TN TRB Special Teachers Recruitment Notification For 1598 Posts-Apply Now
தமிழக ஆசிரியர் தேர்வு (TRB- Teachers Recruitment Board) வாரியம் 2021 ம் ஆண்டிற்கான 1598 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி தையல்,ஓவியம், இசை மற்றும் உடற்கல்வி பயிற்றுநர்கள் போன்ற பல்வேறு ஆசிரிய பதவிகள் நிரப்பப்பட உள்ளது எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் www.trb.tn.nic.in வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
TRB Special Teachers Recruitment Notification-2021 |
விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தினங்கள்.
1-போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் : 26/02/2021
2-இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க துவங்கும் நாள் : 31/03/2021
3-இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் : 25/04/2021
4-எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 27/08/2021
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி ( http://www.trb.tn.nic.in ). விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினர்களுக்காண விண்ணப்பக் கட்டணம்
- Rs -500/-
Sc/SCA/ST மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான விண்ணப்பக் கட்டணம் - Rs - 250/-
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணங்களை பின்வரும் NET BANKING, DEBIT CARD, CREDIT CARD Payments என்ற ஏதேனும் ஒரு முறையின் மூலமே செலுத்தமுடியும் இதைத் தவிர்த்த மற்ற முறையிலான கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது நிராகரிக்கப்படும்.
தேர்வு முறை
போட்டித்தேர்வானது 95 மதிப்பெண்களை கொண்டது. அனைத்து வினாக்களும் ஒரு மதிப்பெண்களைக் கொண்ட கொள்குறி வகை வினா வகையைச் சார்ந்தது.இதில் 40% மதிப்பெண்களை எழுத்து தேர்வில் பெற்றவர்கள் பணிநியமனம் பெற தகுதியானவர்கள்.
இவற்றில் SC, SCA பிரிவினர்களுக்கு 35% மதிப்பெண்களும்,
ST பிரிவினர்களுக்கு 30% மதிப்பெண்களும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பணி அமர்த்தப் படுவார்கள். தேர்வு செய்யப்படும் முறை மற்றும் கணிப்பொறி வழியிலான எழுத்துத் தேர்வு பற்றிய விரிவான தகவல்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டிய சான்றுகள்.
சிறப்பாசிரியர் பதவிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் சான்றுகளின் அசல் மற்றும் நகல் களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் பதவிக்குரிய பொது மற்றும் சிறப்பு கல்வி தகுதிக்கான அனைத்து சான்றுகள். - General And Special Education Certificates Originals And Copies
*ஜாதிச் சான்று -Community Certificate
*தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் -Tamil Medium Certificate
*ஊனமுற்றோருக்கான குறிப்பிட்ட துறையிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் - Disability Certificate
பொதுவான குறிப்புகள்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சிறப்பாசிரியர் பதவி மற்றும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஆகிய பல்வேறு பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக சில அடிப்படையான தகவல்களை அறிந்திருப்பது அவசியம்.
*விண்ணப்பதாரர்கள் தற்சமயம் இயக்கத்தில் உளள மின்னஞ்சல் முகவரியை வைத்திருக்க வேவேண்டும்.இல்லாதவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ளலாம்.
*தொலைபேசி எண்
*விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆனது சமீபத்தில் எடுக்கப்பட்டதாகவும் அது ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு அதனுடைய அளவு 20 kb முதல் 60 kb குள் இருப்பதாக இருக்க வேண்டும். அதற்கு மேலான அளவு உள்ள புகைப்படங்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கும்போது ஏற்றுக் கொள்ளப்படாது.
*விண்ணப்பதாரர்களின் கையொப்பம் ஆனது 10kb முதல் 30kb குள் இருக்கும்படியாக ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
*விண்ணப்பதாரர்கள் இணையாக விண்ணப்பிக்கும்பது
அவர்களது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் விண்ணப்பம் செயல் அற்றதாகிவிடும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் நேரம்.
விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்ட முறைகளை பயன்படுத்தி இணைய வழியாக எந்த பதவிக்கு போட்டியிடுகிறார்களோ அதற்குரிய முறையான சான்றுகளுடன் இனைய வழியில் 25/04/2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும் அதன்பிறகு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
0 Comments