவை என்று அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தது. பிறகு அந்த வாத்துக்கள் இரண்டும் கண் அசறும் நேரமாக பார்த்து அந்த சேவலானது பக்கத்து வீட்டின் வாசலில் சென்று எச்சம் செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை களைத்துவிட்டு வந்துவிட்டது.அதன் பிறகு அதற்கு எதுவும் தெரியாததுபோல் படுத்து ஓய்வு எடுக்க ஆரம்பித்தது.
மாலைப்பொழுதில் பாட்டியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் ,அதேபோல் பக்கத்து வீட்டுக்காரர்களும் வந்து சேர்ந்தவுடன் அவர்கள் வீட்டின் வாசலில் இருந்த எச்சத்தை பார்த்து இது யார் செய்தது ஒழுங்காக சொல்லிவிடுங்கள் பிறகு நான் என்ன செய்வேன் என்று தெரியாது என்றெல்லாம் பேசிக் கொண்டே.அந்த பாட்டியிடம் வந்து இங்க பாரு பாட்டி நம்ம இடத்துல உன்கிட்ட மட்டும்தான் சேவலும்,வாத்துகளும் இருக்கு அதனால உன் வீட்டில் இருக்கக் கூடிய அந்த வாத்துகளோ அல்லது கோழியோத்தான் செய்து இருக்கணும் ஒழுங்கா வந்து என்னுடைய வாசலை சுத்தம் செய்து விட்டு போ என்று பக்கத்து வீட்டு பெண் கூச்சலிட்டார்.அதனால் வருத்தமடைந்த பாட்டியும் உங்கள் அனைவரையும் வந்து பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிக்கொண்டே பக்கத்தில் இருந்த அந்தப் பெண்மணியின் வீட்டிற்கு சென்று அவர்களுடைய வாசலை கழுவி சுத்தம் செய்து கொடுத்துவிட்டு வந்தார்கள்.
அங்கிருந்து கடுங் கோபத்தில் வந்தவர்கள் சேவலையும் அந்த வாத்துக்களையும் வெளியில் நிற்க வைத்து அந்த குற்ற செயலை செய்தது யார் என்று சொல்லிவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.மேலும் நீங்களே சொல்லி விட்டாள் நான் மன்னித்து விட்டு விடுகிறேன் இல்லையென்றால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது அதனால் இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் நீங்கள் உண்மையை சொல்லிவிட வேண்டுமென்று பாட்டியும் கத்த ஆரம்பித்தார்கள்.
உடனே வாத்துக்கள் பக்கம் திரும்பி இந்த செயலை நீங்கள் செய்தீர்களா என்று மிரட்டும் தோணியில் கேட்டார்கள் அதற்கு வாத்துகளும் நிச்சயமாக நாங்கள் செய்யவில்லை பாட்டி என்று பயத்தில் சொல்லிவிட்டன. அதேவேளையில் பாட்டியும் அந்த சேவலப்பார்த்து கேட்டபோது அந்த சேவலோ பாட்டி என்னைப் பற்றிதான் உங்களுக்கு நன்றாக தெரியுமே நான் போய் அப்படி செய்வேனா? ஆனால் எனக்கு யார் செய்தது என்று தெரியும் பாட்டி சொன்னால் நீ நம்பு வாயா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை என்று சேவல் கூறவே! பாட்டியும் சேவலே நீ யார் என்று கூறு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கோபமாக கேட்டார்கள். சேவலின் இந்த சூழ்ச்சியை புரிந்து கொண்ட வாத்துகளும் என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாமல் பதட்டத்துடன் இருந்தன. உடனே அந்த சேவலும் பாட்டியிடம் " பாட்டி