முயலும் விவசாயியும்
அறிவூட்டும் குழந்தைகளுக்கான நன்னெறிக் கதை
( RABBIT AND The FARMER )
ஒரு ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார் அவருடைய சிறு நிலத்தில் பல்வேறு காய்கறிகளை பயிர்செய்து அதில் விளையும் காய்கறிகளை வைத்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிழைத்து வந்தார். அவர் தன்னுடைய நிலத்தின் ஒரு பகுதியில் கேரட்டினை பயிர் செய்திருந்தார் அந்த விவசாயியின் கண்ணும் கருத்துமான அக்கறையின் காரணமாக அவரின் கேரட் விளைச்சலும் நன்றாக செயித்து வளர்ந்து கொண்டிருந்தது. அவரும் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளகடம் இன்னும் கொஞ்சம் நாளில் கேரட் அறுவடைக்கு தயாராகிவிடும் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து நாம் நமது தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று வீட்டில் அவ்வப்போது மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டிருப்பார். இப்படியே அந்த விவசாயி தன்னுடைய முழுமையான நேரத்தையும் தனது நிலத்தில் விளைவித்த காய்கறிப் பயிர்களின் மீது செலவழித்து வந்தார். அவ்வாறு தனது நிலத்திற்கு சென்று கொண்டுவந்து இருக்கும்போது ஒருநாள் தனது கேரட் பயிர் இருக்கும் நிலத்தின் ஒரு ஓரத்தில் வித்தியாசமாக சில கேரட் செடிகள் காய்ந்து கிடப்பதை கண்டு போய் பார்த்தார். அப்போது பார்க்கும் பொழுது அந்த குறிப்பிட்ட பகுதியிலிருந்த செடிகள் பிடுங்கப்பட்டு அதன் கேரட்கள் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டு இருந்தது இதை பார்த்துவிட்டு அவரும் முதலில் ஏதாவது எலிகள் இதுபோல் செய்து இருக்கும் என்று நினைத்து எலிகளை பிடிக்க எலிப்பொறியை அந்த குறிப்பிட்ட பகுதியில் வைத்துச் சென்றார். அதேபோல் அடுத்த நாளும் அந்த விவசாயி நிலப்பகுதியை சுற்றிப் பார்த்த போது அந்தப் பகுதியின் மற்ற கேரட் செடிகள் பிடுங்கப்பட்டு இருந்தது அதோடு அவர் வைத்திருந்த எலி பொறியிலும் எந்தவிதமான தடயமும் இல்லாமல் இருந்தது. இதனை வீட்டில் சொல்லி வருத்தப்பட்ட விவசாயி பிறகு இப்படியே போனால் கேரட் செடிகள் அனைத்தும் இருக்காது நமக்கு தேவையான விளைச்சலும் கிடைக்காது அதனால் இதற்கு என்ன செய்வது என்று வீட்டில் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு அவருடைய மனைவியும் மகன்களும் அப்பா ! நீங்கள் இதனை கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது அதன்படி நீங்கள் நமது நிலத்தில் இருந்து வீட்டிற்கு வராமல் அருகிலுள்ள மரச் செடியின் பின்னால் பதுங்கி இருந்து பாருங்கள் பிறகு அந்த கேரட் செடிகளை திருடுவது யார் என்று நாம் சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்று சொன்னார்கள். அதன்படியே அந்த விவசாயியும் தனது காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு கிளம்புவது போல் சென்று அருகிலிருந்த மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இரகசியமாக தனது கேரட் செடிகளை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு சில மணி நேரங்களுக்குப் பிறகு சில முயல் கூட்டங்கள் அவருடைய கேரட் செடிகளை நோக்கி வருவதைக் கண்டார் இதை பார்த்தவுடன் அவை என்ன செய்யப்போகிறது என்பதை அறிய அசைவு இல்லாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த முயல்கள் வந்தவுடன் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு அந்த விவசாயியின் நிலத்தில் இருந்த கேரட் செடிகளை பிடுங்க ஆரம்பித்தார்கள் அப்பொழுது ஒரு முயல் மட்டும் அவர்களுடன் சென்று பிடுங்காமல் வரப்பிலேயே நின்றுகொண்டிருந்தது இதைப்பார்த்த மற்ற முயல்கள் அதை பார்த்து ஏய் ! நீயும் உன்னுடைய குழந்தைகளும் எங்களைப்போல் வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்றால் வந்து உனக்குத் தேவையானதை பிடிங்கி கொள் என்றார்கள், அதோடு நீ இப்பொழுது சும்மா இருந்து விட்டு எங்களிடம் வந்து கேரட் கேட்டாள் ஒன்றும் கிடைக்காது என்று கூறி அதைப் பார்த்து கோபமாக சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே நீ எப்படியாச்சும் போ! எங்களுக்கு சுவையான கேரட் கிடைத்திருக்கிறது என்றவாரே அவர்கள் தேவைக்கு மீறிய கேரட்களை பிடுங்கி கொண்டே இருந்தார்கள், அந்த தாய்முயலும் அந்த விவசாய நிலத்தின் ஓரங்களில் இருந்த புற்களை தேடி சேகரித்துக் கொண்டு இருந்தது. இதை பார்த்துக்கொண்டிருந்த விவசாயி இனிமேல் அமைதியாக இருந்தால் இந்த முயல்கள் அனைத்தும் நமது கேரட் செடிகளை பிடுங்கி நாசம் செய்துவிடுவார்கள் என்று எண்ணி வேகமாக அந்த முயல்களை நோக்கி ஒரு தடியை தூக்கி கொண்டு ஓடிவந்தார், இதைப் பார்த்ததும் நிறைய கேரட்களை பிடுங்கி வைத்திருந்த முயல்கள் அனைத்தும் அலறியடித்துக் கொண்டு தப்பித்தால் போதும் என்று நினைத்து அவர்கள் கையில் கிடைத்த ஒருசில கேரட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டம் பிடித்தன. மறுமுனையில் புற்களை சேகரித்துக் கொண்டிருந்த தாய்முயலும் பயத்தில் ஓட நினைத்த போது அதனை விவசாயி மடக்கிப் பிடித்து விட்டார். அந்த முயலும் பயத்தில் ஐயா ! நான் ஒன்றும் செய்யவில்லை என்னை எதுவும் செய்யாதீர்கள்! நான் இங்கிருந்த புற்களைத் தான் சேகரித்தேன் என்னை விட்டு விடுங்கள் எனது குழந்தைகள் பசியாக இருப்பார்கள் என்று கேட்டது. இதை கேட்டதும் அந்த விவசாயி நீயும் அவர்கள் கூட்டத்தை சார்ந்த முயல்தானே இருந்தாலும் நீ கவலை படாதே முயலே நான் உன்னையும் உன்னுடன் வந்த மற்ற முயல் களையும் ரகசியமாக மரத்தின் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் உனது நண்பர்கள் அனைவரும் கேரட் செடிகளைப் பிடுங்கி கேரட் களை எடுத்துக்கொண்டிருந்த போது நீ மட்டும் ஏன் அவ்வாறு செய்யாமல் வரப்பிலேயே நின்று கொண்டிருந்தாய் ? என்று விவசாயி கேட்டார். இதை கேட்டவுடன் அந்த முயலும் ஐயா ! என்னுடைய நண்பர்கள் என்னிடம் இவ்வளவு நாளாக நீ எங்களுடன் வராமல் தனியாகவே இருக்கிறாய், செல்கிறாய், வருகிறிய் ஆனால் இன்று நாங்கள் கொழுத்த புற்கள் இருக்கும் இடத்திற்கு செல்லப் போகிறோம் அங்கு எந்த பிரச்சனையும் இல்லை அதனால் நீயும் எங்களுடன் வா போகலாம் என்று சொன்னார்கள். நானும் அவர்களை நம்பி புற்களுக்குத் தானே என்பதனால் கிளம்பி வந்தேன் ஆனால் இங்கு வந்த பிறகு அவர்கள் அனைவரும் உங்களுடைய கேரட் செடிகளை பிடுங்க ஆரம்பித்துவிட்டார்கள், என்னையும் வந்து தேவையான கேரட்களை எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் பிடுங்கி எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள், ஆனால் நான் அவர்களிடம் நீங்கள் அடுத்தவர்களுக்கு சொந்தமான இடத்தில் இருக்கக்கூடிய கேரட் செடிகளை திருடுகிறீர்கள் அதனால் எனக்கு அப்படிப்பட்ட கேரட் தேவையில்லை என்று சொல்லிவிட்டு புற்களை சேகரிக்க ஆரம்பித்தேன் ஐயா! அதனால் என்னை எதுவும் செய்து விடாதீர்கள் என்று மீண்டும் கெஞ்சியது.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கண்கூடாக பார்த்திருந்ததால் அந்த முயலின் நேர்மை மற்றும் உண்மையை
நம்பிய அந்த விவசாயி அந்த முயலை பாராட்டி பயப்படாதே உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். அதோடு உனக்குத் தேவையான கேரட்களை நானே கொடுக்கிறேன் என்று அந்த விவசாயி தன்னுடைய நிலத்தில் இருந்த நல்ல கேரட்களாக பார்த்து பிடுங்கி கொடுத்தார். இதனால் விவசாயியின் இந்த செயலை சற்றும் எதிர் பார்க்காத அந்த முயலும் அந்த விவசாயிக்கு கண்ணீர் மல்க நன்றி கூறியது, அதோடு அந்த விவசாயியும் முயலிடம் இனிமேல் உனக்கு எப்போதெல்லாம் கேரட் அல்லது மற்ற காய்கறிகள் தேவைப்பட்டாலும் தயங்காமல் என்னிடம் வா நான் உனக்கு தருகிறேன் என்று சொல்லி அனுப்பினார். அதோடு உனது நண்பர்களிடமும் இதுபோல் திருட வேண்டாம் வேண்டுமானால் என்னிடம் வந்து கேட்கச் சொல் நானே தருவேன் என்று சொல் என்று சொல்லி அனுப்பினார்.
அந்த முயலும் நன்றி கூறியவாறு தன்னுடைய இருப்பிடம் நோக்கி வரத்தொடங்கியது. தன்னுடைய இருப்பிடத்தை அடைந்த பிறகு அங்கு பயத்தில் ஓடி வந்த மற்ற முயல்கள் அனைத்தும் ஒன்றாக கூடி வந்து இந்த முயலைப் பார்த்து சிரிக்கத் தொடங்கியது அதோடு அவர்களெல்லாம் " அந்த விவசாயி கிட்ட நல்ல வாங்கினியா? அப்பவே நாங்க ஓடி வரும்போது ஓடி வந்து இருக்கலாம் நேர்மை அப்படி இப்படின்னு பேசினாயே இப்போது பார்த்தியா உன்னுடைய நிலைமை பலமான அடியோ என்று கேலி கிண்டல் செய்தார்கள் " .
அதற்கு அந்த முயலும் அவர்களைப் பார்த்து நண்பர்களே என்னை அந்த விவசாயி எதுவும் செய்யவில்லை அவர் மிகவும் நல்லவர் எனக்கு தேவையான கேரட்களை அவரே கொடுத்து அனுப்பினார் அதனால் இனிமேல் நீங்களும் அவருடைய கேரட் செடிகளை திருடாதீர்கள் நீங்கள் சென்று கேட்டாலும் நிச்சயம் அவர் உங்களுக்கும் கொடுப்பார் என்று கூறியது.
