Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

English Grammar Parts Of Speech In Tamil , Learn Types Of Nouns With Examples In Detail In Tamil, தமிழ் வழி ஆங்கிலம் | brightboard.net | MOON BOSS

         ENGLISH GRAMMAR PARTS OF SPEECH IN TAMIL WITH RULES AND EXAMPLES


English Grammar Parts Of Speech In Tamil brightboard.net



          English grammar proficiency is a very important skill needed for all the aspirants of English learning, without proper knowledge on English grammar we can not use English for speaking and writing fluently. So in this lesson you can learn about parts of speech Topics, Noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection.
In this video you can learn Noun and it's type with some basic examples with Tamil meanings !

PARTS OF SPEECH - ஆங்கிலம் பேச்சின் கூறுகள்
ஆங்கிலம் கற்றுக் கொண்டு திறம்பட பேசவும் எழுதவும் விரும்புபவர்களுக்கும் ஆங்கிலம் போதித்தல் பணியை செய்பவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பிற்காக போட்டித் தேர்வுகளுக்காக தங்களை தயார் படுத்தி கொண்டிருப்பவர்களுக்கும் மற்றும் அனைவருக்குமே ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாவிற்கு பதில் எழுதவும் பதில் கூறவும் அவசியம் ஆங்கிலத்தில் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான பாடப்பகுதி ஆங்கில பேச்சின் கூறுகள் அல்லது ஆங்கிலத்தில் PARTS OF SPEECH என்றழைக்கப்படும் பகுதிகளாகும்.
ஏனெனில் ஆங்கிலம் பயில்வோருக்கு அவசியம் ஆங்கிலப் பேச்சின் கூறுகள் பற்றிய அறிவு மிகவும் அவசியம். இல்லையெனில் குறிப்பிட்ட வாக்கியத்தை எப்படி அமைக்க வேண்டும் எந்த வார்த்தை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் ஒரு வார்த்தையையும் மற்றொரு வார்த்தையையும் இணைக்க எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்,பெயர்ச்சொல், வினைச்சொல் போன்றவற்றையும் மற்ற கூறுகளையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் போன்ற அனைத்து விவரங்களையும் நமக்கு அளிக்கக்கடியது இந்த ஆங்கிலப் பேச்சின் கூறுகள் (Parts of Speech) ஆகும்.

PARTS of SPEECH ன் உள்ளடக்கம்

1) NOUN - பெயர்ச்சொல்
2) PRONOUN -பிரதி பெயர்ச்சொல்
3) VERB - வினைச்சொல்
 4) ADJECTIVE -பெயர் உரிச்சொல்
5) ADVERB. - வினை உரிச்சொல்
6) PREPOSITION - முன்னிடைச்சொல்
7) CONJUNCTION - இணைப்புச் சொல்
8) INTERJECTION - வியப்பிடைச்சொல்
 
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு வகைகளும் ஒவ்வொரு தனிப்பட்ட காரணங்களுக்காக வாக்கியங்களில் ஆங்கில பயன்பாட்டின் போது பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலத்தின் பயன்பாடு இந்த ஆங்கிலப் பேச்சின் கூறுகளை நம்பியே பெரும் பங்கு உள்ளது.நமது வலைப்பக்கத்தில் இனிவரும் காலங்களில் இந்த ஆங்கிலப் பேச்சின் கூறுகளை பற்றி ஒவ்வொன்றாக அவற்றின் தன்மையையும், அதன் பயன்பாட்டையும்,அதன் வகைகளையும் ஒவ்வொன்றாக விளக்கத்துடன் உதாரணங்களுடன் காண இருக்கின்றோம்.


தற்போது இந்தப் பதிவில் PARTS OF SPEECH ன் வகைகளில்
முதலாவதாக வரக்கூடிய NOUN என்று அழைக்கக்கூடிய  
பெயர் சொல்லைப் பற்றியும் அதன் விளக்கத்தையும் அதனுடைய வகைகளையும் பார்க்க இருக்கின்றோம்.

NOUN 

What is a noun? 
Noun is a naming word, it used to name a person, Place, things or an idea.

Person - Pranav
Place - Chennai
Things - Gold
Idea - Kindness

Why Do We Use The Nouns?

