Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Kids Rhymes In Tamil Collection - தமிழ் குழந்தை பாடல்கள் தொகுப்பு -1 | brightboard.net | MOON BOSS

RHYMES AND SONGS COLLECTIONS FOR KIDS IN TAMIL


Tamil Kids Rhymes And Songs Collections brightboard.net
www.brightboard.net


Rhymes for kids in Tamil We can hear this term and nursery rhymes and songs for children in english or Songs and rhymes for kids in english collection etc. Usually kids like rhymes a lot we can see their involvement and body gesture while they recite. Children like to sing the rhymes and songs very much with action. Kids rhymes in english or kids rhymes in Tamil keep them active, engaged and motivated, it helps them for improving their memory power, improve their speaking and learning ability of the language. Many poems, songs and rhymes are used by millions of people around the world in order to entertain and happy their children during their leisure times. We can see a lot of kids rhymes in each and every languages. Now in this article we are going to introduce some of the fun and action filled kids rhymes collection in Tamil language. Tamil kids rhymes are very famous among the kids to elders of all the age groups, When the rhymes are sung with proper tune, rhythm, stress, music and voice it will surely mesmerize the kids, make them happy and active. So here we have created our own rhymes and songs for the kids in Tamil language( none of the materials written in this article are copied or gathered from any other resources. The following Rhymes and songs collection for kids in Tamil are own creation of our www.brightboard.net Boss team only. So please don't copy or use this materials without getting proper permission from us). You can make your own tune and sing for them, they are very easy to sing with action, We can easily make the children to sing and memorize the poems and rhymes in Tamil language. It will not only help them to learn Tamil, removing speaking difficulties but also helps to improve the memory power ans much more.
Here you can read the kids rhymes and songs collection in Tamil.

LIST OF KIDS RHYMES / SONGS- குழந்தை பாடல்கள் வரிசை .

1- நிலா நிலா வண்ண நிலா
  MOON RHYME IN TAMIL

2- குட்டிப் பாப்பா 
 KUTTY PAPA RHYME 

3- வெண்டைக்காய் குழந்தை பாடல்
 LADIES FINGER KIDS RHYME 

4-பொம்மையே பொம்மையே
  TOYS- BOMMAIYE BOMMAIYE RHYME IN TAMIL 

5- அதோ பார் கரடி
 ATHO PAAR GARADI BEAR RHYME IN TAMIL 

6- கொய்யா பழம்
  GUAVA FRUITS RHYME IN TAMIL  

7- மீனே மீனே நீந்தி வா
 MEENEY MEENEY- FISH RHYME IN TAMIL 

8- புலியின் கதையை கேளடா 
PULIYIN KATHAIYAI KELADA- TIGER RHYME IN TAMIL 

9- ஓ மரமே மரமே
 O MARAMEY MARAMEY -TREES RHYME IN TAMIL 

10- குவா குவா குட்டி பாப்பா 
KUVA KUVA KUTTI PAPA RHYME / SONG FOR KIDS IN TAMIL 

11- என் வீடு குழந்தை பாடல்
 MY HOUSE RHYME FOR KIDS IN TAMIL 

12- வண்ண வண்ண பலூன் 
VANNA VANNA BALOON- COLOURFUL BALLOONS RHYME IN TAMIL 

13-ராமு சோமு இங்கே வாங்க
RAMU SOMU INGEY VAANGA -Daily Routine Activities Kids Rhyme In Tamil

14- எறும்பைப் பார் எறும்பைப் பார் 
ERUMBAI PAAR ERUMBAI PAAR- Ant Rhyme For Kids In Tamil


15-மேகமே கரு மேகமே
Megamey Karu Megamey - Beautiful  " Clouds " Rhyme For Kids In Tamil



தமிழ் குழந்தை பாடல்கள் தொகுப்பு


1- நிலா நிலா வண்ண நிலா

 ( MOON RHYME IN TAMIL)

நிலா நிலா வண்ண நிலா
நீ வானத்தில் இருக்கும் வட்ட நிலா

பூமி கோளைச் சுற்றுகிறாய்
என் நெஞ்சில் இருக்கும் வெள்ளி நிலா

அழகு பதுமை நீதானே
பிறர் மனதை ஆள்வதும் நீதானே 

இரவில் நன்கு தெரிகிறாய்
நான் போகும் இடம் வருகிறாய்

தேய் பிறையில் கருமையாகி
வளர் பிறையில் ஒளிர்கிறாய் 

குட்டி குழந்தை அழுகும் போது
உணவு ஊட்ட வருகிறாய்

பல கவிஞன் கவிதை எழுதும் 
கருப்பொருளாய் இருக்கிறாய்

சூரியன் மறைந்த பின்னரே -நீ
உன் பணியை தொடர்கின்றாய்

நன்மை,தீமை கலந்தே
வாழ்க்கை என்று சொல்கின்றாய்

பவுர்ணமி நிலவாக 
இவ்வுலகை ஆள்கிறாய்!