இதைக் கேட்ட பிறகும் கூட நம்பாத மற்ற முயல்கள்" எங்களிடமா கதை விடுகிறாய் எங்களுக்கு தெரியும் நீ அந்த விவசாயியிடம் மாட்டிய பிறகு உன்னை நன்றாக போட்டு அடித்திருப்பார் நீயும் கதறி அழுது இருப்பாய் இதைப் பார்த்து பரிதாபப்பட்டு உனக்கும் இதோடு இந்த பக்கம் வரக்கூடாது என்று சொல்லி இரண்டு கேரட்களை கொடுத்து துரத்தி அடித்திருப்பார். அப்படி இல்லாவிட்டால் அந்த விவசாயி சென்றுவிட்ட பிறகு நீயே அந்த விவசாயிக்கு தெரியாமல் கேரட்களை திருடிக்கொண்டு வந்து இருப்பாய் என்று கூறியவாறு கேலி செய்து சிரித்தார்கள்.
இவர்கள் எதைச் சொல்லியும் கேட்கப்போவதில்லை என்று அறிந்த அந்த தாய்முயலும் அமைதியாக சென்று தான் கொண்டு வந்திருந்த கேரட்களை தனது பிள்ளைகளுடன் பகிர்ந்து சாப்பிட தொடங்கியது.
அந்த விவசாயியும் மாலை பொழுதுவரை தன்னுடைய நிலத்தில் காவல் காத்திருந்துவிட்டு தனது வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை குடும்பத்தில் கூறினான். அவர்களுடைய பிள்ளைகளும், மனைவியும் நாம் முடிந்தவரை விரைவில் கேரட் செடிகளை பிடுங்கிவிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதோடு அந்த விவசாயியும் இனிமேல் கவலை வேண்டாம் நான் இன்று அந்த முயல்களை துரத்தியதிலிருந்தே அவைகள் பயந்து போய் இருக்கும் அதனால் அவைகள் இனிமேல் நம் கேரட் செடிகள் பக்கம் வராது என்று சொன்னார்.
மறுபக்கத்தில் அந்த முயல்கள் கொண்டு வந்திருந்த கேரட் களை சாப்பிட முடியாமல் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு அங்குமிங்குமாக தூக்கிப்போட்டு வீணடித்துக் கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி நண்பர்களே இப்பொழுது பொழுது போய்விட்டது அந்த விவசாயியும் இந்நேரம் வீட்டிற்குச் சென்று இருப்பான் அதோடு அவன் நம்மை அடிப்பதற்காக துரத்திக் கொண்டு வந்தான் அந்த விவசாயிக்கு நாம் ஒரு பாடம் புகட்ட வேண்டும் அதனால் இப்போது சென்று நம்மால் முடிந்த அளவிற்கு கேரட்களை பறித்துக் கொண்டு வந்து விடலாம் என்று கிளம்பினார்கள் . இதனை அறிந்த அந்த தாய் முயலும் வேண்டாம் நண்பர்களே இவ்வாறு செய்யாதீர்கள் நீங்கள் இவ்வாறு திருட தேவையில்லை அந்த விவசாயிடம் கேட்டாலே அவரே கொடுப்பார் என்று சொல்லி பார்த்தது ஆனால் மற்ற முயல்களே அதை பார்த்து சிரித்துவிட்டு நீ வேண்டுமானால் அவனிடம் போய் பிச்சையிடு எங்களுக்கு தேவையில்லை எங்களுக்கு தேவையான கேரட் களை நாங்களே எடுத்துக் கொள்வோம் அதனால் நீ உன் வாயை மூடு என்று சொல்லிவிட்டார்கள். அந்த தாய் முயல் பலமுறை அறிவுரை சொல்லியும் அதன் வார்த்தையை கேட்க யாரும் தயாராக இல்லை அதோடு நீ இப்படியே பேசிக் கொண்டே இரு நீயும் உனது பிள்ளைகளும் பட்டினியாக இருக்க போகிறீர்கள் நாங்கள் நன்றாக சாப்பிட போகிறோம் என்று அனைவரும் சிரித்துக்கொண்டே விவசாயின் கேரட் செடிகளை நோக்கி ஓடத் தொடங்கினர். அந்த முயல்களும் அங்கு சென்ற பிறகு அவர்களால் முடிந்த அளவிற்கு கேரட் செடிகளை பிடுங்கி எடுத்துக் கொண்டு வந்து விட்டனர்.
