Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th Social Science History One Mark Questions With Answers In Tamil | MOON BOSS

10th Social Science One Mark Questions With Answers In Tamil -History





10th Social science one mark questions with answers History brightboard.net
Social Science One Mark www.brightboard.net


         In this article we are going to read the 10th standard social science one mark questions with answers in Tamil. These important objective one mark question and answer taken from  the history part of the SSLC social science textbook. We have already posted one article on social science important one mark question and answer for  the first unit. Now in this article we are going to you cover all the lessons of the history part of the textbook. The one mark questions with answers given here are prepared bye the highly knowledgeable and experienced teachers. By the way learning this objective one mark questions with answers of Social Science not only help the 10th standard students to score goodmark at social science subject during their examination time but also so it will help almost everybody. Because the following one marks can be read by the school students, job seekers, preparing for competitive examinations, normal people those who want to know the history of our nation and the world etc. The importance for the history relevant material particularly objective type of one mark questions with answers are having great demand all over the nation and the world . We can easily say that the most of the Questions are asked from the history and its relevant subject. So the following questions are hand picked by highly talented teachers in order to help the students as well as aspirants of any competitive examination and  the job seekers. Here you can read the objective one more questions with answer for  the social science subject in Tamil language.


10ம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு ஒரு மதிப்பெண் வினா விடைகள்.



1-முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
Ans : ஜெர்மனி, ஆஸ்திரியா ஹங்கேரி ,உதுமானியர்

2-பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
Ans : ஜப்பான்

3-ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் எனக் கூறியவர் யார்?
Ans : லெனின்

4-மார்ன் போர் எதற்காக நினைவுகூரப்படுகிறது?
Ans : பதுங்கு குழி போர் முறை

5-பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
Ans : பிரிட்டன்

6-பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது ?
Ans : ரஷ்யா

7-எந்த ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது ?
Ans : 1894

8-1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட எந்த உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது?
Ans : இலண்டன் உடன்படிக்கை

9-1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட லண்டன் உடன்படிக்கையின்படி உருவான புதிய நாடு எது?
Ans : அல்பேனியா

10-ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்ட ஆண்டு எது ?
Ans : 1902

11-பால்கனில் பல இன மக்களை கொண்டிருந்த நாடு எது?
Ans : மாசிடோனியா

12-டானென்பர்க் போரில் பேர் இழப்புகளுக்கு உள்ளான நாடு எது?
Ans : ரஷ்யா

13-பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்ற பிரான்சின் பிரதமர் யார்?
Ans : கிளமென்சோ

14-லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு?
Ans : 1925

15-இத்தாலி யாருடன் லேட்டான் உடன்படிக்கையை செய்து கொண்டது?
Ans : போப்

16-போப் உடன் லேட்டான் உடன்படிக்கையைச் செய்து கொண்ட நாடு எது?
Ans : இத்தாலி

17-யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலை குலைந்து போயிற்று?
Ans : ஹெர்மன் கோர்ட்ஸ்

18-ஹெர்மன் கோர்ட்ஸ்ஸின் ஆக்கிரமிப்பால் நிலைகுலைந்து போன நாகரிகம்?
Ans : மெக்சிகோ நாகரீகம்

19-பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?
Ans : ஸ்பானியர்

20-லத்தீன் அமெரிக்காவுடன் "அண்டை நாடுகளுடன் நட்புறவு" எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்க குடியரசுத் தலைவர் யார்?
Ans : ரூஸ்வெல்ட்

21-சமூக ஜனநாயக கட்சியை நிறுவியவர் யார்?
Ans : பெர்டினன்ட் லாஸ்ஸல்லி

22-வியட்நாம் தேசியவாதிகள் கட்சி நிறுவப்பட்ட ஆண்டு?
Ans : 1927

23-ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
Ans : செப்டம்பர் 2,1945

24-செப்டம்பர் 2 , 1945 ஆம் ஆண்டு முறைப்படி சரணடைவதாக கையெழுத்திட்ட நாடு எது?
Ans : ஜப்பான்

