Active Voice And Passive Voice In Tamil With Rules And Examples - செய்வினை செயல்பாட்டு வினை! இந்த முறையில் Active and Passive Voice கத்துக்கிட்டா நிச்சயம் எப்பவுமே மறக்காது !
அனைவருக்கும் வணக்கம் !
இந்த பதிவில் Active Voice (செய்வினை) and Passive
Voice (செயப்பாட்டு வினை ) பற்றி விரிவாக விளக்கத்துடன் தேவையான உதாரணங்களுடன் பார்க்க இருக்கின்றோம்.
Active Voice என்பதை செய்வினை வாக்கியம் Passive Voice என்பதனை செயப்பாட்டு வினை வாக்கியம் என்றும் அழைக்கின்றோம். பொதுவாக இந்த இரண்டு வினை வாக்கியங்களும் சில அடிப்படை வித்தியாசங்களும் அதற்குரிய பயன்பாடுகளும் உள்ளது. நாம் எந்த சூழ்நிலையில் செய்வினை வாக்கியத்தையும்(active voice), எந்த சூழ்நிலையில் செயப்பாட்டுவினை(passive voice) வாக்கியத்தையும் பயன்படுத்துகிறோம் என்பதனை இனிவரும் உதாரணங்கள் மூலம் தெளிவாக காண இருக்கின்றோம்.
EX:
They are watching television (Active Voice)
Television is being watched by them (Passive Voice)
தற்பொழுது நீங்கள் மேலே பார்த்த இரண்டு உதாரணங்களிலும், முதல் வாக்கியம் செய்வினை வாக்கியம் என்றும் இரண்டாம் வாக்கியம் செயப்பாட்டு வினை வாக்கியம் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் உங்களுக்கு சில சந்தேகங்கள் வரலாம் ஏனெனில் செய்வினை வாக்கியம் என்பது
They are watching television (Active Voice) என்றும், செயப்பாட்டுவினை வாக்கியம் என்பது
Television is being watched by them (Passive Voice) ஆகவும் அமைந்துள்ளதே என்றும்.
செய்வினை வாக்கியம் மற்றும் செயப்பாட்டுவினை வாக்கியத்தில், வாக்கியங்களை ஒன்றிலிருந்து மற்றொன்றாக பிரிக்கவும் அவற்றினை அடையாளம் காணவும், ஒரு குறிப்பிட்டப குதிகள் அவற்றில் இடம் பெறவேண்டும்.
They are watching television (Active Voice) இந்த வாக்கியத்தை வாக்கியத்தின் பகுதிகளாக நாம் பிரிக்கும்போது நமக்கு பின் வரும்படியான வாக்கியத்தின் பகுதிகள் கிடைக்கும்.
They are watching television (Active Voice) .
subject. Verb object
அதேபோல் செயப்பாட்டு வினை வாக்கியத்தை
Television is being watched by them (Passive Voice)
நாம் பகுதிகளாக பிறக்கும் போது....
Television is being watched by them (Passive Voice) .
subject Verb object
என்றும் நமக்கு கிடைக்கின்றது.
எனவே செய்வினை வாக்கியத்தில் கட்டாயமாக ஒரு Subject+verb+object இருக்க வேண்டும் என்பது கட்டாயம். சில நிகழ்வுகளில் subject ஆனது மறைந்தும் வரலாம் ஆனால் நிச்சயமாக object இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அந்த வாக்கியங்களில் object இடம் பெறாவிட்டால் அவற்றை செய்வினை மற்றும் செயப்பாட்டு வினை என்று கருதமுடியாது.அவ்வாறு செய்வினையில் இருந்து செயப்பாட்டுவினைக்கும் செயப்பாட்டுவினையில் இருந்து செய்வினைக்கும் மாற்ற object ஆனது மிகவும் அவசியம்.
தற்போது மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்த உதாரணங்களைக் கொண்டு செய்வினை வாக்கியத்தில் இருந்து செயப்பாட்டுவினைக்கும்,செயப்பாட்டுவினை இலிருந்து செய்வினைக்கும் எவ்வாறு மாற்றுவது என்பதை
காணலாம்.
