Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

General Knowledge Question and Answer for Competitive Exams - போட்டித்தேர்விற்கு பயன்படும் பயனுள்ள பொது அறிவு தகவல்கள் வினா விடை வடிவில் | MOON BOSS

World Gk For Competitive Exam Preparation




useful GK question and answers for competitive exams brightboard.net


               இந்தப் பதிவில் போட்டி தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் மற்றும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்காகவும், மற்றும் பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவருக்காகவும் இந்த பதிவினை எழுதுகின்றோம்.பெரும்பாலும் தற்போது உள்ள பாடத் திட்டங்களின் படி அனைத்து விதமான போட்டி தேர்வுகளிலும் அதாவது எழுத்துத்தேர்வு ஆனாலும் அல்லது நேர்முகத் தேர்வாக இருந்தாலும் பொது அறிவு சம்பந்தப்பட்ட வினாக்கள் நிச்சயம் அதிக அளவில் இடம்பெற்றிருப்பதை நாம் அந்த வினாக்களை உற்று நோக்கினால் தெரிந்துவிடும். மேலும் அத்தகைய பொதுஅறிவு வினாக்கள் ஆனது பாடம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல் நமது மாநிலம், நாடு, கலாச்சாரம், பண்பாடு, அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், விவசாயம், மருத்துவம், கல்வி என்ற அளவிலும், உலகளாவிய நிகழ்வுகள் நடப்புகள், முக்கிய அமைப்புகள் நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகள் உலகத் தலைவர்கள் உலக நாடுகள் உலக அரசியல் உலக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகள் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியதாக இருப்பதை நம்மால் காண முடியும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொதுஅறிவு வினாக்கள் மற்றும் விடையுடன் முழுவதும் கற்றுத் தேர்வது என்பது எவராலுமே இயலாத காரியம் இருந்தாலும் நமக்கு தேவையான மிகவும் முக்கியமான பகுதிகளை அல்லது விருப்பமுள்ள நம் படிப்பு மற்றும் விருப்பம் சார்ந்த துறையை தேர்ந்தெடுத்து அத்துறை சார்ந்த பொது அறிவினை வளர்த்துக்கொள்வது நமக்கு மிகவும் நன்மை பயக்கும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இடம்பெறக்கூடிய உலகம் சார்ந்த சில முக்கியமான பொது அறிவு வினாக்கள் மற்றும் அவற்றின் விடையிணை இந்த பதிவினில் நாம் காண இருக்கின்றோம். 
    இதில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் இறுதியானவை அல்ல அவை பரந்து விரிந்த பொதுஅறிவு இன்னும் கடலில் ஒரு சிறு துளியே ஆகும். ஆயினும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு வினாக்களை படித்து நினைவுறுத்திக் கொண்டாள் நிச்சயம் நமக்கு அனைத்து விதங்களிலும் உதவியாக இருக்கும் மற்றும் போட்டித் தேர்வுகளிலும் நம்மால் தன்னம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொண்ட நாம் கற்ற இந்த பொதுஅறிவு சார்ந்த வினாக்கள் கேட்கப்படும் போது அதற்குரிய மதிப்பெண்களை பெறுவதும் மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் உங்களிடம் இதுபோன்ற பொது அறிவு வினாக்கள் இருந்தாலும் அல்லது நீங்கள் விரும்பும் ஏதேனும் வினாக்களை விடையுடன் இந்தப் பதிவிலோ அல்லது இதற்கு அடுத்து வரக்கூடிய பதிவிலோ இடம்பெற விரும்பினால் நீங்கள் பதிவின் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பதிவிடலாம் அல்லது எங்களது இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இமெயில் முகவரிக்கு அனுப்பலாம் நன்றி! இந்த பதிவானது போட்டி தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணியே இப்பதிவினை பதிவிடுகின்றோம். நன்றி!

1-உலகின் மிகப்பெரிய நாடு எது?
Ans : ரஷ்யா

2-உலகின் மிகப்பெரிய கண்டம் எது?
Ans : ஆசியா

3-உலகின் மிகப்பெரிய கடல் எது?
Ans : பசிபிக் பெருங்கடல்

4-உலகின் மிக ஆழமான கடல் எது?
Ans : பசிபிக் பெருங்கடல்

5-உலகின் மிகப்பெரிய ஏரி எது?
Ans : பைக்கால் ஏரி , ரஷ்யா

6-உலகின் மிக நீளமான நதி எது?
Ans : நைல் நதி

7-உலகின் மிகப்பெரிய நதி எது?
Ans : அமேசான் ஆறு

8-உலகின் மிகப்பெரிய அணை கட்டு எது?
Ans : த்ரீ கார்ஜஸ் அணை - சீனா

9-உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட கண்டம் எது?
Ans : ஆசிய கண்டம்

10-உலகின் மிகப்பெரிய மலை எது?
Ans : எவரெஸ்ட் மலை.8848 மீட்டர்கள் உயரம்

11-உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது?
Ans : சீனா

12-உலகின் மிகச்சிறிய நாடு எது?
Ans : வாட்டிகன் நகரம்.

