BEST ENGLISH PROVERBS WITH TAMIL MEANINGS AND EXPLANATION
அற்புதமான சில ஆங்கில பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Proverbs In Tamil And English With Meanings
PROVERB அல்லது பழமொழி என்று இன்று நாம் நமது தினசரி வாழ்வில் பயன்படுத்தும் இந்த மக்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட வரிகள் ஆனது ஏதோ வெறும் தமிழர்களுக்கு மட்டுமோ, அல்லது இந்தியர்களுக்கு மட்டுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டவருக்கும் மட்டுமோ பயன்பாட்டில் இருந்தது என்று சொல்லிவிட முடியாது. உலகில் நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்தே இதன் வளர்ச்சி வெவ்வேறு நிலைகளில் உலக மக்களிடையே பரவி கிடந்துள்ளது. இன்று நாம் நம் வாழ்வில் பெரும்பாலும் பயன்படுத்தும் பழமொழிகள் proverbs அனைத்துமே ஏதோ குறிப்பிட்ட எதுகை மோனை நயத்திற்காக அந்தந்த மொழி பேசும் மக்களால் எழுதப்பட்ட வெறும் சொற்களால் ஆன வரிகள் கிடையாது.
இன்று நாம் பயன்படுத்தும் பயன்பாட்டிலுள்ள இந்த பழமொழிகள் வெவ்வேறு மொழி பேசுபவரிடம் இருந்தும், வெவ்வேறு நாட்டு மக்களிடம் இருந்தும் மொழி பெயர்க்கப்பட்டு அவரவர் விரும்பிய மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பழமொழிக்குல்லும் உயிரோட்டமான கருத்துக்களும் ஆழமான நம் முன்னோர்களின் ஆளுமையும், அறிவும் அவர்கள் தங்கள் வாழ்வின்அனுபவத்தால் கண்டறிந்த உண்மைகளும் அடங்கியுள்ளது. ஆகவே பழமொழிகள் என்பது உயிரோட்டமான உண்மைகள் பொதிந்த ஒரு உன்னதமான பொக்கிஷமகும்.
இன்றைய காலகட்டத்தில் நவீன கணினி யுகத்தின் பயனாகவும் செல்பேசிகளின் பயன்பாட்டாலும், அவற்றின் ஆளுமை அதிகரித்து வருவதன் காரணத்தாலும் இந்த உன்னத பழமொழிகளை பயன்படுத்தும் போக்கும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே உள்ளது, இந்த உன்னதமான பழமொழிகளின உட்கருத்தை அறிந்தவர்கள் மிகவும் குறைவே,நம் முன்னோர்கள் பழமொழிகளை அதிகமாக பயன்படுத்தினர் அதை நம்மால் காண முடிந்தது,அவர்கள் பேசும்போது உதாரணத்திற்காக எதையேனும் குறிப்பிடுவதற்காக இந்த பழமொழிகளை மேற்கோள் காட்டுவது வழக்கம். ஆனால் இப்போது அத்தகைய பழமொழிகளை பேசும்போது பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவே. இணையத்தின் வளர்ச்சியும் பல்வேறு விதமான வசதிகளும் நமக்கு எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை வழங்கவில்லை.
உண்மையில் செல்பேசியின் வரவின் காரணமாக நமது நினைவுத்திறன் பெரும் பங்கு குறைந்து வருகிறது உதாரணத்திற்கு நமது செல்போனின் என்னையோ அல்லது நமக்கு வேண்டியவரின் என்னையோ நாம் செல்போனில் சேமித்து வைக்கிறோம் அதனால் எதற்காக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இன்னும் பல லட்சம் பேர் உண்டு. நிலைமை இப்படி மாறிக் கொண்டு வரும்பொழுது மனிதனின் மூளையும் அதன் செயல்திறனும் இந்த நவநாகரீக உலகத்திற்கு ஏற்பவே பரிணாம வளர்ச்சியை பெற்றுவரும் அதோடு இன்னும் குறிப்பிட்ட காலத்திற்குள் மனிதன் அனைத்திற்கும் கருவிகளை நம்பி இருப்பதால் அவன் உடல் இயக்கமானது குறைவதோடு அறிவாற்றலும் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் செல்லாமல் நின்றுவிடும் அபாயமும் உள்ளது. ஆனால் நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் படித்த தங்களது கையளவு கல்வியை வைத்துக் கொண்டே பெரும்பாலான உலக அறிவை மிக சுலபமாக புரிந்து கொண்டு, நினைவில் வைத்து பேச முடிந்தது ஆனால்
இன்றைய உலகில் உள்ள நம்மால் எதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும் அல்லது அவர்களைப் போன்ற பரந்த அறிவும் நினைவாற்றலும் கொண்டவர்களாகவும் இருக்க முடியவில்லை.
