தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசானது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் ஊரடங்கு நடைமுறையானது மக்களுக்கு தேவையான சில தளர்வுகள் உடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் கொரோனா தொட்டியின் பரவல் அதிகமாக இருந்ததன் காரணத்தினால் தமிழக அரசானது அனைத்து கட்சி தலைவர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் படியும், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் மே மாதம் 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அந்த முழு ஊரடங்கு காலமானது வருகின்ற 31 மே 2021 உடன் முடிவடைகிறது.
தற்போதைய நிலையை சீர்தூக்கிப் பார்த்த மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் காக்கும் பொருட்டு இந்தத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கானது மேலும் ஒரு வார காலத்திற்கு 7 ஜூன் 2021 காலை வரை நீட்டிக்கப்படும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இருந்த நடைமுறைகளுடன் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும் மளிகை பொருட்களை அந்தந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளால வாகனங்கள் அல்லது தள்ளு வண்டிகள் மூலம் முறையான உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யவும், முறையில் வாடிக்கையாளர் கூறும் பொருட்களை அவர்கள் வீட்டிற்குச் சென்று கொடுப்பதற்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை புதிய அளிக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.
மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்கள் மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு கொரோனாவை வெற்றிகொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கண்டிருக்கிறார்.
நமது தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் காத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமையாகும் எனவே அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப அனைவரும் வீட்டிலேயே இருப்போம், கூட்டம் கூடாமல் தனிமையில் இருப்போம், முகக்கவசம் அணிவோம், மிகவும் அவசரத் தேவை என்றால் மட்டுமே சரியான முன் அனுமதியுடன் வெளியே செல்வோம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம், பொது சானிடைசர் மற்றும் சோப்பினை கொண்டு சுத்தம் செய்து கொள்வோம், நாமும் பாதுகாப்பாய் இருப்போம் மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்கச் செய்வோம்! நமது அரசின் வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றி நமது இந்த சூழ்நிலையை வெற்றி கொள்வோம்.
0 Comments