Social Science History One Mark Question And Answers In Tamil.
இந்தப் பதிவில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகி கொண்டிருப்பவர்களுக்கும் மற்றும் நமது மாநில, தேசிய மற்றும் உலகளாவிய வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் பயன்படும் வகையில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை பாடவாரியாக நாம் இனி வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக காண இருக்கின்றோம். அதன் முதற்கட்டமாக தற்போது பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் வரலாறு பகுதியில் இடம்பெற்றுள்ள முதல்படமான " முதல் உலகப் போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் " என்ற பாடத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான நிகழ்வுகள், வருடங்கள், தலைவர்கள், உடன்படிக்கைகள் மற்றும் பிற குறிப்பிடும்படியான கருத்துக்களை ஒரு மதிப்பெண் வினா விடை வடிவில் இங்கே படித்து பயன்பெறலாம்.
தற்பொழுது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் முதன்மையாக அதிகப்படியான வினாக்களை சமூக அறிவியல் பாடமானது கொண்டுள்ளது எனவே இந்த பதிவானது போட்டி தேர்விற்கு தயார் ஆகி கொண்டிருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
வரலாறு
பாடம் :1 - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும்.
1-உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த வருடம் எது?
Ans : 1914
2-முதல் உலகப் போர் எப்போது தொடங்கியது?
Ans : 1914
3-வரலாற்றாசிரியர்கள் 1914ஆம் ஆண்டு நீண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு என அழைக்க காரணம்?
Ans : முதல் உலகப்போர் (1914) இருபதாம் நூற்றாண்டின் போக்கையே தீர்மானித்தது.
4-முதலாம் உலகப்போரின் முடிவில் சிதறுண்டு போன மூன்று பேரரசுகள் எவை?
Ans : ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி மற்றும் உதுமானியப் பேரரசு
5-முதலாம் உலகப் போரின் மிகப்பெரிய விளைவாக கருதப்படுவது?
Ans : ரஷ்யப் புரட்சி
6-முதலாளித்துவம் சார்ந்த தொழில்களின் நோக்கம்?
Ans : மிகை உற்பத்தி செய்வதாகும்
7-ஐரோப்பிய நாடுகளிடையே ஒப்புயர்வற்ற இடத்தை வகிப்பது விடு உலக முதலாளித்துவத்துக்கு தலைமையிடமாகவும் விளங்கிய நாடு எது ?
Ans : இங்கிலாந்து
8-சுதந்திர வணிகம் என்னும் பழைய கோட்பாடு சரிந்து விழுந்ததால் அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றம்?
Ans : கூட்டு நிறுவனங்கள்
9-ஜெர்மனியில் வணிக கூட்டமைப்புகள் எப்போது உருவாயின?
Ans : 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்
10-முதலாளித்துவத்தின் உச்ச கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூறியவர்?
Ans : லெனின்
11-பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகின் மிகச் சக்தி வாய்ந்த நாடுகளாக இருந்தவை?
Ans : ஐரோப்பிய நாடுகள்
12-எந்த ஆண்டிற்குள் பெரும்பாலான ஆசிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளால் காலனிமயமாக்கப்பட்டது?
Ans : 1880
13-ஐரோப்பாவில் 1870 ஆம் ஆண்டிற்குப் பின்னர் காலனி ஆதிக்கப் போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் எவை எவை?
Ans : இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, மற்றும் ஜெர்மனி.
14-இங்கிலாந்து பேரரசு தொழில்துறையில் இவ்விரு நாடுகளுக்கிடையே போட்டியிட வேண்டியிருந்தது?
Ans : ஜெர்மனி மற்றும் அமெரிக்கா
15-மெய்ஜி சகாப்தம் என்று அழைக்கப்படும் காலகட்டம் எது?
Ans : 1867 - 1912
16-1894 ஆம் ஆண்டில் ஜப்பான் எந்த நாட்டுடன் போர் தொடுத்தது?
Ans : சீனாவுடன்
17-சீனா ஜப்பான் இடையே போர் நடைபெற்ற ஆண்டு?
Ans : 1894-1895
18-1894 ஆம் ஆண்டு நடைபெற்ற சீன ஜப்பான் போரில் வெற்றி பெற்ற நாடு எது?
Ans : ஜப்பான்
19-ஜப்பான் ஆர்த்தர் துறை முகத்துடன் இணைத்துக்கொண்ட தீபகற்பத்தின் பெயர் என்ன?
Ans : லியோடங்
20-ஜப்பான் இங்கிலாந்துடன் உடன்பாடு செய்து கொண்ட வருடம் ?