நம் முன்னோர் பயன்படுத்திய பழமொழிகளில் பல கருத்துக்கள் இருந்தது என்று நாம் பார்த்தோம், உண்மையில் அக்கருத்துக்களை தேவையான போது நம் முன்னோர்கள் தேவைப்படுவோருக்கு சுட்டிக்காட்டி அவர்களை நல்வழி படுத்தியதும் நிறையவே உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த பழமொழிகள் பலநூறு உண்டு. என்றாலும் இந்தப் பதிவில் நாம் வாழ்வில் அதிகமாக அறிந்த பயன்படுத்தும் சில அற்புதமான ஆங்கில பழமொழிகளையும் அதன் தமிழ் விளக்கத்தையும் காண இருக்கின்றோம்.
SPOKEN ENGLISH தமிழ் வழி கற்க !
1 ) Health Is Wealth
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
விளக்கம் : இந்த ஆங்கிலப் பழமொழியை படித்த இதன் தமிழ் அர்த்தத்தை படித்தால் கூட போதும் இது நமது வாழ்வின் மிக உன்னதமான ஒரு கருத்தை நமக்கு புரிய வைத்துவிடும். ஏனெனில் இன்றைய வாழ்வில் பெரும்பாலும் அனைவருமே பணம், வசதியான வாழ்க்கை, வீடு மற்றும் வாகனங்கள் என்று சுகபோகமாக வாழ்வதையே வசதியாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள், அதற்காக அவர்கள் தங்களுடைய உடலை எந்த நிலைக்கும் வருத்திக் கொள்ள தயங்குவதே கிடையாது! அதன் விளைவு என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் மிக சிறிய வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு தங்கள் வாழ்வையே இழந்து விடுகிறார்கள். அவர்களால் அதன் பிறகு என்னதான் பணம் பொருள் இருந்தாலும் அவர்களின் உடல் நலம் கெட்டு விட்டதால் அவற்றை அனுபவிக்கவும் மேலும் பெருக்கவும் மகிழ்ச்சியாக வாழவும் முடிவதில்லை. ஆனால் நோயில்லாமல் இருப்பவருக்கு பணம் பொருள் குறைவாக இருந்தாலும் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் அதே வேளையில் தாங்கள் விரும்பிய செயலை உடல் நலனுடன் இருப்பதால் செய்து வாழ்வில் இன்புற்று இருக்க முடியும். எனவே அனைத்து சுகபோக பொருட்களும் நல்ல உடல்நலம் இல்லாவிட்டால் பயனற்றதாகிவிடும்.அனைத்து செல்வங்களிலும் மேலானது நம் உடலை அதனை நோய் இல்லாமல் பார்த்துக் கொள்வதே நமக்கு உள்ள மிகப்பெரிய சொத்தாகும், எனவேதன்
நம் முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறி வாழ்ந்துள்ளார்கள்.