நிலா நிலா வண்ண நிலா
நீ வானத்தில் இருக்கும் வட்ட நிலா
நிலா நிலா வண்ண நிலா
நீ எங்கள் வீட்டுச் செல்ல நிலா!

2- குட்டிப் பாப்பா 

( KUTTY PAPA RHYME )

குட்டிப் பாப்பா குட்டிப் பாப்பா
என்ன செய்றீங்க
நான் துள்ளி துள்ளி குதித்து
ஆடப்போறேங்க !

செல்லக்குட்டியே செல்லக்குட்டியே
என்ன சொல்றீங்க
என் மழலை மொழி வார்த்தையால
அம்மா சொல்றேங்க!

செங்கரும்பே செங்கரும்பே
எங்கே போறீங்க
நான் பள்ளிக்கூடம் சென்று நல்லா
படிக்கப் போறேங்க.

மான்குட்டியே மான்குட்டியே 
துள்ளி ஓடிவா
நாம் எல்லோரும் சேர்ந்து 
இப்போ படிக்கச் செல்லலாம்.


Also Read : Useful GK Question And Answers In Tamil

3- வெண்டைக்காய் குழந்தை பாடல்

( LADIES FINGER KIDS RHYME )

வெண்டக்காய் வெண்டக்காய்
இது செடியில் காய்க்கும் வெண்டக்காய்

பச்சை நிற வெண்டக்காய்
இது பசியை போக்கும் வெண்டக்காய்

செடியை தொட்டால் கையரிக்கும்
கடித்து தின்றால் வாய் இனிக்கும்

வழவழப்பாய் இருந்தாலும்
வளம் நிறைந்த சத்தளிக்கும்

நீரிழிவு,இரத்தசோகை
கொழுப்பை எல்லாம் விரட்டிவிடும்

நினைவாற்றல் அதிகம் தந்து
புத்திசாலி ஆக்கிவிடும்

நாமும் வெண்டை உண்ணிடலாம்
நலமாய் என்றும் வாழ்ந்திடலாம் !



4-பொம்மையே பொம்மையே

  TOYS- BOMMAIYE BOMMAIYE RHYME IN TAMIL 

பொம்மையே பொம்மையே இது
நான் விரும்பும் பொம்மையே

எத்தனை எத்தனை வண்ணங்களில்
எங்கும் இருக்கும் பொம்மையே

சுட்டிக் குழந்தை விளையாட
செல்ல நண்பண் நீதானே

விலங்கு,பறவை ,மனிதணென 
விதவிதமாய் இருக்கின்றாய்

விரும்பி ஏற்கும் பரிசாக
எப்போதும் விலங்குகிறாய்

மனக்கவலை வரும்போது
மருந்தாக அமைகின்றாய்

அவரவரின் விருப்பம் போல
விளையாட உதவுகின்றாய்

நீ இருக்கும் இடத்திலெல்லாம்
கொள்ளை அழகு தருகின்றாய்

நீ அருகில் இருந்தாலே
மகிழ்வை வாரி இறைக்கின்றாய்

பொம்மையே பொம்மையே நீ
நான் விரும்பும் பொம்மையே!
பொம்மையே பொம்மையே
நீதான் என் செல்லப் பிள்ளையே !

Also Read : The King And His Loyal Dog Animal Moral Story

5- அதோ பார் கரடி

 ATHO PAAR GARADI BEAR RHYME IN TAMIL 

அதோ பார் கரடி
அது காட்டில் வாழும் கரடி
கருமை நிற உருவத்தில்
கண் சிமிட்டும் கரடி 
எகிரி எகிரி குதிக்கும் 
எதிரி வந்தால் முறைக்கும்
மரத்தில் ஏறி நின்று
தேனை உறிஞ்சி குடிக்கும்
இறை கையில் சிக்கினால்
நற நறவென கடிக்கும் !
அதோ பார் கரடி
அது காட்டில் வாழும் கரடி....