Ans : 1902
21-ரஷ்ய ஜப்பான் போர் நடைபெற்ற வருடம் எது?
Ans : 1904
22-1904ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்ய ஜப்பானிய போரில் வெற்றி பெற்ற நாடு எது?
Ans : ஜப்பான்
23-ஜப்பான் கொரியாவை தன்னுடன் இணைத்துக் கண்ட ஆண்டு?
Ans : 1910
24-சீனாவில் மஞ்சு அரசவம்சம் வீழ்ச்சியுற்ற ஆண்டு?
Ans : 1912
25- 1876 ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பிரிக்காவின் எத்தனை சதவீத பகுதிகள் ஐரோப்பாவின் கட்டுப்பாட்டில் இருந்தது?
Ans : 10 % மட்டுமே
26-ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் காலனியாக மாற்றப்பட்ட ஆண்டு?
Ans : 1900
27-ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும் பகுதிகளை தங்களுக்குள்ளாகவே பகிர்ந்து கொண்ட நாடுகள் எவை?
Ans : இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம்
28-இங்கிலாந்து,பிரான்ஸ் ,ரஷ்யா ,ஜெர்மனி ஆகிய நாடுகள் சீனாவில் தங்களுக்கென நிறுவியது ?
Ans : செல்வாக்கு மண்டலங்கள்.
29-எந்த இரு நாடுகளை கைப்பற்ற பிரான்ஸ் ஒரு நெடிய கடுமையான போரைச் செய்தது?
Ans : அல்ஜீரியா மற்றும் செனகல்
30-இங்கிலாந்து ஜூலுக்களால் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு?
Ans : 1879
31-இங்கிலாந்து சூடான் படைகளால் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு?
Ans : 1884
32-1896ஆம் ஆண்டு அயோவா போர்க்களத்தில் எத்தியோப்பிய படைகளிடம் பெரும் தோல்வியை சந்தித்த நாடு எது?
Ans : இத்தாலி
33-ஐரோப்பிய வல்லரசுகளின் 5 அரசுகள் இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாக பிரிந்து ஆண்டு?
Ans : 1900
34-ஐரோப்பாவின் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட நாடுகள்?
Ans : ஜெர்மனி ,ஆஸ்திரிய-ஹங்கேரி மற்றும் இத்தாலி.
35-1882ஆம் ஆண்டு பிஸ்மார்க்கின் வழிகாட்டுதலின்படி நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கை?
Ans : மூவர் உடன்படிக்கை
36-1882ஆம் ஆண்டு மைய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மூவர் உடன்படிக்கை யாருடைய வழிகாட்டுதலின்படி ஏற்பட்டது?
Ans : பிஸ்மார்க்
37-1892 ஆம் ஆண்டு ஏற்பட்ட மூவர் உடன்படிக்கையின்படி இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் துனைபுரிதல் வேண்டும்?
Ans : ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா
38-1894 ஆம் ஆண்டு மேற்கொண்ட பரஸ்பர உடன்படிக்கையானது எவ்விரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டது?
Ans : பிரான்ஸ் மற்றும் ரஷ்யா
39-பிரான்ஸ் ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்திருந்தால் ஜப்பான் எந்த நாட்டுடன் இணைய விரும்பியது?
Ans : இங்கிலாந்து
40-பிரான்சை இங்கிலாந்துடன் உடன்படிக்கை செய்துகொள்ள தூண்டிய உடன்படிக்கை எது?
Ans : ஆங்கிலோ- ஜப்பான்
41-பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையே நட்புறவு ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு?
Ans : 1904
42-போர் வெடிப்பதற்கு இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்சின் எத்தகைய நாட்டு பற்று காரணமாக இருந்தது?
Ans : இங்கிலாந்து- ஆரவாரமான நாட்டுப்பற்று
பிரான்ஸ் -அதி தீவிர பற்று
ஜெர்மனி -வெறிகொண்ட நாட்டுப்பற்று.
43-ஜெர்மனியே உலகத்தின் தலைவன் என பிரகடனம் செய்தவர் யார்?
Ans : ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம்
44-டிரபால்கர் போர் நடைபெற்ற ஆண்டு?
Ans : 1805
45-1805 ஆம் ஆண்டில் நடைபெற்ற டிரபால்கர் போரில் தோல்வி அடைந்தவர் யார்?
Ans : நெப்போலியன்
46-1871ஆம் ஆண்டில் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு அல்சேஸ்,லொரைன் பகுதிகளை இழந்த நாடு எது?
