மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்ட முதல் 5 முக்கிய கோப்புகள்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை இன்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றது. மாண்புமிகு திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகவும், அவருடன் 33 அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற விழாவில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றவுடன் தலைமை செயலகத்தில் இருந்து 5 மிக முக்கியமான அறிவிப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்ட முதல் 5 முக்கிய அறிவிப்புகள் விவரம்:
1-ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் மூன்று குறைக்கப்படும் என்று மிக முக்கியமான அனைத்து மக்களுக்கும் பயன்பட கூடிய முதல் கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார்.
2-அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்ற முக்கியமான கோப்பில் கையெழுத்திட்டார்.
3-தனியார் மருத்துவமனைகளில் அனைத்து மக்களுக்கும் கொரோனா நோய்க்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் மேலும் அதற்கு ஏற்படும் மருத்துவ செலவினத்தை அரசே ஏற்கும் என்ற மிக மிக முக்கியமான கோப்பில் இன்று கையெழுத்திட்டார்.
4-கொரோனா பாதிப்பின் காரணத்தினால் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ 4000/- வழங்கப்படும். அவற்றுள் முதல் தவணையாக ரூ 2000 ம் . இரண்டாம் தவணையாக ரூ 2000/- ம் வழங்கப்படும் என்ற கோப்பிலும் கையெழுத்திட்டார்.
5-தமிழக மக்களிடம் இருந்து பெறப்படும் பல்வேறு புகாருக்கான மனுக்களின் மீதான விசாரணை மற்றும் தீர்விற்கு 100 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் பொருட்டு ஒரு புதிய துறைதனை உருவாக்கும் கோப்பிலும் கையெழுத்திட்டார்.
0 Comments