13-உலகில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகரம் எது?
Ans : டாக்கா -பங்களாதேஷ்

14-உலகில் வெப்பம் மிகுதியான நாடு எது?
Ans : பர்கினா ஃபாசோ -ஆப்பிரிக்கா ( 82.85°F )

15-உலகின் மிகவும் குளிர்ச்சியான நாடு எது?
Ans : அண்டார்டிகா

16-உலகின் மிக நீளமான சாலை வழி பாதை எது?
Ans : பான் அமெரிக்க நெடுஞ்சாலை ( 19000 மைல்கள் )

17-உலகின் மிக நீண்ட ரயில் பாதையை கொண்ட நாடு எது?
Ans : அமெரிக்க ஐக்கிய நாடுகள்

18-உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை எது?
Ans : போயிங் எவரெட் தொழிற்சாலை -அமெரிக்கா

19-உலகில் அதிக அரிசியை உற்பத்தி செய்யும் நாடு எது?
Ans : சீனா

20-உலகில் அதிக கோதுமை உற்பத்தி செய்யும் நாடு எது?
Ans : சீனா 

21-உலகில் உள்ள மிகப்பெரிய பாலூட்டி உயிரினம் எது?
Ans : நீலத்திமிங்கலம்

22-உலகில் உள்ள மிகச்சிறிய பாலூட்டி உயிரினம் எது?
Ans : பன்றி மூக்கு வவ்வால்

23-மனித உடலின் மிக கடினமான பகுதி எது?
Ans : பல்லின் எனாமல் பகுதி

24-மனித உடலில் உள்ள மிக நீளமான எலும்பு எது?
Ans : ஃபெமுர் எலும்பு ( தொடை எலும்பு)

25-உலகில் உள்ள மிக நீளமான விலங்கினம் எது?
Ans : சிப்போனோபோர்( Siphonophore) 150 அடி நீளம்



26-உலகில் வாழும் மிகப்பெரிய பறவை எது?
Ans : நெருப்புக்கோழி

27-உலகில் வாழும் மிகச் சிறிய பறவை எது?
Ans : பீ ஹம்மிங் பறவை

28-உலகில் உள்ள மிகப்பெரிய மலரின் பெயர் என்ன?
Ans : ராஃப்லிசியா அர்னால்டி

29-உலகின் மிகவும் பணக்கார நாடு எது?
Ans : கத்தார்

30-உலகின் மிகவும் ஏழ்மையான நாடு எது?
Ans : காங்கோ குடியரசு நாடு

31-உலகில் உள்ள மிகப்பெரிய கோவில் எது? எங்கு உள்ளது?
Ans : அங்கோர்வாட் கோவில், கம்போடியாவில் உள்ளது

32-உலகிலுள்ள மிகப்பெரிய மசூதி எது?
Ans : மஸ்ஜித் அல் ஹாரம் மசூதி- மெக்கா

33-உலகின் மிகப்பெரிய தேவாலயம் எங்கு உள்ளது?
Ans : செயின்ட் பீட்டர் தேவாலயம் -வாடிகன் நகரம்

34-உலகில் உள்ள மிகப்பெரிய மணி எது?
Ans : டிசார் மணி- ரஷ்யா 26 டன் எடை கொண்டது

35-உலகின் மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடு எது?
Ans : சீனா

36-உலகில் மிக உயர்ந்த கோபுரம் எது?
Ans : பூர்ஜ் கலிஃபா கோபுரம் - 828 மீட்டர்கள்

37-உலகின் மிகவும் வலிமையான ராணுவத்தை கொண்ட நாடு எது?
Ans : அமெரிக்க நாடு


38-உலகின் மிகச்சிறந்த காவலர்களை கொண்ட நாடு எது?
Ans : ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை

39-உலகின் மிகச்சிறந்த ரகசிய உளவு நிறுவனம் எது?
Ans : ஐ எஸ் ஐ ( ISI - Inter Services Intelligence)

40-உலகின் மிக உயரமான கட்டிடம் எது?
Ans : பூர்ஜ் கலிஃபா கோபுரம் - 828 மீட்டர்கள்

41- உலகின் முதல் விண்வெளி வீரர் யார்?
Ans : யூரி ககாரின் - ரஷ்யா

42-உலகின் எந்த இரு நாடுகளுக்கிடையே அதிகப்படியான எல்லை பகிரப்படுகிறது?
Ans : கனடா மற்றும் அமெரிக்கா- 8893 km