நம்மை சுற்றியுள்ள இந்த உலகமானது முழுவதும் பொருட்களால் அதாவது மனிதர்களாலும் ,இடங்களாலும்,பொருட்களாலும் நிரம்பியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை அடையாளம் காண நாம் அவற்றை பேரிட்டு அழைக்கின்றோம் அதோடு நமக்கு சரியான பயன்பாட்டிற்காகவும் புரிதலுக்காகவும்  சுற்றியுளள பொருட்களையும் பல்வேறு வகைகளாக பிரிக்கின்றோம். அவ்வாறு வகைப் படுத்துவதன் மூலம் அவற்றை பயன்படுத்துவதற்கும் இனம் காண்பதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும். ஆங்கிலத்தில் Noun-பெயர்ச்சொல்லை கூட நாம் அந்த வகையிலேயே வகைப்படுத்துகின்றோம்.



Types of nouns

1-Common Noun
2-Proper Noun
3-Concrete Noun
4-Abstract Noun
5-Countable Noun
6-Uncountable Noun
7-Collective Noun
8-Compound Noun

 
1-Common Noun
        Common Noun contains any class of person, place or things without referring anything particular.
(எந்த ஒரு நபரையும் பொருளையும் இடத்தையோ குறிப்பிட்டுச் சொல்லாமல் பொதுவாக குறிப்பது Common Noun ஆகும்.)

Examples : Boys, table, students, vegetables ,etc


2-Proper Noun
        Proper noun identifies and refer a particular person place are things.
(எந்த ஒரு நபரையோ பொருளையோ அல்லது இடத்தையோ குறிப்பிட்டுச் சொல்லும் சொல் Proper Noun என்று அழைக்கப்படுகிறது)

EXAMPLES : Murugan, London, etc 


3-Concrete Noun 
         All all the physical things exits in the world that can see touch and feel its presence is called as concrete noun.
(இந்த உலகிலுள்ள பொருட்களில் எவற்றிற்கெல்லாம் உருவம் உள்ளதோ எவற்றை நம்மால் கண்ணால் பார்த்தும்,தொட்டும் ,புலன்களால் உணர்ந்தும் அறிய முடியுமோ அவற்றை Concrete noun என்கிறோம்.)


EXAMPLES : Tree, Table, chalk piece, peacock, etc


4-Abstract Noun
        The things that can not be identified by touching or feeling and don't have any identical physical appearance is called as Abstract Noun.
(இவ்வுலகில் எவற்றுக்கெல்லாம் உருவம் இல்லையோ, எவற்றை நமது கண்களால் பார்த்ததும், தொட்டும், புலன்களால் உணர்ந்ததும் அறிய முடியாதோ அவற்றை Abstract Noun என்கிறோம்.)

Examples : Love, sympathy, confusion, valour,etc


5-Countable Noun
           The things, person and place that can be counted in this world is called as countable noun.
(இவ்வுலகம் முழுவதும் பொருட்கள், மனிதர்கள் மற்றும் இடங்கள் என்பவற்றால் சூழ்ந்துள்ளது. இவற்றில் எவற்றையெல்லாம் நம்மால் என்ன முடியுமோ அவற்றை  Countable Noun என்கிறோம்.)


Examples : coin, country, man, house, books, etc



6-Uncountable Noun
          The things that cannot be counted is called as uncountable noun.
(இந்த உலகில் உள்ள பொருட்களில் எவற்றையெல்லாம் எண்ணிக்கை செய்து நமது எண்ணிக்கைக்குள் கொண்டுவரமுடியாதோ அவற்றை  Uncountable Noun என்கிறோம்.)

  Examples : Water, Sand, Honesty etc 


7-Collective Noun
       It names the group of persons, places and things.
(மனித குழுக்களையும், இடத்தின் குழுக்களையும், மற்றும் பொருட்களின் குழுக்களையும் குறிப்பிடும் பெயர்ச்சொல்லிற்கு Collective Noun என்று பெயர்)


Examples : a flock of sheep, a bunch of keys, a school of soldiers etc



8-Compound Noun
         A noun that is created by joining two separate words together or more than two words together to make a noun is called as Compound Noun.
(இரண்டு தனிப்பட்ட பொருள் உடய வார்த்தைகளை ஒன்றாக இணைத்து அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட வார்த்தைகளை ஒன்றாக இணைத்து உருவாக்கும்
 புதிய  சொல்லுக்கு  Compound Noun என்று பெயர்.)


Examples :Classroom, riverbed, blackboard, etc



PARTS Of SPEECH ல் Noun மற்றும் TYPES OF NOUNS பாடத்தின் சில முக்கியமான உதாரணங்களுடன் கூடிய மிகவும் பயனுல்ல வீடியோ பதிவை இங்கே காணலாம் !
இதற்கடுத்து தலைப்புகள் உள்ளடக்கிய பதிவுகளை நமது இன்றைய பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிடுவோம் ! நன்றி 

Post a Comment

0 Comments