6- கொய்யா பழம்

  GUAVA FRUITS RHYME IN TAMIL  

குண்டு குண்டு கொய்யா
இது கடிக்க இனிக்கும் கொய்யா

தம்பி தங்கை எல்லோரும் 
விரும்பி உண்ணும் கொய்யா

கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்
அதை கிளியும்,அணிலும் கடிக்கும்

பச்சை, மஞ்சள், சிவப்பாக
பல வண்ணங்களில் கிடைக்கும்

சளி,இருமலை போக்கிவிடும்
சத்துக்கள் நிறைய தந்துவிடும்

கொய்யா கனியை உண்டுவந்தால்
எந்த நோயும் நெருங்காதே

விதையை கடிக்கும் பயத்தினால்
அதை வீனே தூக்கி எறியாதே

பழுத்த விதைகளை நட்டு வைத்தால்
அதில் புதிய செடியே வந்துவிடும்

கொய்யா கணியை உண்போமே 
என்றும் நலமாய் வாழ்வோமே !


7- மீனே மீனே நீந்தி வா

 MEENEY MEENEY- FISH RHYME IN TAMIL 

மீனே மீனே நீந்தி வா
என் குட்டி மீனே நீந்தி வா

கடல்,குட்டை ,ஓடையிலும்
கிணறு, கால்வாய்,ஏரியிலும்
மீனே நீயும் வாழ்கின்றாய்
நீந்தி நீந்தி செல்கின்றாய்

தப்பித் தவறி கால்வைத்தால்
காலைச் சூழ்ந்து கடிக்கின்றாய்
மீனவன் வீசும் வலைக்குள்ளே
மாட்டிக்கொண்டு தவிக்கின்றாய்

அயிலை,திருக்கை,குறவை என
பலவாய் நீயும் இருக்கின்றாய்
குழம்பி கிடக்கும் தண்ணீரை
நீ சுத்தம் செய்து வைக்கின்றாய்

வண்ண வண்ண மீனாக
உன்னை வீட்டில் வைத்து வளர்த்துவந்தால்
குழந்தைகள் குதூகலம் ஆகிடுமே
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கிடுமே!


8- புலியின் கதையை கேளடா 

PULIYIN KATHAIYAI KELADA- TIGER RHYME IN TAMIL 

குட்டிப் பயலே கேளடா
புலியின் கதையை கேளடா

கருப்பு, மஞ்சள் கோட்டுடனே
காட்டில் சுற்றிடும் துனையுடனே

எகிறி குதித்து விளையாடும்
எதிரியை கண்டால் பாய்ந்துவிடும்

யாரையும் கண்டு அஞ்சாது
இறையைக் கண்டால் விடாது 

கூறிய நகங்களால் பிடித்துவிடும்
தன் நீண்ட பற்களால் கடித்து விடும்

மரத்தின் மீதும் ஏறிவிடும்
ஒரே தாவில் கொன்றுவிடும் 

புலியும் பூனை பாரடா - அது
 நம் தேசிய விலங்கு தானடா !



9- ஓ மரமே மரமே

 O MARAMEY MARAMEY -TREES RHYME IN TAMIL 

ஓ மரமே மரமே என் மரமே
நீ மகிழ்வை தருவாய் அனுதினமே

குருவி, காக்கை, கிளியெல்லாம்
கூடு கட்டி வாழ்ந்திடுமே
குட்டிப் பசங்க நாங்கலெள்ளாம்
ஊஞ்சல் ஆடி மகிழ்வோமே ( ஓ மரமே....)

பூவும்,கனியும் தருகின்றாய்
நிழலால் ஓய்வை அளிக்கின்றாய்
 விரும்பி வளர்க்கும் யாவர்க்கும் -உன்
 வளங்களை வாரி தருகின்றாய் (ஓ மரமே )

சுத்தக் காற்றை தந்துவிட்டு -நீ
நச்சுக் காற்றை குடிக்கின்றாய்
எங்கோ போகும் மேகங்களை -நீ
தடுத்து மழையைத் தருகின்றாய்  ( ஓ மரமே ....)
 
ஒருமுறை உன்னை நட்டு வைத்தால்-பல
தலைமுறைகள் அதன் பலன் பெறுமே
மரத்தை வெட்டித் தள்ளிவிட்டால் -பின்
சந்ததிக்கு இங்கே வாழ்வேது
வாருங்கள் எல்லாம் கூடிடுவோம் -நாம்
ஆளுக்கொரு மரத்தை நட்டிடுவோம் (ஓ மரமே ....)