அடுத்த நாள் அந்த முயல்கள் அனைத்தும் அவர்கள் கொண்டு வந்திருந்த கேரட்களை ஒன்றும் பாதியுமாக தின்றுவிட்டு அந்தத் தாய் முயல் மற்றும் அதன் குட்டிகளை பார்த்து கேலி செய்த வாறு வீரனாக தூக்கிபோட்டு விளையாடிக் கொண்டிருந்தனர் . ஆனால் அந்த தாய் முயல் தான் ஏற்கனவே விவசாயியிடமிருந்து பெற்று வந்திருந்த கேரட் களை வீணடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக தனது பிள்ளைகளுடன் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் காலை விவசாயி தன்னுடைய நிலத்தினை வந்து பார்த்த பொழுது அங்கு மீண்டும் கேரட் செடிகள் பிடுங்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்து போனார் இதனால் இந்த நிலைமை இப்படியே போனால் நமக்கு எதுவுமே மிஞ்சாது என்று எண்ணி இதற்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக விவசாயியும் அவன் குடும்பத்தினரும் சேர்ந்து கேரட் செடிகள் இருக்கும் நிலத்தின் ஓரமாக நீளமாக அந்த முயல்களை பிடிக்க வளைதனை போட்டு வைத்துவிட்டு அருகிலிருந்த மரங்களின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தனர்.
நீண்டநேரம் காத்திருந்த போதும் அந்த முயல்கள் கேரட் செடிகளை நோக்கி வரவில்லை ஆனால் சூரியன் மறைந்து மாலைப்பொழுது வந்தவுடன் இவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த முயல்கள் கூட்டமாக பேசிக்கொண்டு நாம் இன்றும் நிறைய கேரட்களை பிடுங்கி சென்று விடலாம் நம்மை அடிக்க வந்த அந்த விவசாயியை நாம் ஒருவழி பார்த்துவிடலாம் இதைப்பார்த்து அந்த விவசாயி நிச்சயம் குடும்பத்துடன் அழுதுக் கொண்டிருப்பான், அதோடு நம்முடன் இனிமேல் மோத மாட்டான் என்று ஆனந்தத்தில் மீண்டும் கேரட் செடிகளை பிடுங்க ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் விவசாயியும் அவருடைய மகன்களும் ஏற்கனவே போட்ட திட்டத்தின்படி அந்த முயல்களை நோக்கி குரல் கொடுத்தவாறு கையில் கொம்புகளுடன் ஓடினர் இதைப்பார்த்த முயல்கள் சற்றும் எதிர்பார்க்காமல் பதறிப்போய் தப்பிப்பதற்காக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தது அப்போது அனைத்து முயல்களும் அவர்கள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த வலைகளில் சென்று மாட்டிக் கொண்டது.
இதனால் ஆத்திரம் தீராத விவசாயி தன் கையில் இருந்த கொம்பை வைத்து அந்த முயல்களை அடிக்க ஆரம்பித்தார் , வலி தாங்க முடியாத முயல்கள் அனைத்தும் ஐயா மிகவும் வலிக்கிறது எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் இனிமேல் இதுபோல் செய்யமாட்டோம் என்றெல்லாம் அழுதுகொண்டே கெஞ்சினார்கள் ஆனால் எதையும் கேட்காத அந்த விவசாயியும் இல்லை நான் உங்களை விடுவதாக இல்லை உங்கள் அனைவரையும் என்ன செய்கிறேன் பார் என்று சொல்லிக் கொண்டே தனது அடியை தொடர்ந்துக் கொண்டே இருந்தார் அந்த முயல்களும் பதட்டத்தில் வலி தாங்க முடியாமல் பயந்துபோய் கத்திக் கொண்டிருந்தன.