25-பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில்  முன்முயற்சி எடுத்தவர் யார்?
Ans : உட்ரோ வில்சன்

26-ஜப்பானியக் கடற்படை ,அமெரிக்கக் கடற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
Ans : மிட்வே போர்

27-மிட்வே போரில் அமெரிக்கக் கடற்படையால் தோற்கடிக்கப்பட்ட நாடு எது?
Ans : ஜப்பான்

28-அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
Ans : ஹிரோஷிமா

29-ஹிட்லர் யாரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?
Ans : யூதர்களை

30-ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?
Ans : சேம்பர்லின்

31-பிரிட்டன் பிரதமர் சேம்பர்லின் ஜெர்மனியோடு கையெழுத்திட்ட உடன்படிக்கையின் பெயர் என்ன?
Ans : மியூனிச் உடன்படிக்கை

32-ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தான ஆண்டு?
Ans : ஜீன் 26, 1945.

33-ஹிட்லரால் தாக்கப்பட்ட ராணுவ நீக்கம் செய்யப்பட்ட பகுதி எது?
Ans : ரைன்லாந்து

34-ராணுவ நீக்கம் செய்யப்பட்ட ரைன்லாந்து பகுதி யாரால் தாக்கப்பட்டது?
Ans : ஹிட்லர்

35-இத்தாலி, ஜெர்மனி ,ஜப்பான் ஆகியவற்றுக்கிடையே ஆன ஒப்பந்தம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Ans : ரோம்,பெர்லின், டோக்கியோ அச்சு

36-ரோம், பெர்லின், டோக்கியோ அசசு என்று அழைக்கப்பட்ட ஒப்பந்தமானது எந்த நாடுகளுக்கு இடையில் உருவானது?
Ans : இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஜப்பான்

37-கடன் குத்தகை திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
Ans : ரூஸ்வெல்ட்

38-1940 ல்  ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் யார்?
Ans : சேம்பர்லின்

39-தொலைவில்  இருந்து எதிரிகளின் போர்க்கப்பல்களை கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி எது?
Ans : ரேடார்

40-சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?
Ans : 1829

41-தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட சமாஜத்தின் பெயர் என்ன?
Ans : ஆரிய சமாஜம்

42-ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார்?
Ans : தயானந்த சரஸ்வதி

43-யாருடைய பணியும் இயக்கமும்  1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
Ans : ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

44-விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
Ans : 1856

45-ராஸ்ட் கோப்தார் என்பது யாருடைய முழக்கம்?
Ans : பார்சி இயக்கம்

46-நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
Ans : பாபா ராம்சிங்

47-பாபா ராம்சிங்கால் உருவாக்கப்பட்ட இயக்கம் எது?
Ans : நாம்தாரி  இயக்கம்

48-விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
Ans : M.G - ரானடே

49-சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் யார்?
Ans : தயானந்த சரஸ்வதி

50-இராமலிங்க அடிகளார் நிறுவப்பட்ட சங்கத்தின்  பெயர் என்ன?
Ans : சமரச வேத சன்மார்க்க சங்கம்




51- சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் யார்?
Ans : இராமலிங்க அடிகளார்

52-பூனே சர்வஜெனிக் சபாவை நிறுவியவர் யார்?
Ans : மகாதேவ் கோவிந்த் ரானடே

53-மகாதேவ் கோவிந்த் ரானடேவால் நிறுவப்பட்ட சபாவின் பெயர் என்ன?
Ans : புனே சர்வஜனிக் சபா

54-குலாம்கிரி எனும் நூலை எழுதியவர் யார்?
Ans : ஜோதிபா பூலே

55-ராமகிருஷ்ணா மிஷன் யாரால் நிறுவப்பட்டது?
Ans : சுவாமி விவேகானந்தர்

56-சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட மிஷினன் பெயர் என்ன?
Ans : ராமகிருஷ்ணா மிஷன்.