நங்கள் மதியம் சாப்பிட்டுவிட்டு படுக்கும் வேலையில் நான் இந்த வாத்துகளிடம் நமது வீட்டில் மரநிழலில் படுத்துக் கொள்ளும்படி கூறினேன் அதற்கு அந்த வாத்துகளுள் ஒன்று என்னைப் பார்த்து கோபமாக நீ உன்னுடைய வேலையை பார் நீ சொல்வதை எங்களால் கேட்க முடியாது என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த பெண்மணியின் வீட்டிற்கு சென்றுவிட்டது அதனால் நான் அங்கு செல்லாதே வந்துவிடு ! பாட்டிக்குப் பிரச்சனை வரும் வந்துவிடு என்று பலமுறை கூறினேன் ஆனால் அந்த வாத்தோ எந்த பிரச்சனையும் வராது நான் பார்த்துக் கொள்கிறேன் நீ உன் வேலையை பார் என்று சொல்லி அங்கேயே இருந்தது . அதன்பிறகுதான் அது அங்கு வேண்டுமென்றே எச்சம் செய்துவிட்டு வந்திருக்கிறது பாட்டி என்று வருத்தமாக சொன்னது. இதை சற்றும் எதிர்பார்க்காத இரண்டு வாத்துகளும் அந்த பாட்டியிடம், ஐயோ பாட்டி சேவல் அண்ணன் சொல்வது அனைத்துமே பொய்! அவர் எங்கள் மீது வேண்டுமென்றே பழிபோட நினைக்கிறார் அவரை நம்பாதீர்கள் நாங்கள் நிச்சயமாக இந்தத் தவறை செய்யவில்லை எங்களை நம்புங்கள் பாட்டி என்று இரண்டும் கெஞ்ச ஆரம்பித்தது. இருந்தாலும் சேவலின் சூழ்ச்சி வலையில் பாட்டியும் சிக்கிக்கொண்டதால் சேவல் சொன்னது உண்மை என்று நம்பி அந்த வாத்துகளிடம் நான் உங்களை இவ்வளவு நாள் விட்டு வைத்தது தவறு நான் என்ன செய்கிறேன் பார் என்று கூறியவாறு அந்த இரண்டு வாத்துகளுள் ஒரு வாத்தை பிடித்தார்கள். இதனால் பயந்து போன வாத்துகளும் பாட்டியிடம் எங்களை நம்புங்கள் பாட்டி நாங்கள் நிச்சயம் இதனை செய்யவில்லை அந்த சேவல் எங்களை வேண்டுமென்றே இப்படி பழிவாங்குகிறது. இதுபோல் பல்வேறு தவறான விஷயங்களை இந்த சேவல் செய்து விட்டு எங்களை மாட்டிவிட்டு விடுகிறது ஆனால் உங்களிடம் எதுவும் தெரியாதது போல் நன்றாக நடிக்கிறது உங்களுக்கு விரைவில் உண்மை தெரியும்போது நாங்கள் சொல்வது உண்மை என்று உங்களுக்கு புரியும் பாட்டி. அதுவரை எங்களை எதுவும் செய்யாதீர்கள் என்று கெஞ்சின. ஆனால் அந்தப் பாட்டியோ எனக்கு சேவலைப் பற்றி நன்றாக தெரியும் அதனால் நீ அதன் மீது பழி போடாதே! இன்றிலிருந்து உன்னால் ஏற்பட்ட பிரச்சனை எனக்கு முடிய போகிறது என்று கூறிக்கொண்டே அந்த வாத்தை பிடித்துக் கொண்டு போய் அருகிலிருந்த சந்தையில் விற்றுவிட்டு வந்து விட்டார்கள்.
பாட்டி சந்தைக்கு சென்ற வேளையில் அந்த சேவலும் வீட்டில் தனியாக இருந்த அந்த ஒரு வாத்திடம் சென்று இனிமேலாவது என்னிடம் நான் சொல்வது போல் கேட்க வேண்டும் இல்லையென்றால் இப்போது உன்னிடம் இருந்த அந்த வாத்திற்கு ஏற்பட்ட நிலை தான் உனக்கும் ஏற்படும் ஜாக்கிரதையாக இரு என்று மிரட்டி விட்டுச் சென்றது.அந்த வாத்தும் தன்னுடன் இருந்த நண்பன் பிரிந்துபோன தூக்கத்திலும் பாட்டிக்குத் தெரியாமல் இந்த சேவல் செய்கின்ற பல்வேறு சூழ்ச்சிகள்் ,கொடுமைகள் மற்றும் தவறுகளை நினைத்து மிகவும் மன வருத்தத்துடன் இருந்தது.