மறுபுறத்தில் அந்த தாய் முயலும் இந்த முயல்கள் அனைத்தும் நாம் சொல்லும் அறிவுரையை கூட கேட்காமல் கிளம்பிச் சென்றார்களே நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லையே என்று பதற்றத்தில் அவற்றைத் தேடிக் கொண்டு சென்றது, அப்போது அதன் நண்பர்கள் அனைவரும் விவசாயியிடம் மாட்டிக் கொண்டு இருப்பதை பார்த்து விவசாயியிடம் செல்ல முயன்றது இதனைப் பார்த்த விவசாயின் மகன்கள் அந்த முயலையும் தங்கள் கையில் வைத்திருந்த கொம்புடன் தாக்க முயன்றனர் ஆனால் அந்த விவசாயி அவர்களை தடுத்து அந்த தாய் முயலை தாக்காதீர்கள் அது மிகவும் நேர்மையான, நல்ல முயல் அதை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள், அந்த விவசாயி கூறியதைக் கேட்ட மொத்த முயல்களும் அப்போதுதான் அந்த தாய்முயல் உங்களுக்கு முன்பே கூறியது அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து கொண்டனர். அந்த தாய்முயலிடம் தங்களை காப்பாற்றும் படியும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால் அந்த தாய் முயலும் விவசாயியிடம் ஐயா அவர்களை இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள் இனிமேல் அவர்கள் செய்யாமல் இருப்பார்கள் என்று கேட்டது. எந்த விவசாயியும் கோபத்தில் இருந்ததால் நீ அமைதியாக இரு அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறினார். அத்துடன் அந்த தாய் முயலிடம் இவர்கள் ஒருமுறை திருடினார்கள் அதுவே மிகப்பெரிய தவறு இருந்தாலும் சரி ஏதோ பரவாயில்லை என்று விட்டு விட்டேன் ஆனால் இவர்கள் தினசரி அதையே வாடிக்கையாக கொண்டிருந்ததோடு எனக்கும் தீங்கு விளைவிக்க நினைத்தார்கள் அதனால் இவர்களை நான் சும்மா விடமாட்டேன் அதோடு இவர்கள் எங்கே தங்கியிருந்தார்களோ அந்த இடத்திற்கு என்னை கூட்டிச் செல் என்று அந்த விவசாயி கேட்கவே அந்த தாய்முயலும் அந்த விவசாயி மற்றும் அவரது மகன்களை மற்றவர்களுடன் அவர்கள் இருந்த இடத்திற்கு கூட்டிச் சென்றார்கள்.
அந்த முயல்கள் இருந்த இடத்திற்கு விவசாயி அவருடைய மகன்கள் உடன் வந்து சேர்ந்த பிறகு அந்த இடத்தை சுற்றி பார்க்க ஆரம்பித்தார்.அப்பொழுது அந்த முயல்கள் இருந்த இடங்களில் எல்லாம் கேரட்கள் சரியாக சாப்பிடாமல் வீணாகி அழுகி கிடந்ததை பார்த்த உடன் மீண்டும் கோபமடைந்த அந்த விவசாயி அந்த முயல்களை ஆத்திரத்தில் கொம்புகளால் தாக்க ஆரம்பித்தார். அப்போது அவர் உங்களுக்கு தேவையான அளவில் கொண்டு வந்திருந்தாலும் பரவாயில்லை நீங்கள் இவ்வளவு கேரட்களை திருடி வந்ததுடன் இல்லாமல் அவற்றை வீனடித்திருக்கிறீர்கள். இந்தத் தாய் முயலும் உங்களுடன் இருக்கிறதுதானே ஆனால் அது நேர்மையாகவும் உண்மையாகவும் ,உங்களைப்போல் திருடாமலும் இருக்கிறது அத்துடன் நான் கொடுத்து அனுப்பிய கேரட்களையும் வீணடிக்கவும் இல்லை. அதோடு அந்த தாய் முயல் உங்களைப்போல் திருடாமல் அதற்கு தேவைப்படும்போது என்னிடம் வந்து கேட்டு பெற்றுக்கொண்டது அதனால் நான் இனி வரும் காலங்களில் அந்தத்தாய் முயலுக்கும் அதன் பிள்ளைகளுக்கும் எப்போதும் உதவி செய்வேன் என்று கூறிக்கொண்டிருந்தார்.