57-அகாலி இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படுவது?
Ans : சிங்சபா

58-சிங்சபா எந்த இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது?
Ans : அகாலி இயக்கம்

59-ஒரு பைசா தமிழன் எனும் பத்திரிகையை துவக்கியவர் யார்?
Ans : அயோத்தி தாசர்

60-அயோத்திதாசரால் துவக்கப்பட்ட பத்திரிக்கையின் பெயர் என்ன?
Ans : ஒரு பைசா தமிழன்

61-கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
Ans : பூலித்தேவர்

62-சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
Ans : பூலித்தேவர்

63-சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
Ans : நாகலாபுரம்

64-திருச்சிராப்பள்ளி சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர்கள் யார்?
Ans : மருது சகோதரர்கள்

65-வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
Ans : 1806,ஜீலை 10

66-வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
Ans : சர் ஜான் கிரடாக்

67-வேலூர் புரட்சிக்கு பின் திப்புசுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
Ans : கல்கத்தா

68-பாளையக்காரர் முறையை தமிழகத்தில் அறிமுகப் படுத்தியவர் யார்?
Ans : விஸ்வநாத நாயக்கர்

69-வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டு ஆண்டுகளாக யாருடைய பாதுகாப்பில் இருந்தனர்?
Ans : கோபால நாயக்கர்

70-கோபால நயக்கர் 8 ஆண்டுகளாக யாருக்கு பாதுகாப்பு அளித்தார்?
Ans : வேலுநாச்சியார் மற்றும் அவரது மகளுக்கு.

71- கட்டபொம்மனை சரணடைய கூறும் தகவலை தெரிவிக்க பானர்மென் யாரை அனுப்பி வைத்தார்?
Ans : இராமலிங்கர்

72-கட்டபொம்மனைச் சரணடையக் கூறும் தகவலை தெரிவிக்க ராமலிங்கர் என்பவரை அனுப்பி வைத்தவர் யார்?
Ans : பானர்மென்

73-கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தின் பெயர் என்ன?
Ans : கயத்தாறு

74-ஆங்கிலேயர்களால் கயத்தாறு என்னுமிடத்தில் தூக்கிலிடப்பட்டவர்?
Ans : கட்டபொம்மன்

75-மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஸ் குறிப்புகளில் எவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளது?
Ans : இரண்டாவது பாளையக்காரர் போர்.





76-இரண்டாவது பாளையக்காரர் போர் என்று பிரிட்டிஷ் குறிப்புகளில் யாருடைய புரட்சியானது குறிப்பிடப்பட்டுள்ளது?
Ans : மருது சகோதரர்களின் புரட்சி

77-புரட்சியாளர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டவர் யார்?
Ans : ஃபதே ஹைதர்

78-1818 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தின் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றுள் எதனைத் தொடங்கினார்?
Ans : ஃபராசி இயக்கம்

79-1818 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஃபராசி இயக்கத்தை தொடங்கி வைத்தவர் யார்?
Ans : ஹாஜி ஷரியத்துல்லா

80-நிலம் கடவுளுக்குச் சொந்தம் என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரி விதிப்பதோ, வாடகை வசூலிப்பதோ இறைச்  சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
Ans : டுடு மியான்

81-நிரந்தர குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?
Ans  : சாந்தலர்கள்


82-கீழ் கான்போரில் தீவிர தேசியவாதி யார்?
Ans : பிபின் சந்திர பால்

83-வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
Ans : 1905, அக்டோபர் 16

84-சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
Ans : முண்டா கிளர்ச்சி

85-முண்டா கிளர்ச்சியின் பின்னணியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் எது?
Ans : சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம்.