43-உலகின் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடு எது?
Ans : அமெரிக்க ஐக்கிய நாடுகள்

44-உலகின் மிகவும் பணக்கார மனிதர் யார்?
Ans : எலோன் மஸ்க்  - அமெரிக்கா

45-உலகின் அதிக மதிப்பு மிகுந்த வைரத்தின பெயர் என்ன?
Ans: நீல நிலவு வைரம் (  Blue Moon diamond)

46-உலகில் அதிக ஆஸ்கர் விருதுகளை வென்றவர் யார்?
Ans : கேத்தரின் ஹெப்பர்ன் - 4 விருதுகள்

47-உலகின் முதல் ஆஸ்கர் விருதினை வென்றவர் யார்?
Ans : ஹென்றி டுனான்ட் மற்றும்  ஃபிரெடரிக் பாசி

48-உலகில் வாழ மிகவும் பாதுகாப்பான நாடு எது?
Ans : ஸ்விட்சர்லாந்து

49-மனித உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு எது?
Ans : தோல்

50-மனித உடலின் மிகச்சிறிய உறுப்பு எது?
Ans : பீனியல் சுரப்பி

51-உலகின் மிகப்பெரிய நூலகம் எது ?எங்கு உள்ளது?
Ans : அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் - அமெரிக்கா


52-உலகின் மிகப்பரிய எரி மலையின் பெயர் என்ன?
Ans : மோன லோவா எரிமலை - ஹவாய் 9170 மீட்டர்கள்

53-உலகின் மிகப்பழமையான நகரம் எது?
Ans : ஜெரிக்கோ நகரம் - பாலஸ்தீனம்

54-உலகின் மிக உயரமான சிகரம் எது?
Ans : எவரெஸ்ட் சிகரம், 29029 அடிகள்

55-உலகின் மிகப்பெரிய தீவு எது?
Ans : கிரீன்லாந்து

56-உலகின் அதிக ஆபத்தான பாம்பு எது?
Ans : சா ஸ்கேல்டு வைப்பர் ( saw Scaled viper)

57-உலகின் மிகவும் ஆபத்தான பகுதி எது?
Ans : இஹா டா ஃகுய்மடா கிராண்டே - பிரேசில்

58-உலகின் மிகப் பெரிய காடு எது?
Ans : அமேசான் காடு

59-உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?
Ans : அண்டார்டிகா பாலைவனம்

60-ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து எது?
Ans : E

61-உலகின் மிக நீளமான கடற்கரை எது?
Ans : ப்ரியா டோ காசினோ கடற்கரை - பிரேசில் ( 150 மைல்கள்)

62-சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள் எது?
Ans : வியாழன் கோள் ( Jupiter)

63-பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய அரண்மனை எது?
Ans : ஃபார்பிடன் சிட்டி அரண்மனைனை - சீனா

64-உலகின் மிகச்சிறிய கடற்கரை எது?
Ans : குல்ஃப்யூரி பீச் - ஆஸ்திரியா

65-உலகில் மிகச்சிறந்த கல்வி முறையை கொண்டுள்ள நாடு எது?
Ans : பின்லாந்து


66-வாழ்வதற்கு உலகில் மிகவும் விலை உயர்ந்த நாடுகள் எது?
Ans : ஹாங்காங், ஜூரிச், பாரிஸ்,

67-உலகில் அதிகப்படியான கின்னஸ் உலக சாதனைகளை கொண்டிருப்பவர் யார்?
Ans : அஷ்ரிட்டா ஃபர்மன் - 600 சாதனைகளுக்கும் மேல்

68-உலகில் அதிக துறைமுகங்களை கொண்ட நாடு எது?
Ans : சீனா

69-உலகின் மிகவும் ஆழமான பகுதி எது?
Ans : மரியானா டிரெஞ்ச் - பசிபிக் பெருங்கடலில் உள்ளது

70-உலகின் மிகப் பழமையான அச்சிடப்பட்ட புத்தகத்தின் பெயர் என்ன?
Ans : த டைமண்ட் சூத்திரம் ( The Diamond Sutra)

71-உலகின் அதிகப்படியான நோபல் பரிசுகளை வென்றவர்களை கொண்ட நாடு எது?
Ans : அமெரிக்க ஐக்கிய நாடுகள்

72-விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோளின் பெயர் என்ன?
Ans : ஸ்புட்னிக் 1 - ரஷ்யாவால் அனுப்பப்பட்டது