சந்தையில் இருந்து வீட்டிற்கு வந்த பாட்டி இந்த சேவலிடம் சேவலே இனிமேல் அந்த வாத்தின் தொல்லை இருக்காது நீயும் இந்த ஒரு வாத்தும் இனிமேல் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி சென்றார்கள்.
அதேபோல் அடுத்த நாள் அந்த பாட்டி வாத்திற்கும் சேவலுக்கும் தீனி போட்டுவிட்டு நம்வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினார்கள். அந்த சேவல் அதற்கு போட்ட அனைத்து தீனிகளையும் உடனடியாக தின்றுவிட்டது. ஆனால் அந்த வாத்து மட்டும் இவ்வளவு காலம் அதனுடன் இருந்த நண்பனை நினைத்து மனம் வருந்திக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்த அந்த சேவலும் இங்க பாரு வாத்தே ஒழுங்கா உன்னுடைய தீனியை சாப்பிடு சும்மா வருந்தி கிட்டு தொந்தரவு செய்யாதே என்று கூறியவாறு, உன்னுடைய இறைகளை இப்போது நீ சாப்பிடுகிறாயா அல்லது நான் சாப்பிட்டு விடட்டுமா என்று கேட்டுவிட்டு அந்த வாத்தின் வாயிலிருந்து எந்த பதிலும் வருவதற்கு முன்பாகவே அதனுடைய இறையை சேவல் தின்ன ஆரம்பித்துவிட்டது.
பிறகு வாத்தும் சாப்பிடாமல் வருத்தத்துடன் இருந்தது மாலையில் பாட்டி வேலை முடித்து வந்தவுடன் நீங்கள் உணவு சாப்பிட்டீர்களா என்று கேட்டபோது சேவலும் ஆம் பாட்டி நீங்கள் கொடுத்து விட்டுச் சென்ற உணவை நானும் வாத்தும் நன்றாக சாப்பிட்டு விட்டோம் என்று சொல்லியது.ஏற்கனவே வாத்து வருத்தத்தில் இருந்ததனால் இந்த சேவல் செய்கின்ற இந்த செயல்களை நான் எவ்வாறு தாங்கிக் கொண்டிருக்க போகிறானோ தெரியவில்லையே என்று என்னி அழுதுகொண்டே பசியுடன் படுத்து உறங்கியது.
அடுத்த நாள் காலையில் பாட்டி எழுந்து சேவலுக்கும் வாத்திற்கும் தீனி போட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஊர் பெரிய மனிதர் ஒருவர் பாட்டியிடம் " நீங்கள் எனக்கு உங்களிடம் உள்ள வாத்து அல்லது சேவலை விளைக்கு தருவீர்களா ? என்று கேட்கவும் அந்த பாட்டியும் இப்போதைக்கு கொடுக்கும் முடிவில் இல்லை வேண்டுமானால் கொஞ்ச நாள் போகட்டும் பிறகு சொல்கிறேன் என்று அந்த நபரை அனுப்பி விட்டார்கள்.இதை கேட்டுக் கொண்டிருந்த போது சேவலுக்கும் வாத்திற்கும் அதிர்ச்சியாக இருந்தது.