86-1916-ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
Ans : திலகர்

87-1916 ஆம் ஆண்டு திலகரால் தொடங்கப்பட்ட இயக்கத்தின் பெயர் என்ன?
Ans : தன்னாட்சி இயக்கம்

88-நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகள் இன்னல்கள் குறித்துஆங்கிலேயரின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் யார் ?
Ans : தீன் பந்து மித்ரா

89-மன்னராட்சிக்கும் நிலச்சுவான்தார்களுக்கும்  எதிராக 1827 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கத்தின் பெயர் என்ன?
Ans : ஹொபி இயக்கம்

90-சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி எது?
 Ans : கோள் கிளர்ச்சி

91-எந்தச் சட்டம் பழங்குடியினர் அல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடை விதித்தது?
Ans : சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம்

92-சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
Ans : 1908

93-W.C பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ?
Ans : 1885

94-1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Ans : W.C  பானர்ஜி

95-அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
Ans : சைஃ புதின் கிச்லு

96-இந்திய தேசிய காங்கிரஸின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
Ans : கல்கத்தா அமர்வு

To Read : G.K Questions And Answers In Tamil



97-இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வின் மூலமாக அனுமதிக்கப்பட்ட இயக்கத்தின் பெயர் என்ன?
Ans : ஒத்துழையாமை இயக்கம்

98-விடுதலை நாளாக எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
Ans : 1930,ஜனவரி 26,

99-முதலாவது வணங்கள சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
Ans : 1865

100-1933 ஜனவரி 8ஆம் நாள் எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
Ans : கோவில் நுழைவு நாள்

101-கோவில் நுழைவு நாளாக அனுசரிக்கப்பட்ட தினம் எது?
Ans : 1933, ஜனவரி 8

102-மாகான தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
Ans : இந்திய அரசு சட்டம் 1935

103-இந்திய அரசுச் சட்டம் 1935 ன் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட சட்டம் எது?
Ans : மாகாண தன்னாட்சி அறிமுகம்

104-காந்தியடிகளின் அரசியல் குருவாக கருதப்படுபவர் யார்?
Ans : கோபால கிருஷ்ண கோகலே

105-கோபால கிருஷ்ண கோகலே யாருடைய அரசியல் குருவாக கருதப்படுகிறார்?
Ans : காந்தியடிகள்

106-கிலாபத் இயக்கத்திற்கு தலைமை ஏற்றவர்கள் யார்?
Ans : அலி சகோதரர்கள்

107-அலி சகோதரர்களால் தலைமை ஏற்று
 நடத்தப்பட்ட இயக்கத்தின் பெயர் என்ன?
Ans : கிலாபத் இயக்கம்

108-1919ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் அறிமுகம் செய்த ஆட்சி முறை?
Ans : இரட்டை ஆட்சிமுறை.

109-இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகம் செய்த ஆண்டு?
Ans : 1919

110-வட மேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமை ஏற்று நடத்தியவர் யார்?
Ans : தான் அப்துல் கஃபார்கான்

111-கான் அப்துல் காஃபர் கான் வடமேற்கு எல்லை மாகாணத்தில் எந்த இயக்கத்திற்காக தலைமையேற்று நடத்தினார்? 
Ans : சட்ட மறுப்பு இயக்கம்

112-சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனி தொகுதிகளை வழங்கும் வகுப்புவாரி ஒதுக்கீட்டை அறிவித்தவர் யார்?
Ans : ராம்சே மெக்டொனால்டு

113-சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்குத் தனித் தொகுதிகளை வழங்கும் எந்த திட்டத்தினை ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்?
Ans : வகுப்புவாரி ஒதுக்கீடு

114-வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை தலைமறைவாக செயல்படுத்தியவர் யார்?
Ans : உஷா மேத்தா

115-எந்த இயக்கத்தின்போது உஷா மேத்தா காங்கிரஸ் வானொலியை தலைமறைவாக செயல்படுத்தி வந்தார்?
Ans : வெள்ளையனே வெளியேறு இயக்கம்

116-சென்னை மாகாண சபையின் முதல் தலைவர் யார்?
Ans : P.ரங்கையா

117-இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு அல்லது அமர்வு எங்கே நடைபெற்றது?
Ans : ஆயிரம் விளக்கு

118-இந்திய தேசிய காங்கிரஸின் எந்த மாநாடு ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்றது?
Ans : மூன்றாவது அமர்வு அல்லது மாநாடு

119-அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டுவண்டியே சிறந்தது எனக் கூறியவர் யார்?
Ans : அன்னிபெசன்ட் அம்மையார்.