Ans : பிரான்ஸ்
47-துருக்கியில் வலுவான நவீன அரசை உருவாக்க இளம் துருக்கியர் புரட்சி நடைபெற்ற ஆண்டு?
Ans : 1908
48-ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா பால்கன் பகுதியில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது எது?
Ans : இளம் துருக்கியர் புரட்சி 1908
49-பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் தென்மேற்கு ஐரோப்பாவில் வலிமை வாய்ந்த நாடாக திகழ்ந்தது எது?
Ans : துருக்கி
50-மாசிடோனியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போட்டியிட்ட நாடுகள்?
Ans : கிரீஸ், செர்பியா, பல்கேரியா மற்றும் மாண்டி நீக்ரோ.
51-பால்கன் கழகம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு மற்றும் நாள்?
Ans : 1912 மார்ச் திங்கள்
52-முதல் பால்கன் போர் நடைபெற்ற ஆண்டு?
Ans : 1912-1913
53-1913 மே திங்களில் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன?
Ans : லண்டன் உடன்படிக்கை
54-1913 மே திங்களில் கையெழுத்தான லண்டன் உடன்படிக்கையின்படி உருவான புதிய நாடு எது?
Ans : அல்பேனியா
55-1913 ஆகஸ்ட் திங்களில் கையெயுத்திடப்பட்ட உடன்படிக்கையின் பெயர் என்ன?
Ans : புகாரெஸ்ட் உடன்படிக்கை
56-புகாரெஸ்ட் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு?
Ans : 1913 ஆகஸ்ட் திங்கள்
57-இரண்டாம் பால்கன் போரின் இறுதியில் உருவான உடன்படிக்கை?
Ans : புகாரெஸ்ட் உடன்படிக்கை
58-1914 ஜூன் 28-ஆம் நாள் ஆஸ்திரிய பேரரசின் மகன் பிரான்ஸ் பெர்டினாண்டு யாரால் கொலை செய்யப்பட்டார்?
Ans : பிரின்ஸப் என்ற பாஸ்னிய செர்பியனால்
59-ஆஸ்திரியப் பேரரசின் மகன் பிரான்ஸ் பெர்டினாண்டு பிரின்ஸ் என்ற பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்ட ஆண்டு?
Ans : 1914 ஜீன் 28
60-முதலாம் உலகப்போரில் போரிடும் நாடுகள் எத்தனை அணிகளாக பிரிந்து இருந்தன?
Ans : இரண்டு
61-மைய நாடுகள் அணியில் இடம்பெற்றிருந்த நாடுகள் எவை?
Ans : ஜெர்மனி,ஆஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா,
62-ஜெர்மனி ஆஸ்திரியா ஹங்கேரி துருக்கி மற்றும் பல்கேரியா நாடுகளில் கூட்டுச் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்பட்டது?
Ans : மைய நாடுகள்
63-பிரான்ஸ்,இங்கிலாந்து, மற்றும் இத்தாலி நாடுகளுக்கிடையில் லண்டனில் ரகசிய ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டு?
Ans : 1915
64-1915ஆம் ஆண்டு லண்டனில் எந்த நாடுகளுக்கு இடையில் ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தானது?
Ans : பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் இத்தாலி.
65-நேச நாடுகளில் அங்கம் வகித்த நாடுகளின் எண்ணிக்கை?
Ans : ஒன்பது ( 9 )
66-மைய நாடுகளை முதலாம் உலகப் போரில் எதிர்த்த நாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Ans : நேச நாடுகள்
67-நேச நாடுகளில் இடம்பெற்றிருந்த நாடுகள் எவை எவை?
Ans : ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன்,இத்தாலி,அமெரிக்கா, பெல்ஜியம், ருமேனியா, செர்பியா மற்றும் கிரீஸ்.
68-நாடுகள் அனைத்தும் கூடிப்பேசி உலக அமைதிக்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென ஆலோசனை வழங்கியவர்?
Ans : ரஷ்ய பேரரசர் இரண்டாம் நிக்கோலஸ்
69-தி ஹேக் நகரம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
Ans : ஹாலந்து
70-பதுங்குகுழி போரின் தொடக்கமாக அமைந்த போர் எது?
Ans : மார்ன் போர்
71-ஜெர்மனியர் பிரான்சின் முக்கிய கோட்டையான வெர்டனை தாக்கிய ஆண்டு?
Ans : 1916
72-வெல்டன் போரில் ஜெர்மானியருக்கு எதிராக இங்கிலாந்து தாக்குதல் நடத்திய இடம்?