இவ்வாறு நாட்களும் சென்று கொண்டே இருந்தது வாத்தால் முன்புபோல் இயல்பாக இருக்க முடியவில்லை வாத்தின் தீனியையுயம் அந்த சேவல் ஏமாற்றி தின்றதால் அது பெரும்பாலும் பசியுடனேயே இருந்தது. ஆனால் மறு புறத்தில் சேவலோ அதற்கு போட்ட தீணையும் தின்றுவிட்டு வாத்திற்கு வைத்த தீனியையும் பிடிங்கி சாப்பிட ஆரம்பித்தது. அது மட்டுமில்லாமல் பாட்டி அந்த வாத்திடமும் அன்பாக இருக்கிறார்களே எனக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லையே அதனால் நான் ஏதாவது செய்து அந்த வாத்தினை நிலைகுலைய செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு சூழ்ச்சிகளை செய்து கொண்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக அந்த வாத்திற்கு கொடுக்கும் தீனியை நாம் பிடுங்கித் தின்று விட்டாள் அந்த வாத்து உணவில்லாமல் நோஞ்சானாக மாறி நோய்வாய்ப்பட்டு இருந்துவிடும் அல்லது அந்த வாத்து நமக்கு வேண்டாம் என்று அதனை யாருக்கேனும் விற்றுவிடுவார்கள் அதன்பிறகு நாம் மட்டும் பாட்டியுடன் எப்பொழுதும்போல் தனிக்காட்டு ராஜாவாக மகிழ்ச்சியாக இருக்கலாம் யாரும் நமக்கு போட்டியாக இருக்க மாட்டார்கள் என்ற ஒரு திட்டம் போட்டது. சேவலுக்கு வைக்கும் தீனியுடன் அந்த வாத்திற்கு வைக்கும் தீனியையும் சேர்த்து ஏமாற்றி சாப்பிட்டுக் கொண்டு வந்ததால் சேவல் நன்றாக பெருத்து கொழுத்து இருந்தது. அதேவேளையில் அந்த வாத்திற்கு தேவையான தீனி கிடைக்காததால் அது நாட்கள் செல்ல செல்ல மெலிந்துக் கொண்டே வந்தது. இதனை பார்த்த பாட்டிக்கும் என்ன செய்வது என்று புரியாமல் அந்த வாத்தின் நிலைமையை நினைத்து மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதோடு அந்த வாத்தின் மீதும் அதிகமான பாசத்தை செலுத்த ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்து மீண்டும் பொறாமை எண்ணம் தலைக்கேறிய சேவலும் பாட்டியிடம் அந்த வாத்தை பற்றி என்னென்னவோ சொல்லி அதனை பாட்டியிடம் இருந்து விலக்கி வைக்க முயற்சி செய்தது ஆனால் சேவல் அடிக்கடி அவ்வாறு புகார் செய்து கொண்டே இருந்ததால் சேவலின் மீதான நம்பிக்கையும் பாட்டிக்கு சிறிதளவு சந்தேகத்தை ஏற்படுத்தியது ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் பாட்டியும் அவர்கள் இரண்டு பேரையும் சமமாகவே கவனித்து வந்தார்கள்.
ஒரு நாள் அந்த ஊரின் பெரிய மனிதர் மீண்டும் பாட்டியிடம் வந்தார் அப்போது அவர் " என்னுடைய மகன் இப்போது வெளியூரிலிருந்து படித்துவிட்டு நமது ஊருக்கு வருகிறான் அதனால் அவனுக்கு விருந்து வைப்பதற்காக எனக்கு உங்களிடம் உள்ள வாத்து அல்லது சேவல் ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கேட்டார். அவருக்கு அந்த பாட்டியும் சற்று யோசித்தவாறு ஊர் பெரிய மனிதர் வந்து கேட்கிறார், அவர் ஏற்கனவே ஒருமுறை வந்து சென்று இருக்கிறார் இவருக்கு இல்லை என்றும் சொல்ல முடியாது ஆனால் என்ன செய்வது என்று சிறிது நேரம் யோசித்தவாறு குழப்பத்தில் நின்றுகொண்டிருந்தார்.இதனை அருகில் நின்று கொண்டு இருந்த சேவல் இரகசியமாக ஒட்டு கேட்டது.அதற்கு சேவல் நிச்சயம் நான் நன்றாக இருக்கிறேன் அதனால் பாட்டி என்னை விற்க்கமாட்டார்கள் அதோடு அந்த வாத்து மட்டுமே நோஞ்சான் ஆகி பாட்டிக்கு மிகுந்த தொந்தரவாக இருக்கிறது எனவே அதைத்தான் பாட்டி விற்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தது. அதேவேளையில் அந்த வாத்தும் கடவுளே பாட்டியுடன் நாங்கள் இரண்டு பேர் மட்டுமே இருக்கிறோம் வந்திருக்கக்கூடிய நபர் எங்களிருவரையும் விட்டுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தது. சிறிது நேரம் யோசித்த பிறகு பாட்டி அந்த ஊர் பெரியவரிடம் சரி ஐயா என்னிடம் ஒரு வாத்தும் ஒரு சேவலும் மட்டுமே உள்ளது இதில் உங்களுக்கு எதில் விருப்பமோ அதை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். அந்த ஊர் பெரியவரும் அந்த வாத்து மற்றும் சேவல்கள் மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்தார் பிறகு அவர் அந்த பாட்டியிடம் வாத்தை கைகாட்டி ஏதோ பேசிக்கொண்டு இருந்தார் அதைப்பார்த்ததும் சேவலுக்கு அப்பாடா அந்த நபர் அந்த வாத்தைதான் வேண்டும் என்று கேட்கிறார் போலிருக்கிறது அப்படியானால் இன்றோடு நமக்கு இடைஞ்சலாகவும் போட்டியாகவும் இருந்த அந்த வாத்தும் தொலைய போகிறது, சீக்கிரமாக போய்த் தொலையட்டும் என்றவாறு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே தன்னுடைய இறைகளை எடுத்துக் கொண்டிருந்தது.
பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்த அந்த ஊர் பெரிய மனிதரும் தன்னுடன் கூட்டி வந்து இருந்த ஒரு நபரை அனுப்பி வேகமாக பிடித்துக் கொண்டு வா நாம் சென்று மகனுக்கு விருந்து வைக்க வேண்டும் என்று சொல்லி பாட்டியிடம் பணத்தை கொடுத்தார்கள். பாட்டியும் இவ்வளவு நாள் வளர்த்த இவற்றை விற்கிறோமே என்று சிறிதளவு மனவருத்தத்துடன் அந்த பணத்தை பெற்றுக் கொண்டார்கள்.வாத்தும் சேவலும் இறை எடுத்துக் கொண்டிருக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்ற அந்த நபரை பார்த்ததும் வாத்திற்கு ஐயோ கடவுளே ஏன் இப்படி ஒரு நிலைமை வருகிறது தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தது ஆனால் அருகிலிருந்த சேவலோ அப்பாடா அந்த வாத்துக்கு முடிவு காலம் இப்போ நெருங்கி விட்டது இனிமேல் எனக்கு விடிவு காலம் தான் என்று எண்ணி தன்னுடைய இறக்கைகளை விரித்து வேகமாக அடித்து கொக்கரித்தது.
அருகில் வந்த அந்த நபரும் வாத்தின் பக்கமாக போவதுபோல் சென்று திடீரென்று சேவலை லாவகமாக பிடித்துவிட்டார் இதனால் பதறிப்போன சேவலும் " நீங்கள் ஏன் என்னை பிடிக்கிறீர்கள் நீங்கள் அந்த வாத்தை தானே பிடிக்க வந்தீர்கள் " என்று கேட்டதற்கு அதற்கு அந்த நபரும் நாங்கள் முதலில் அந்த வாத்தைதான் பிடிக்கலாம் என்று எண்ணியிருந்தோம் ஆனால் அந்த வாத்தை பார்த்த போது அது மிகவும் மெலிந்து போய் நோஞ்சானாக இருந்தது ஆனால் நீயோ நன்கு தின்றுவிட்டு கொழுத்து இருக்கிறாய் அதனால் அந்த வாத்தின் மாமிசத்தை விட உன்னுடைய மாமிசத்தில் விருந்து வைப்பதே நன்றாக இருக்கும் அதனால்தான் உன்னை பிடித்து செல்கிறோம் என்று கூறிக்கொண்டே அவர்கள் கொண்டுவந்திருந்த கோணிப்பையில் அந்த சேவலின் காலில் கயிறு கட்டி உள்ளே போட்டு அவர்கள் வீட்டை நோக்கி அவர்களுடைய மகனுக்கு விருந்தாக்க நடந்து கொண்டிருந்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த வாத்தும் அழுதுகொண்டே பாட்டி ஏன் சேவலை விற்று விட்டீர்கள், நான்தான் நோஞ்சானாக இருக்கிறேனே என்னை விற்றுவிட்டு சேவலை உங்களுடன் வைத்துக் கொண்டு இருக்கலாமே என்று கேட்டது ! அதற்கு அந்த பாட்டியும் கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும் இனிமேல் நீயும் நோஞ்சானாக இருக்க மாட்டாய் ஏனெனில் உன்னுடைய இறையை பிடுங்கி ஏமாத்தி தின்பதற்கு இனிமேல்தான் அந்த சேவல் இங்கே இருக்க போவது கிடையாதே ! என்று சொன்னார்கள். இதைக்கேட்டதும் வாத்திற்கு ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியாக பாட்டியை திகைத்து பார்த்தது .