Pongal Wishes Images And Messages
ஆண்டு முழுவதும் பல நாட்கள் நம் வாழ்வில் வந்து போனாலும், அவற்றில் ஒரு சில நாட்களை நாம் எப்பொழுதும் மறக்காமல் நம் சுத்தத்துடனும் நட்பு களுடனும் கொண்டாடுகிறோம் அத்துடன் நாம் எப்பொழுதம் அந்த நாட்களை நாம் மறப்பது இல்லை. உதாரணமாக நாம் உலகம் முழுவதும் கொண்டாடும் உலக மகளிர் தினம், நம் இந்திய திருநாட்டில் அனைத்து மக்களாலும் ஒன்றுகூடி கொண்டாடப்படும் நமது குடியரசு தின விழா (ஜனவரி-26), சுதந்திர தின விழா (ஆகஸ்ட்-15)
அத்துடன் மத நல்லிணக்கம் சார்ந்த விநாயகர் சதுர்த்தி, மகா கந்த சஷ்டி விரதம், நவராத்திரி திருவிழா, பொங்கல் பண்டிகை மற்றும் தீபாவளி போன்ற இந்துக்கள் சார்ந்த பண்டிகைகளையும், கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற கிறிஸ்தவர்கள் சார்ந்த பண்டிகைகளையும், ரம்ஜான், மற்றும் பக்ரீத் போன்ற இஸ்லாமியர்கள் சார்ந்த பண்டிகைகளையும் எந்த மதமும் பேதமின்றி அனைத்து மக்களும் சேர்ந்து நமது அன்பையும் அந்த நாளில் பெருமையையும் பரிமாறிக் கொள்கிறோம்,
நமது அன்பை பரிமாறிக்கொள்ள பெரும்பாலானவர்கள் தற்போது உள்ள கணினி யுகத்தில் அதிகமாக பயன்படுத்துவது செல்பேசிகளையும், கணிப்பொறி களையும். தற்போது உள்ள காலத்திற்கு முன்பு நம் அன்பை பரிமாறிக்கொள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தியது கடிதப் போக்குவரத்து, தந்தி அனுப்புவது, நேரில் சென்று வாழ்த்து கூறுவது இன்னும் வேறு சில முறைகளையும் பயன்படுத்தினர் அதில் வாழ்த்துச்செய்திகள் மற்றும் வாழ்த்து கவிதைகள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சுற்றத்தாருக்கும் அனுப்பினர். ஆனால் இன்றோ அந்த வாழ்த்துச் செய்தியும் வாழ்த்து அட்டையும் அனுப்புவது குறைந்துவிட்டது ஆனால் அவற்றை அனுப்பும் முறை முற்றிலும் மாறிவிட்டது. உதாரணத்திற்கு தற்பொழுது நாம் எந்த பண்டிகைக்காக அல்லது எந்த திரு நாளுக்காக வாழ்த்துச் செய்தி அனுப்ப விரும்புகிறோமோ அந்த குறிப்பிட்ட நாட்களுக்கான வாழ்த்துக்களை வண்ண படங்களாகவும், வார்த்தைகளாகும், வீடியோ பதிவுகளாகவும் நமக்கு உடனடியாக கிடைக்கச் செய்ய ஏராளமான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களும், வலைப்பதிவுகளும் உள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்து அல்லது நாமே சில அப்ளிகேஷன்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி நாம் விரும்பிய வாழ்த்துக்களையும் செய்திகளையும் படங்களாகவும் அல்லது வீடியோ பதிவுகளாக நாம் விரும்பியவர்களுக்கு அனுப்பி மகிழ முடியும்.
எனவே அதுபோல் வாழ்த்துச் செய்தியை பிறருக்கு அனுப்பியும் பகிர்ந்து நமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக நமது வலைதளத்தில் பல்வேறு பண்டிகைக்கான மற்றும் சிறப்பு நாட்களுக்கான வாழ்த்துச் செய்தியை வார்த்தைகளாகவும், படங்களாகவும் மற்றும் வீடியோ பதிவுகள் ஆகவும் கொடுக்க விரும்புகிறோம்! இவற்றை நீங்கள் உங்களது சுற்றம் மற்றும் நட்புடன் பகிர்ந்து மகிழலாம் நன்றி !
PONGAL FESTIVAL WISHES IN TAMIL
சூரியன் கிழக்கில் உதிக்க
சுற்றமெல்லாம் கூடிநிற்க
புது அடுப்பு மூட்டி
புத்தாடையை மகிழ்ந்துடுத்தி
புதுபானை பொங்கல் வைத்து
பொங்கலோ பொங்கல் என்று
பூஜித்தோம் நன்றி கூறி
தித்திக்கும் செங்கரும்பாய்
உம் வாழ்வும் இனித்திடவே
மனதார கூறுகிறோம்
இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
எப்படி இத்திருநாளில்
புதுப்பானையில்
பொங்கல் பொங்குகிறதோ
அதேபோல்
உங்கள் வாழ்க்கையிலும்
வசந்தம் எந்நாளும்
பொங்கட்டும் !
வருடம் முழுவதும்
பலநூறு
நாட்கள் இருந்தாலும்
நம்பசியாற
உணவளிக்கும்
உழவனை நினைக்கவும்
போற்றவும்
கடவுள் நமக்கு
கொடுத்த நன்னாலே
தைப்பொங்கல்
திருநாளாம்
இத்திருநாளில்
உழவுக்கு உயிரளிக்கும்
உன்னத உழவனை
போற்றுவோம் ! போற்றி வணங்குவோம் !
0 Comments