ஆங்கில இலக்கணம் English Grammar கற்க
2 ) All That Glitters is not gold
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
விளக்கம் : இது நம் முன்னோர்கள் அளித்த மிகச்சிறந்த பழமொழிகளில் ஒன்று. இதில் நாம் மனிதர்களின் புறத்தோற்றத்தை வைத்து அவர்களின் உள் அழகை அல்லது உண்மையான குணத்தை எடைபோட முடியாது என்பதை அன்றே அறிந்து இந்த உன்னதமான பழமொழி தந்துள்ளனர். அதற்கு உதாரணமாக தங்கத்தையும் உதாரணத்திற்கு கூறியுள்ளனர்.ஆம் உண்மையில் தங்கம் பார்ப்பதற்கு நல்ல அழகாக மினுமினுப்பாக தான் இருக்கும் அதனால் நாம் உற்று நோக்காமல் அதேபோல் தகதகவென்று மினுமினுப்பாக புறத்தோற்றத்தில் தெரியும் ஏதேனும் ஒரு பொருளை இதுவும் தகதகவென வெளிப்புறத்தில் அழகாக இருப்பதால் தங்கம் என்று நம்பிவிட முடியாது அவற்றை நன்கு ஆராய்ந்து உரசிப் பார்த்த பின்பே அது தங்கமா அல்லது தகரமா என்று நம்மால் அறிய முடியும். இதை அறிந்த நம் முன்னோர் நம் வாழ்வில் நாம் பார்க்கும் எந்த மனிதரும் பார்க்க பகட்டாகவும் அழகாகவும் அல்லது சிரித்த முகத்துடன் பேசுகிறார் என்பதற்காக அவர்களை நாம் தங்கத்தைப் போன்ற நல்ல குணம் கொண்டவர்கள் என்று புறத்தோற்றத்தை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது ஏனெனில் புறத்தோற்றம் எப்போதும் ஏமாற்ற கடியது புறத்தோற்றத்தை வைத்து நம்மால் பிறரின் மன ஓட்டத்தையும் அவரது குணத்தையும் ஒருபோதும் கனிக்கவே முடியாது. இந்த உண்மையை அறிந்த நம் முன்னோர் நம்முள் பலபேர் புறத்தோற்றத்தை வைத்து அதிக அளவில் நம்பி ஏமாந்து விடுவதால் அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த பழமொழியை அளித்துள்ளனர் உண்மையில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
English Vocabulary கற்றுக்கொள்ள
3-Honesty is the best policy
நேர்மையே சிறந்த கொள்கை
விளக்கம் : இந்த பழமொழியின் உண்மையையும் உன்னதத்தையும் உணராதவர்கள் இருக்க முடியாது என்று சொல்லலாம் ஏனெனில், நாம் நம் வாழ்வில் அன்றாடம் காணும் மனிதர்களின் பல்வேறு விதமான மனிதர்களை சந்திப்போம் அவர்களில் ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே நமக்கு நம்பிக்கையும் மரியாதையும் எப்போதும் இருக்கும் அதுவே வேறு சிலர் மீது அவ்வாறான நம்பிக்கை நமக்கு இருப்பதில்லை. குறிப்பிட்ட நபர் மீது மட்டும் நமக்கு நம்பிக்கையும் மரியாதையும் இருப்பதற்கு காரணம் அவர்கள் நேர்மையானவர்களாகவும் பொய் பேசாதவர் களாகவும் உண்மையை சொல்பவர்கள் ஆகவும் இருப்பார்கள். ஆனால் நேர்மையாக இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகம் இல்லை என்று சொல்பவர்களும் உண்டு! ஆனால் நேர்மையாக இருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் தான் பேசிய பேச்சையோ செயலையோ மற்றவர்களுக்காகவும் சூழ்நிலைகளுக்காகவும் மாற்றி மாற்றி பேச வேண்டிய அவசியம் இருப்பதில்லை, மேலும் நேர்மையானவர்களுக்கு அங்கீகாரமும் சிறப்பும் காலதாமதமாக வேண்டுமானால் வரலாம் ஆனால் நிச்சயமாக அவர்களின் நேர்மையின் பரிசை அவர்கள் வாழ்வில் நிச்சயம் பெறுவர், ஆனால் நேர்மை இல்லாதவர்களுக்கு இந்த உன்னத நிலை வாழ்வில் பெரும்பாலும் கனவாகவே இருக்கும் அப்படியே கிடைத்தாலும் அதிலும் அவர்களால் திருப்தி அடைய முடியாது அல்லது அந்த புகழும் அவர்களிடம் நீண்ட நாட்களுக்கு தங்கியும் இருக்காது ஆனால் நேர்மையான அவர்களுக்கு அவர்களது பெயரும் புகழும் அவர்கள் மறைந்தாலும் எப்பொழுதும் மறையாது நிலைத்து நிற்கும்! நாமும் நம் வாழ்வில் நேர்மையாக இருப்போம் வாழ்வில் பல நலன்களையும் பெறுவோம்!