ஆம் எனக்கு அந்த சேவல் செய்த சூட்சிகள், தவறுகள் எல்லாம் தெரியும், அடிக்கடி அந்த சேவல் நோஞ்சானாக இருக்கக்கூடிய உன்னைப்பற்றி புகார் சொல்கிறதே அது உண்மையா என்று பார்ப்பதற்காக ஒரு நாள் நான் வழக்கம் போல் உங்களுக்கு உணவை வைத்துவிட்டு வேலைக்கு செல்கிறேன் என்பதுபோல் கிளம்பி சென்றதாய் நடித்துவிட்டு நமது வீட்டின் தாழ்வாரத்தில் இருந்து உங்களை கண்காணித்தேன் . அப்போதுதான் அந்த சேவல் அதனுடைய உணவை சாப்பிட்டுவிட்டு உன்னுடைய உணவை நீ சாப்பிட விடாமல் உன்னை மிரட்டி ஏமாற்றி பிடிங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தேன் . இருந்தாலும் சேவலாகவே திருந்திவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் அது திருந்திய பாடில்லை .இப்போதுகூட அந்த ஊர் பெரியவர் எனது மகன் அதிகமாக சேவல் மாமிசம் சாப்பிட்டு இருக்கிறான் ஆனால் வாத்து மாமிசம் சாப்பிட்டது இல்லை எனவே அவனுக்கு விருந்து வைக்க உங்களது வாத்தை கொடுங்கள் என்றுதான் கேட்டார். ஆனால் நான்தான் அவரிடம், ஐயா அந்த வாத்தை பாருங்கள் அது மிகவும் நோஞ்சானாக இருக்கிறது அது நிச்சயம் நன்றாக இருக்காது ஆனால் அந்த சேவல் மிகவும் அரிய வகை சேவல் அதன் மாமிசமும் மற்ற கோயி மாமிசத்தை விட மிகவும் ருசியாக இருக்கும் என்று சொன்னேன் அதன்பிறகே அவர் சரி அந்த வாத்து தேவையில்லை என்று கூறி சேவலை பிடித்துச் சென்றார். அந்து சேவலின் சூழ்ச்சிக்கும், கெட்ட எண்ணத்திற்கும் அதற்குரிய பலனை அது பெற்றுவிட்டது . அதனால் நீ கவலைப்படாதே ! உன்னுடைய நல்ல எண்ணத்தினால் நீ காப்பாற்றப்பட்டு இருக்கிறாய்.நாம் செல்லலாம் என்று அந்த வாத்தை கூட்டிச்சென்று அதற்கு தன் அருகிலேயே அமர வைத்துக்கொண்டு அதற்குப் பிடித்தமான தானியங்களை கொடுத்து அதனை ஆசைதீர தின்ன வைத்து வேடிக்கை பார்த்தார். பாட்டியின் அன்பில் உருகிப்போன வாத்தும் கண்கலங்கி பாட்டிக்கு நன்றி சொல்லி பாட்டியையே சுத்தி சுத்தி வந்து கொண்டிருந்தது. வாத்தும் பாட்டியின்அன்பான அரவணைப்பில் ஓரிரு நாட்களிலேயே இயல்பான நிலைக்கு திரும்பி பாட்டியின் வீட்டில் சந்தோசமாக பாட்டியுடன் தினமும் வலம் வந்து கொண்டிருந்தது.
0 Comments