They are watching television (Active Voice)
இந்த செய்வினை வாக்கியத்தை நாம் செயப்பாட்டு வினையாக மாற்ற முதலில் இந்த வாக்கியத்தின் பகுதிகளை (SUBJECT+VERB+OBJECT) குறித்துக் கொள்ள வேண்டும்.
They are watching television (Active Voice) .
subject. Verb object
இப்பொழுது இந்த செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டு வினையாக மாற்ற, முதலில் வாக்கியத்தின் object தன்னை செயப்பாட்டுவினையின் subject ஆக கொண்டு வர வேண்டும்
Television..............
பிறகு செய்வினை வாக்கியத்தில் உள்ள வினைச் சொல்லுக்கு ஏற்ப, அதோடு செய்வினை வாக்கியத்தில் object ஆக இருந்து செயப்பாட்டுவினை வாக்கியத்தில் subject ஆக மாறும் வார்த்தையின் தன்மை அதாவது அந்த வார்த்தையானது ஒருமையில் (singular) உள்ளதா அல்லது பன்மையில் (plural) உள்ளதா என்பதைப் பொறுத்து வினைச்சொல்லில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
மேலே தந்துள்ள வாக்கியத்தில் Television என்பது ஒருமையில் இருப்பதால் அதற்குரிய வினைச் சொற்களை பயன்படுத்த வேண்டும். நமக்கு கொடுத்துள்ள வாக்கியம் present continuous tense என்பதால் செயப்பாட்டுவினை வாக்கியமும் present continuous tense ஆகவே அமையும் ஆனால் செயப்பாட்டுவினை வாக்கியத்தில்செய்யும் வினை க்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வினைச் சொற்களில் அதற்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி எழுதவேண்டும் எனவே. அதேபோல் செய்வினை வாக்கியத்தில் வந்த main verb+ing (watch+ ing= watching)
வினைச்சொல் watch ஆனது செயப்பாட்டுவினைக்கு
மாற்றும்பது அதனுடைய Past Participle (V3) அமைப்பினை
(Watch - watched- watched) எடுத்துக்கொள்ளும்.
____________________________________________________________________
(செய்வினை மற்றும் செயப்பாட்டுவினை வாக்கியத்தில் Regular verb மற்றும் irregular verb மற்றும் அவை எவ்வாறு
Base verb-past tense-past participle என்று மாறுகின்றது என்ற தகவலை அறிந்திருப்பது மிகவும் அவசியம் எனவே
IRREGULAR VERBS LIST -1 அறிய CLICK HERE
IRREGULAR VERBS LIST -2 அறிய
CLICK HERE
REGULAR VERBS LIST -2 அறிய CLICK HERE )
____________________________________________________________________
மேலே குறிப்பிட்ட வழிமுறைகளின் படி செய்வினையை செயப்பாட்டு வினையாக மாற்றும்போது நமக்கு பின்வருமாறு பெயர்ச்சொல் அடுத்து வினைச்சொல் இவ்வாறு அமையும்...
Television is being watched.................
இங்கு subject (Television), அடுத்து வினைச்சொல் is (helping verb) வந்துள்ளது மேலும் இது present continuous tense என்பதால் being வந்துள்ளது அதோடு செய்வினை வாக்கியத்தில் இருந்த watching =watch (main verb) + ing
Main verb Watch ஆனது இங்கே அதனுடைய V3 past participle watched என்று மாறுகிறது
Television is being watched...........
