தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் TRB - காலியாக உள்ள 2098 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களை தேர்வு செய்ய 2021 ம் ஆண்டிற்கான போட்டித் தேர்வை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது 2020 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2098
(இவற்றுள் 1863 Current Vacancies 235 Backlink Vacancies) பணியிடங்கள் வெவ்வேறு பாடங்களில் நியமிக்கப்பட உள்ளது எனவே கல்வித்தகுதி உள்ள தகுதியான நபர்களிடமிரந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் மட்டுமே வரவேற்கப்படுகின்றது. மேலும் போட்டித் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.3.2001 மாலை 5 மணிவரை மட்டுமே ஆகும். மேலும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று புதிதாக பணி நியமனம் செய்யப்படுவோர்க்கு Rs - 36,900/- - 116600/- ( level 18) என்ற அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.
விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தினங்கள்.
1-போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் : 11/02/2021
2-இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க துவங்கும் நாள் : 01/03/2021
3-இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் : 25/03/2021
4-எழுத்துத் தேர்வு நடைபெறும் நாட்கள் : 26/06/2021 & 27/06/2021
பாடவாரியான காலியிடங்களின் விவரம்
தமிழ் - 268 + 11
ஆங்கிலம் - 190 + 21
கணிதம் - 110 + 22
இயற்பியல் - 94 + 19
வேதியியல் - 177 + 25
விலங்கியல் - 106 + 9
தாவரவியல் - 89 + 16
பொருளியல் - 287 + 70
வணிகவியல் - 310 + 17
வரலாறு - 112 + 9
புவியியல் - 12 + 4
அரசியல் அறிவியல் - 14 + 8
ஹோம் அறிவியல் - 3 + 0
இந்தியக் கலாச்சாரம் - 3 + 1
உயிர் வேதியியல் - 1 + 1
உடற்கல்வி இயக்குனர் (நிலை -1 ) - 39 + 2
கணிப்பொறி பயிற்றுநர் ( நிலை -1) - 39 + 0
மற்றமொழி பாடங்கள் - 9 + 0
NOTE : மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பாடங்களுக்கும் எதிராக உள்ள காலிப் பணியிடங்களில் முதலில் வருவது Current Vacancy ஐயும் அதற்கடுத்த + குறிக்கு அடுத்து வருவது Backlink Vacancy தனை குறிக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி ( http://www.trb.tn.nic.in )
மேலும் விண்ணப்பித்த பிறகு அவற்றின் தகவல்களை பத்திரமாக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் அவற்றை பணி நியமன ஆணை யின் போது சான்றிதழ் சரிபார்ப்பின் போது காண்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணங்களை பின்வரும் NET BANKING, DEBIT CARD, CREDIT CARD Payments என்ற ஏதேனும் ஒரு முறையின் மூலமே செலுத்தமுடியும் இதைத் தவிர்த்த மற்ற முறையிலான கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.அவ்வாறு செலுத்தினாலும் நிராகரிக்கப்படும்.
பொதுப் பிரிவினர்களுக்காண விண்ணப்பக் கட்டணம்
- Rs -500/-
Sc/SCA/ST மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான விண்ணப்பக் கட்டணம் - Rs - 250/-
தேர்வு முறை
போட்டித்தேர்வானது 150 மதிப்பெண்களை கொண்டது. அனைத்து வினாக்களும் ஒரு மதிப்பெண்களைக் கொண்ட கொள்குறி வகை வினா வகையைச் சார்ந்தது. இதில் 50% சதவீத மதிப்பெண்களைப் பெறுபவர்கள் நியமனம் பெற தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் , SC, SCA பிரிவினர்களுக்கு 45% மதிப்பெண்களும்,ST பிரிவினர்களுக்கு 40% மதிப்பெண்களும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.
You Can Also Read Useful Abbreviations List Useful For All Exams For The Letter A B C D E and F Here
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் அவர்களின் போட்டி தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும்,இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் போட்டித் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் குறித்தும் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் தேர்வு முடிவுகள் குறித்த அனைத்து விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும்.மேலும் இது குறித்த விரிவான விவரங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விளம்பர அறிவிப்பினை பார்வையிடவும்.
விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டிய சான்றுகள்.
- பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்கள்
- இளங்கலை பட்டப்படிப்பின் சான்றிதழ்கள்
- முதுகலை பட்டப் படிப்பின் சான்றிதழ்கள்
- b.ed பட்டப் படிப்பிற்கான சான்றிதழ்கள்
- M.P.Ed மற்றும் அதற்கு இணையான தகுதியுள்ள கல்வியின் சான்றிதழ்கள்
- ஜாதி சான்றிதழ் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் இருந்து பெறப்பட்டது
- தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்
- உடல் ஊனமுற்றவராக இருப்பின் அதற்குரிய சான்றிதழ்கள்
0 Comments