120-சத்தியமூர்த்தி எவ்வாறு அறியப்படுகிறார்?
Ans : சுயராஜ்ஜிய வாதி

121-சென்னைக்கு அருகே உள்ள உதயவனத்தில் சத்தியாகிரக முகாமை அமைத்தவர் யார்?
Ans : T.பிரகாசம்

122-T.பிரகாசம் எந்தப் பகுதியில் சத்யாகிரக முகாமை அமைத்தார்?
Ans : சென்னைக்கு அருகே உள்ள உதயவனத்தில்.

123-இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடைபெற்றது?
Ans : சேலம்



124-சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி யார்?
Ans : T.முத்துசாமி

125-நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கிய ரகசிய அமைப்பின் பெயர் என்ன?
Ans : பாரத மாதா சங்கம்

126-பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை தொடங்கியவர் யார்?
Ans : நீலகண்ட பிரம்மச்சாரி

127-சென்னையில்தொழிற்சங்கங்களை தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?
Ans : B.P- வாடியா

128-சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்?
Ans : C.ராஜாஜி

129-முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை உருவாக்கியவர் யார்?
Ans : யாகுப் ஹசன்

130-யாகுப் ஹசன் என்பவரால் சென்னையில் உருவாக்கப்பட்ட அமைப்பு ?
Ans : முஸ்லிம் லீக்

131-1932 ஜனவரி 26-ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்?
Ans : பாஷ்யம்

132-புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் பாஷ்யம் என்பவரால் தேசியக்கொடி ஏற்றப்பட்ட ஆண்டு?
Ans : 1932 ஜனவரி 26

133-1709 ம் ஆண்டில் தரங்கம்பாடியில் ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவியவர் யார்?
 Ans : சீகன்பால்கு

134-1709 ம் ஆண்டில் சீகன்பால்கு என்பவரால் ஒரு முழுமையான அச்சகம் எங்கே நிறுவப்பட்டது ?
Ans : தரங்கம்பாடியில்.

135-1893ஆம் ஆண்டு ஆதிதிராவிட மகாஜன சபையை நிறுவியவர் யார்?
Ans : இரட்டைமலை சீனிவாசன்

136-இரட்டைமலை சீனிவாசன் என்பவரால் 1893-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமைப்பு எது?
Ans : ஆதிதிராவிட மகாஜன சபை

137-இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் எப்போது உருவாக்கப்பட்டது?
Ans : 1918

138-அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய நீதி கட்சியால் நிறுவப்பட்ட அமைப்பு எது?
Ans :  பணியாளர் தேர்வு வாரியம்

139-அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய பணியாளர் தேர்வு வாரியத்தை உருவாக்கிய அமைப்பு எது?
Ans : நீதி கட்சி

140-சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து முதன் முறையாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Ans : M.C. ராஜா

141-முதன்முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத வேற்று மொழி எது?
Ans : தமிழ்

142-புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர் யார்?
Ans : F.W - எல்லிஸ்

143-F.W - எல்லிஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட கல்லூரியின் பெயர் என்ன?
Ans : புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரி

144-தமிழ் மொழியில் தூய்மை வாதத்தின் தந்தை எனக் கருதப்படுபவர் யார் ?
Ans : மறைமலை அடிகள்

145-தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கு இருப்பதை முதன் முதலில் அங்கீகரித்த அமைப்பு எது ? 
Ans : நீதிக்கட்சியின் கீழிருந்த சட்டமன்றம்

146-சூரிய நாராயண சாஸ்திரி என்னும் பெயர் எவ்வாறு மாற்றப்பட்டது?
Ans : பரிதிமாற் கலைஞர்

147-பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் என்ன ?
Ans : சூரிய நாராயண சாஸ்திரி

148-தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் ?
Ans : ஆபிரகாம் பண்டிதர்

149-ஆபிரகாம் பண்டிதர் எந்த மொழி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்?
Ans : தமிழ் மொழி இசை

150-இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?
Ans : முத்துலட்சுமி அம்மையார்.






Post a Comment

0 Comments