பயனுள்ள பொது அறிவு வினா விடைகள் GK
4) Look before you leap
ஆழம் தெரியாமல் காலை விடாதே !
விளக்கம் : நமது முன்னோர்கள் தங்களது வாழ்வில் உண்மையான அனுபவத்தின் மூலம் கண்டு உணர்ந்து நமக்கு அளித்துள்ள மற்றுமொரு மிகச்சிறப்பான பழமொழி ஆழம் தெரியாமல் காலை விடாதே ஆகும்! இந்தப் பழமொழியின் மேலோட்டமான அர்த்தம் வேண்டுமானால் ஏதோ நமது முன்னோர்கள் நம்மை குளம், குட்டை, ஏரி,ஆறு,அல்லது பள்ளம் போன்றவற்றில் அவற்றின் இடத்தை முன்கூட்டியே அறிந்து அறியாமல் காலை விடாதே அல்லது இறங்காதே என்பது பற்றி மட்டும் அறிவுறுத்துவதாக நமக்குத் தோன்றலாம்! இந்தப் பழமொழியின் மூலம் அவர்கள் கூற நினைப்பது அதுவல்ல !என்னால் மட்டும் ஏன் வெற்றி பெற முடியவில்லை, நான் நன்றாகத்தான் உழைக்கிறேன், இரவு பகல் பாராமல் கடினமாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு தகுந்த அங்கீகாரமும் வளர்ச்சியும் இல்லை என்று கூறுவதை கேட்டிருப்போம்! பெரும்பாலும் தனக்கு எதில் முழு ஈடுபாடு உள்ளதோ, அதோடு எந்த விஷயத்தில் தனக்கு அதிக தன்னம்பிக்கையும் ,அறிவும் ,ஈடுபாடும், விருப்பமும், அதன் நன்மை, தீமை என்ற அனைத்து தகவல்களையும் அறிந்தவர்கள் அந்த செயலை செய்யும் பொழுது நிச்சயமாக சிறு அளவில் செய்தாலும் அவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.ஆனால் தான் ஈடுபடுகின்ற அல்லது தான் படிக்கின்ற அல்லது தான் செய்கின்ற தொழிலைப் பற்றியும் கல்வியைப் பற்றியும் எந்தவிதமான ஆழ்ந்த அறிவும் இல்லாமல் நுனிப்புல் மேய்வது போன்று தனக்கு தெரிந்த அரைகுறை அறிவோடு எந்த விஷயத்தையும் செய்யத் துவங்கும்பது நிச்சயம் அத்தகைய செயல்கள் தோல்வியிலேயே முடிகிறது. வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும் நன்கு பொருந்தும். இதனை கண்கூடாக தங்கள் வாழ்வில் உணர்ந்த நம் முன்னோர் நாம் அவ்வாறு நாம் ஈடுபடக்கூடிய துறையைப் பற்றி சரியான புலமை இல்லாமல் எதையும் ஏதோ நானும் செய்ய வேண்டுமென்ற என்னத்திற்காக செய்து தோல்வி அடையாமல் தான் செய்ய இருக்கின்ற செயலைப் பற்றி முழுமையான தகவலை அறிந்து நன்கு செய்து வெற்றியடைய வேண்டும் என்பதையே ஆழம் தெரியாமல் காலை விடாதே என்ற பழமொழியின் மூலம் நமக்கு கூறுகின்றனர்!