10- குவா குவா குட்டி பாப்பா 

KUVA KUVA KUTTI PAPA RHYME / SONG FOR KIDS IN TAMIL 

குவா குவா குட்டி பாப்பா
இங்கே இப்போ ஓடிவா
பறவை போல,விலங்கு போல 
நாமும் பாடி ஆடலாம்!

செல்லப் பிள்ளை குட்டி பாப்பா
குவா குவா கத்துது !

அசைந்து அசைந்து செல்லும் வாத்து
பக் பக் என கத்துது !

இசையில் மயக்கும் சோலை குயில்
குக்கூ... எனக் கூவுது !

கருமை நிறக் காக்கா அண்ணன் 
கா...கா எனக் கறையுது!

வீட்டைக் காக்கும் நாய் நண்பன்
லொள்..லொள்..எனக் குறைக்குது!

எங்கள் வீட்டுப் பசுமாடு 
ம்மா ...ம்மா... என அழைக்குது!

துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டி
ம்மே....ம்மே....எனக் கத்துது!

எலியைத் துரத்தும் குட்டிப் பூனை
மியாவ்...மியாவ்....கத்துது!

குவா குவா குட்டிப் பாப்பா
இங்கே இப்போ கூடினோம்
பறவை போல,விலங்கு போல 
நாமும் பாடி ஆடினோம்!





11- என் வீடு குழந்தை பாடல்

 MY HOUSE RHYME FOR KIDS IN TAMIL 


குட்டிப் பிள்ளைகளே குட்டிப் பிள்ளைகளே
இங்கே வாருங்கள்
நாம் வீட்டுக்குள்ளே சென்று
நல்லா சுற்றிப் பார்க்கலாம்!

வாசல் மீது காலைவைத்து 
உள்ளே சென்று நாம்
நம் ஹால் பகுதியில் சிறிது நேரம்
ஓய்வும் எடுக்கலாம்.

பசி எடுத்தால் சமையலறை
உள்ளே செல்லலாம்
நம் விருப்பப்படி எல்லாம் சமைத்து 
புசித்து உண்ணலாம்

உண்ட பிறகு நமது தட்டை
நாமே கழுவலாம்
அதை வரிசையாக
அலமாரி மேலே அடுக்கலாம்!

அதோ பாரு படிக்கும் அறை
அங்கே செல்லலாம் 
நம் எழுத ,படிக்கும் வேலைகளை
நன்றே செய்யலாம்!

கழிவறையின் கதவுகளை 
மூடியே வைப்போம்
நாம் பயன்படுத்தும் போதெல்லாம்
சுத்தமும் செய்வோம்!

இங்கே வந்தால் இருப்பதுதான் 
படுக்கை அறையாம்
நம் உடல் அசதியை
தூக்கத்தினால் போக்கிடும்  அறையாம்!

மழை,வெயில்,காற்று என
எது வந்தாலும்
நம்மை பாதுகாத்து வைத்திருப்பது
நமது வீடுதான்!

ஒப்பற்ற நன்மை தரும் 
நமது வீட்டினை - நாம்
எந்நாளும் நன்றாக
பாதுகாக்கனும்.
நம் வீட்டில் நலமாக
வாழ்ந்து காட்டனும்!





12- வண்ண வண்ண பலூன் 

VANNA VANNA BALOON- COLOURFUL BALLOONS RHYME IN TAMIL 


வண்ண வண்ண பலூன்
இது வானில் பறக்கும் பலூன்

சுட்டிக் குழந்தை செல்லமாக
ஊதி மகிழும் பலூன்

பிஞ்சு கைகள் பட்டால்-உடன்
நழுவி ஓடும் பலூன்

பல வண்ணத்திலே கிடைக்கும்
நம் எண்ணத்திலும் நிற்கும்

குட்டிக் குழந்தை கைகளிலே
 பொம்மையாக ஆடும்

காற்றில் விட்டால் பறக்கும்
சிறு ஊசி பட்டால் வெடிக்கும் 

பல வடிவங்களில் வந்து
நம் மகிழ்ச்சியாக மாறும்

வானில் உயரச் செல்லும்
நம் மனதை கொள்ளைக் கொள்ளும்

சுட்டிப் பிள்ளை செல்லமாக
துரத்தி துரத்தி ஓடும்

வண்ண வண்ண பலூன் -இது
 நம் மனதில் பறக்கும் பலூன்!