வலையில் அடைபட்டிருந்த முயல்கள் என்ன செய்வது என்றே புரியாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்தது அதோடு தாய் முயலிடம் நீங்கள் எவ்வளவு அறிவுரை சொல்லியும் நாங்கள் கேட்கவில்லை ! நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என்று உங்களை கேலி செய்தோம் , ஆனால் இனிமேல் அவ்வாறு செய்யமாட்டோம் தயவுசெய்து எங்களை இந்த விவசாயிடம் சொல்லி எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். தாய் முழலும் அந்த விவசாயிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் கேட்பதாக தெரியவில்லை. அவர் இந்த தாய் முயளிடம் நீ கவலை படாதே உனக்கும் உன்னுடைய பிள்ளைகளுக்கும் என்ன தேவை இருந்தாலும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் வரலாம் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என்று கூறியதுடன் அவர்கள் கொண்டு வந்திருந்த சில கேரட்களையும அவர்களுக்கு கொடுத்தார். ஆனால் இந்த முயல்களுக்கும் நான் அவ்வாறு திருடாமல் என்னுடன் வந்தாள் உங்களுக்கு தருவதுபோல் தருகிறேன் என்று சொல்லியும் அதைக் கேட்காமல் திருடி அதனால் இனிமேல் அவர்களை மன்னித்து விட்டாலும் ஒருபோதும் திருந்த மாட்டார்கள்.அதனால் இந்த வலையிலுள்ள முயல்களை நான் எடுத்துச்சென்று சந்தையில் விற்கப் போகிறேன் என்று கூறியவாறு தனது பிள்ளைகளுடன் அந்த முயல்களை தூக்கிக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தார். அந்த முயல்களும் நாங்கள் தவறு செய்து விட்டோம் இனி திருட மாட்டோம் எந்த தவறும் செய்ய மாட்டோம் எங்களை மன்னித்து விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்கள். ஆனாலும் எதையும் அந்த விவசாயியும் அவர்களது மகன்களும் கண்டுகொள்ளாமல் சந்தையை நோக்கி நடக்கத் தொடங்கினர். தாய் முயலும் வலையில் அடைபட்டு அழுது கொண்டிருந்த முயல்களைப் பார்த்து கண்கலங்கியவாறு நீங்கள் உங்களுடைய தேவைக்கு மீறி ஆசைப்பட்ட தாலும் அடுத்தவர் பொருட்களை திருடியதாலும் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கிறீர்கள் இனி யாராலும் எதுவும் செய்ய முடியாது
அப்போது அறிவுரை சொல்லும் பொழுதே கேட்டிருந்தால் இந்த நிலை உங்களுக்கு வந்திருக்காது என்றவாறு தன்னுடைய குட்டிகளை நோக்கி சென்றது. பிறகு தன்னுடைய குட்டிகளிடம் நீங்கள் எப்போதும் இவர்களைப் போல் தேவைக்கு மீறி ஆசை கொள்வதும் அடுத்தவர் பொருட்களை திருடுவதும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது முடிந்தவரை நேர்மையாகவும் உண்மையாகவும் எப்பொழுதும் வாழ வேண்டும் அதுதான் நம்மை எப்போதும் வாழ வைக்கும்,மேலும் மேலும் உயர்த்தும் என்று தன் மடியில் தனது குட்டிகளை கிடத்திக்கொண்டு அறிவுரை கூறியது
அந்த குட்டிகளும் நீங்கள் சொல்வது போலவே இருப்போம் அம்மா என்று கூறியவாறு தூங்கி விட்டன.
MORAL : " அளவுக்கு மீறி ஆசைப்படுவதும் ,பிறர்பொருளை திருடுவதும் நிச்சயம் நம்மை ஒருபோதும் உயர்த்தி வாழ வைக்காது; நம்மை தாழ்த்தி வீழவே வைக்கும். "
0 Comments