73-உலகின் மிகப்பெரிய சுரங்கப் பாதையின் பெயர் என்ன?
Ans : கோத்தர்டு பேஸ் சுரங்கம் - 57.09km நீளம் கொண்டது

74-உலகின் மிக நீளமான கடற்கரை பாலம் எது?
Ans : ஹாங்காங் சுகாய் மக்காவ் பாலம் - 55km நீளம்

75-உலகில் அதிகப்படியான தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு எது ?
Ans : சீனா

76-உலகின் முதல் பெண் பிரதம மந்திரி யார்?
Ans : ஸ்ரீமாவோ பண்டாரநாயக் - இலங்கை

77-உலகின் முதல் பெண் ஜனாதிபதி யார்?
Ans : இசபெல் பெரோன் -அர்ஜென்டினா 

78-இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
Ans : ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி 

79-உலகின் முதல் பெண் மருத்துவர் யார்?
Ans : எலிசபெத் பிளாக்வெல்.

80-உலகின் முதல் விஞ்ஞானி யார்?
Ans : அரிஸ்டாட்டில்

81-உலகின் முதல் பெண் விஞ்ஞானி யார்?
Ans : மேரி கியூரி 


82-நோபல் பரிசு வென்ற உலகின் முதல் பெண் விஞ்ஞானி யார்?
Ans : மேரி க்யூரி ,0இயற்பியலுக்கான நோபல்  பரிசு 1903

83-விண்வெளிக்குச் சென்ற உலகின் முதல் விண்வெளி வீரர் யார்?
Ans : யூரி ககாரின், ரஷ்யா

84-உலகின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை யார்?
Ans : வேலன்டினா டிரஸ்கோவா - ரஷ்யா

85-உலகின் மிகவும் உயரமான சிலை எது?
Ans : ஒற்றுமையின் சிலை இந்தியா 182 மீட்டர்கள்

86-உலகின் மிகப்பெரிய நகரம் எது?
Ans : டோக்கியோ நகரம் - ஜப்பான்

87-இந்தியாவின் முதல் பிரதம மந்திரி யார்?
Ans : ஜவஹர்லால் நேரு ( 1947-1964)

88-இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
Ans : ராஜேந்திர பிரசாத், 1950-1962

89-இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி யார்?
Ans : பிரதீபா தேவிசிங் பட்டீல், 2007-2012

90-இந்திய நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரி யார்?
Ans : இந்திரா காந்தி

91-உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி எது?
Ans : கிராண் டெலஸ்கோபிக் கனாரியஸ்


92-உலகில் அதிக விமான நிலையங்களை கொண்ட நாடு எது?
Ans : அமெரிக்க ஐக்கிய நாடுகள்

93-உலகின் மிகப்பெரிய பேருந்து நிறுத்தம் எது?
Ans : மில்லினியம் பார்க் பேருந்து நிலையம் - புது தில்லி

94-பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது?
‌ Ans : நகோயா ரயில் நிலையம்  - ஜப்பான்

95-உலகின் முதல் பல்கலைக்கழகம் எது?
Ans : பொலோக்னா பல்கலைக்கழகம்

96-உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது?
Ans : இந்தியா

97-உலகின் முதல் பெண் ராணுவ விமானி யார்?
Ans : சபீஹா கோக்சன் - துருக்கி

98-உலகின் மிகவும் தாழ்வான பகுதி எது?
Ans : சாக்கடல் ( the dead sea)


99-உலகில் மிகவும் விலைமதிப்பு மிக்க உலோகம் எது?
Ans : பெல்லாடியம் (palladium)

100-ஆங்கிலத்தில் உள்ள மிகப் பெரிய வார்த்தை எது?
Ans :pneumonoultramicroscopicsilicovolcanocon

101-உலகின் நீளமான இயற்கை கடற்கரை எது?
Ans : காஃக்ஸ் பஷார் கடற்கரை- பங்களாதேஷ்



  இந்த பயனுள்ள பொதுஅறிவு வினாக்களை படித்ததுடன் ஆங்கில இலக்கணம் கற்க விரும்பினாள English Grammar In Tamil பகுதிக்கு செல்லவும். அல்லது ஆங்கிலம் கற்றுக் கொண்டு பேச விரும்பினால் Spoken English In Tamil பகுதிக்குச் செல்லவும்.
             மேலும் இதற்கு அடுத்த பதிவுகளில் பொது அறிவு சார்ந்த பல்வேறு வினா விடைகளை அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி பதிவுகளாக காணலாம். மேலும் இந்தப் பதிவுகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும் நன்றி.























Post a Comment

0 Comments