13-ராமு சோமு இங்கே வாங்க

RAMU SOMU INGEY VAANGA -Daily Routine Activities Kids Rhyme In Tamil 



ராமு சோமு இங்கே வாங்க
பாட்டுப் பாடலாம்
நாம் தினந்தோறும் செய்யும் செயலை
ஆடி கற்கலாம் !

காலை எழுந்து முகத்தை கழுவி
வணக்கம் சொல்லுவோம்!
பின் டூத் பிரஸ்ஸால் பள்ளை துளக்கி 
ஹா...ஹா....சொல்லுவோம் !

காலை கடனை முடித்து
நமது கழிவை நீக்குவோம்
பின் குளியலறை சென்று 
குளித்து சுத்தம் ஆகுவோம் !

 சுத்தமான ஆடை அணிந்து
ஓ....ஓ....சொல்லுவோம்..
பின் இறைவனிடம் வேண்டி
நல்ல பிரார்த்தனை செய்வோம் !

அம்மா கொடுக்கும் நல் உணவை
புசித்து உண்ணுவோம்
பின் புத்தகப்பை எடுத்துக் கொண்டு 
பள்ளிக்குச் செல்வோம் !

பள்ளிச் சென்று பாடங்களை
நன்கு படிப்போம்
 உடன் ஆசிரியர் தரும்
நல்ல அறிவுரை கேட்போம்!

விளையாட்டு நேரத்திலே
ஓடி ஆடுவோம் -ஒன்றாய்
 நண்பருடன் அலவலாவி
ஆனந்தம் கொள்வோம் !

பள்ளி முடிந்து பாங்குடனே
வீட்டிற்குச் செல்வோம்
அங்கே மீண்டும் குளித்து
புத்துணர்வாய் துள்ளி குதிப்போம் !

வீட்டுப் பாடம் முடித்து விட்டு
படிக்கத் தொடங்குவோம் 
பிறகு இரவு நேர உணவருந்தி 
தூங்கிடச் செல்வோம் !

குழந்தைகளே..........
நாமெல்லாம்  தினந்தோறும்
 செய்யும் செயல்களை
இப்போது ஆடிப்பாடி 
மகிழ்ந்து கற்றோமே 
ஹா......ஹா.....ஹா......


14- எறும்பைப் பார் எறும்பைப் பார் 

ERUMBAI PAAR ERUMBAI PAAR- Ant Rhyme For Kids In Tamil


எறும்பைப் பார் எறும்பைப் பார்
வரிசையில் வருகிறதே

அது சுறுசுறுப்பின் அடையாளம்
நானே என்கிறதே 

ஒன்றாகக் கூட்டுக்குடும்ப
வாழ்க்கை வாழ்கிறதே

அது நில்லாமல் ஓடி ஆடி
திரவியம் சேர்க்கிறதே

 நாளையத் தேவைக்கு -அது
இன்றே சேமிப்பதால் 

எதிர்காலம் என்னவாகும்
என்ற பயமும் இல்லையே !

எறும்பைப் போல் சுறுசுறுப்பாய்
நாமும் மாறிடனும்
அது சொல்லித் தந்த சேமிப்பை
இன்றே தொடங்கிடனும்!



15-மேகமே கரு மேகமே

Megamey Karu Megamey - Beautiful 

Clouds Rhyme For Kids In Tamil


மேகமே கரு மேகமே
நீ எங்கே செல்கின்றாய்
சுட்டிப் பசங்க அழைக்கின்றோம்
நீ இங்கே  வருவாயா  (  மேகமே..)

குட்டிப் பிள்ளைகள் குதூகளிக்க 
கொஞ்சம் மழையைத் தருவாயா? 
அதில் நனைந்து நாங்கள் ஆட்டம் போடும்
வாய்ப்பைத் தருவாயா ?(2) (  மேகமே..)

கருமை வெண்மை வண்ணங்களில்
நீ துள்ளிக் குதிக்கின்றாய்
நீல வண்ண வானத்திலே
நீ சுற்றித் திரிகின்றாய் ( 2) (  மேகமே..)

பசுமையான மரங்களைக் கண்டால்
மழையாய் பொழிகின்றாய்
நீ மரமில்லா இடங்களைக் கண்டால்
பயந்தே ஓடுகின்றாய்  (
2) (  மேகமே..)

வானத்தின் கொடை மழையை 
தந்திடும் மேகமே 
நீ எம், வாழ்வுதனை சிறப்பாக்க
மழை தந்திடு போதுமே!  (2) ( மேகமே..)


அடுத்த பாகத்தில் சந்திப்போம்! நன்றி !

Post a Comment

0 Comments