Abbreviations and Acronyms இங்கே கற்கலாம்
5- A friend in need is a friend indeed
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்
விளக்கம் : ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்! இந்த அதி அற்புதமான பழமொழியை நாம் எந்த சூழ்நிலையிலும் நம் வாழ்க்கையில்பொருத்திப் பார்க்க முடியும் அத்தகைய நமது வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தக்கூடிய பயன்படுத்த வேண்டிய நம் முன்னோர்கள் நமக்களித்த ஒரு முக்கியமான பழமொழி இதுவாகும். ஏனெனில் நாம் நமது வாழ்வில் நிச்சயம் நண்பர்களை பெற்றிருப்போம் அவர்களில் சிலரால் நமக்கு மகிழ்ச்சியான அனுபவங்களும்,வேறு சிலரால் கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கும். ஆனால் நண்பர்கள் என்ற வார்த்தை ஒன்று தான் இருந்தாலும் அவர்களை நாம் எந்த முறையில் தேர்ந்தெடுக்கிறோம் அதோடு அவர்கள் நம்முடன் எந்த விஷயத்திற்காக நட்பை தொடர்கிறார்கள் என்பதில் தான் விஷயமே உள்ளது. இன்றைய காலகட்டத்தில் உண்மையான நட்பு என்பதை (உதாரணத்திற்கு துரியோதனன் கர்ணனின் மகாபாரதத்தை போன்று.) நம்மால் வெகு சிலரிடம் மட்டுமே காணமுடிகிறது ஏனெனில் அதுபோன்ற நட்பு உண்மையான ஆழமான அன்பின் வெளிப்பாட்டால் வந்திருக்கும் அத்தகைய நட்பினை பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி ஆனாலும் துன்பங்கள் ஆனாலும் பகிர்ந்து கொள்வார்கள்,அதோடு தனது நண்பர்களுக்கு ஏதேனும் துன்பம் என்றால் அது தனக்கும் வந்ததாகவே மனதில் எண்ணி அந்த துன்பத்தை நண்பனின் மனதில் இருந்தும் வாழ்க்கையில் இருந்தும் துடைத்து எரியும் வரையில் தனது நண்பனுக்கு பொருளாதார அளவில் உதவ முடியாவிட்டாலும் மனதளவில் அவர்களுக்கு நம்பிக்கையையும், நான் உன்னுடன் இருக்கிறேன் என்ற நம்பிக்கையையும் தருவார்கள், அதோடு நண்மரின் துயர் நிலையிலிருந்து வெளியே மிக விரைவில் கொண்டு வந்து விடுவார்கள். அதோடு வாழ்வின் எல்லா கட்டத்திலும் மாறாது உடன் இருப்பர். ஆனால் வேறு சிலரோ மகிழ்ச்சியான தருணத்தில் மட்டும் உடன் இருந்துவிட்டு அதாவது ஒருவரின் வசதி,அழகு ,பணம், போன்றவற்றால் கவரப்பட்டு அவற்றை நன்கு அனுபவிக்கும் வரை நட்பு பாராட்டி விட்டு, அந்தப் பொருட்கள் தனது நண்பனிடம் இல்லாமல் போனாலும்,அல்லது தனது நண்பன் ஏதேனும் இக்கட்டில் மாட்டிக் கொண்டு துன்பப்படும் போதும், தனது நண்பர்களுக்கு உறுதுணையாக இல்லாமல் மனதளவில் நம்பிக்கையும் கொடுக்காமல் அவர்களின் கண்ணெதிரில் கூட படாமல், அவர்களது நண்பர்களுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்பது போல் தனது நண்பர்கள் துன்பப்படும்போது ஒதுங்கிவிடும் நண்பர்கள் நிறைய பேர் உண்டு. இதையெல்லாம் நன்கு அறிந்த நம் முன்னோர் நமக்கு உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காணவே தெய்வ வாக்காக சொல்லிய பழமொழி இதுவாகும் அவர்கள் கூற்றுப்படி உன்னால் ஒருசிலருக்கு ஆதாயம் கிடைக்கும் என்ற சமயத்தில் நட்பாக இருந்துவிட்டு உனது கஷ்ட காலத்தில் உன்னை விட்டு ஒதுங்கி இருப்பவர்கள் உண்மையான நண்பர்கள் கிடையாது. ஆனால் உனது ஆதாயம் எதையும் எதிர்பாராமல் உனது அன்பிற்காக நீ கஷ்டப்படும் தருவாயிலும் உனக்கு ஆறுதலாக உன் அருகில் இருப்பவர்களே உண்மையான நண்பர்கள் அவர்களையே நீ வாழ்க்கையில் நண்பர்களாக வைத்துக்கொள்ள வேண்டும் மற்றவர்களை, உனது வாழ்க்கையில் உடன் வைத்துக்கொள்ளக்கூடாது நட்பு பாராட்டவும் கூடாது என்று நமக்கு இந்த பழமொழியின் மூலம் உணர்த்துகிறார்கள்!.
தொடரும்...........
நன்றி மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம்...
0 Comments