தற்பொழுது செய்வினை வாக்கியத்தில் subject (They) ஆக இருந்ததை தற்போது செயப்பாட்டு வினையாக மாற்றுவதால் அதனை Object ஆக மாற்ற வேண்டும். மேலும் அவற்றை செயப்பாட்டுவினை வாக்கியத்தில
எழுதும்போது போது இணைப்புச் சொல்லாக (conjunction) by அந்த பிரதிி்பெயர்சொல்லிற்கும்(pronoun செய்வினை வாக்கியத்தில் subject(they) ஆக இருந்து தற்போது செயப்பாட்டு வினை வாக்கியத்தில் object (them) ஆக மாற்றுவது)் வினைச்சொல்சொல்லிற்கும் இடையில் எழுத வேண்டும் .
Television is being watched by them ( Passive Voice)
எனவே மேற்காணும் இந்த வாக்கியமே நாம் பார்த்த செய்வினை வாக்கியத்திற்கான செயப்பாட்டு வினை வாக்கியம் ஆகும்.அதோடு செய்வினை மற்றும் செய்ய செயப்பாட்டுவினை வாக்கியத்தில் pronoun எப்படி Active Voice ல் இருந்து , Passive voice கும்,Passive voice ல் இருந்து
இதே முறையை பயன்படுத்தி நாம் எத்தகைய செய்வினை வாக்கியங்களையும் செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் எளிதாக மாற்றிவிட முடியும்.
செய்வினை மற்றும் செயப்பாட்டுவினை வாக்கியங்களை கற்றலில் இருந்து நாம் அறிந்து கொள்ளும் சில விஷயங்கள் !
ACTIVE VOICE : They are watching television
PASSIVE VOICE :Television is being watched by them
மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களில் இருந்து நாம் சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம் அவை.
*செய்வினை வாக்கியத்தில் செய்பவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது எனவே செய்வினை வாக்கியத்தில் வினையை அல்லது செயலை செய்பவர் (They) வாக்கியத்தில் முதலில் வருகிறார்.
*செய்வினை வாக்கியத்தில் செயலைச் செய்பவருக்கு முக்கியத்துவம் தரப்படுவதால் செய்யும் செயலானது (watching television) வாக்கியத்தில் அடுத்த நிலையில் வருகிறது.
*செய்வினை வாக்கியத்தில் எந்தவிதமான கூடுதலான இணைப்புச் சொற்களை (by), helping verbs (is,am,are,was,were etc) பயன்படுத்துவதில்லை.
*செயப்பாட்டுவினை வாக்கியத்தில் செய்வினையை போன்று ஒரு செயலைச் செய்பவருக்கு (they) முக்கியத்துவம் தராமல் அவர் செய்யும் செயலை (watching television) முதன்மைப்படுத்தி வாக்கியமானது தொடங்குகிறது.
*செயப்பாட்டுவினை வாக்கியத்தில் வினைச் சொற்களில் காலத்திற்கு ஏற்ப(tenses) மற்றும் செய்பவரின் தன்மைக்கு ஏற்ப (singular or plural) வினைச் சொற்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. அதோடு வினைச் சொல்லுக்கு ஏற்ப Auxiliary verbs (is,am,was,were,etc) தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது.
*மேலும் செயப்பாட்டு வினையில் பிரதி பெயர்ச்சொல்லை (pronoun) வாக்கியத்தில் பிற பகுதிகளுடன் இணைக்க இணைப்புச் சொல் (conjunction) by பயன்படுத்துகின்றோம்.
எனவே மேலே பார்த்த உதாரணத்திலிருந்து செய்வினை மற்றும் செயப்பாட்டு வினை வாக்கியமாக மற்றும் Rules ஆனது tense வகையைப் பொறுத்து மாறுபடும்.
RULES FOR PRESENT CONTINUOUS TENSE IS
ACTIVE VOICE PASSIVE VOICE
SUBJECT + is/am/are + object + is/am/are + being Verb1 + ing + object verb3 + by + subject
அடுத்த பதிவில் நாம் எவ்வாறு செயப்பாட்டு வினை செய்வினை ஆக மாற்றுவது என்பதை உதாரணங்களுடன் விரிவாக காணலாம். நன்றி !
👉 PASSIVE VOICE TO ACTIVE VOICE பதிவினை காண CLICK HERE
0 Comments