Ans : சோம்மி நதிக்கரை
73-முதல் உலகப் போரில் நேச நாடுகளை வெற்றி பெறும் என்பதை தீர்மானித்த போர் எது?
Ans : வெர்டன் போர்
74-அக்டோபர் புரட்சி நடைபெற்ற ஆண்டு?
Ans : 1917
75-1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் மூலம் பதவி இழந்த மன்னர் யார்?
Ans : சார் மன்னர்
76-பிரெஸ்ட் -லிடோவஸ்க் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு?
Ans : 1918 மார்ச் 3
77-1918 ம் ஆண்டில் நடைபெற்ற பிரெஸட்
- லிடோவஸ்க் உடன்படிக்கை எவ்விரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
Ans - ரஷ்யா மற்றும் ஜெர்மனி
78-ருமேனியா நேச நாடுகள் அணியில் இணைந்த ஆண்டு எது?
Ans : 1916 ஆகஸ்ட்
79-இத்தாலி நேச நாடுகள் அணியில் இணைந்த ஆண்டு?
Ans : 1916 மே திங்கள்
80-முதலாம் உலகப்போரில் விஷ வாயுவை அறிமுகப்படுத்திய நாடு எது?
Ans : ஜெர்மனி
81-1916 இல் வட கடலில் நடந்த கடற்போரின் பெயர் என்ன?
Ans : ஜீட்லேண்டு போர்
82-1916 இல் வடகடலில் நடைபெற்ற கடல் போரில் வெற்றி பெற்ற நாடு எது?
Ans : இங்கிலாந்து
83-முதலாம் உலகப்போரில் சென்னை மீது குண்டுகளை வீசிய கப்பல் எது?
Ans : எம்டன் கப்பல்
84-ஜெர்மனியில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கப்பலின் பெயர் என்ன?
Ans : லூசியானா கப்பல்
85-ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போர் பிரகடனம் செய்த ஆண்டு?
Ans : 1917 ஏப்ரல் திங்கள்
86-ஜெர்மனிக்கு எதிராக 1917-ஆம் ஆண்டு போர் பிரகடனம் செய்த அமெரிக்க குடியரசுத் தலைவர் யார்?
Ans : உட்ரோ வில்சன்
87-ஜெர்மனி முதலாம் உலகப் போரில் தோல்வியுற்று சரணடைந்த ஆண்டு?
Ans : 1918 நவம்பர்
88-முதலாம் உலகப் போர் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நாள்?
Ans : நவம்பர் 11
89-முதலாம் உலகப்போரின் முடிவில் பதவி விலகிய ஜெர்மானிய அரசர்?
Ans : கெய்சர் இரண்டாம் வில்லியம்
90-பாரிஸ் அமைதி மாநாடு தொடங்கிய ஆண்டு?
Anna : 1919 ஜனவரி
91-பாரிஸ் உடன்படிக்கையின் போது இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்தவர் யார்?
Ans : லாயிட் ஜார்ஜ்
92-பாரிசு உடன்படிக்கை 1919 இன் போது பிரான்சின் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
Ans : கிளமென்சோ
93-பாரிஸ் அமைதி உடன்படிக்கை கையெழுத்தான நாள்?
Ans :1919 ஜீன் 28
94-வெர்செய்ல்ஸ் கண்ணாடி மாளிகையில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை?
Ans : பாரிஸ் உடன்படிக்கை ,1919 ஜீன் 28
95-புகாரெஸ்ட் உடன்படிக்கை எவ்விரு நாடுகளுக்கிடையே கைழெழுத்திடப்பட்டது?
Ans : பல்கேரியா மற்றும் ஜெர்மனி
96-14 அம்ச கோட்பாடுகளை வெளியிட்டவர் யார்?
Ans : உட்ரோ வில்சன்
97-முதலாம் உலகப்போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது?
Ans : நான்கு ஆண்டுகள்
98-முதலாம் உலகப்போரின் 4 ஆண்டுகளில் மாண்டவர்களின் மொத்த எண்ணிக்கை?
Ans : 8 மில்லியன் மக்கள்,( 80லட்சம்)
99-1918 ஆம் ஆண்டு பல மில்லியன் மக்களை காவு வாங்கிய நோய்?
Ans : இன்ஃபுளூயன்ஸா
100-கடன்பட்ட நாடாக முதலாம் உலகப் போரில் நுழைந்து உலகிற்கே கடன் கொடுக்கும் நாடாக போரின் முடிவில் வளர்ந்த நாடு எது?
Ans : அமெரிக்கா
இந்தப் பதிவின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.
0 Comments